நவ திருப்பதிகளும், திருச்செந்தூர் தலமும் அருகில் உள்ளன. காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஒரு நாள் இவர் தனது சகோதரர் கருத்தப் பாண்டியனை அழைத்து அவருக்கு
நல்லாசி கூறி, "" தம்பி! நான் 1908, ஜூலை 28 ஆடி அமாவாசை பகல் 12 மணிக்கு
இறைவன் திருவடி சேருவேன். ஏரலுக்கு தென்மேற்கில் தாமிர பரணி ஆற்றின் வடகரை
ஓரமாக நிற்கும் ஆலமரத்தின் அருகில் தன்னை சமாதியில் வைத்து மலர்களும்
மண்ணும் போட்டு மூடுங்கள். அப்போது மேலே கருடன் வட்டமிடும்,'' என்று
கூறினார். அதன்படியே அவர் இறைவனை அடைந்தார். அவர் கூறியபடியே அவரது
தம்பியும் செய்தார். அன்று முதல் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை
நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார்.
குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து
செல்கிறார்கள். பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள்.
http://www.valaitamil.com/temples.php
தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி http://aannmegam.blogspot.in/2012/01/blog-post_5120.html
No comments:
Post a Comment