சிறியாநங்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட
விஷக்கடிக்கு இது நல்ல மருந்து. ஆனால் இன்றைக்கு நிலவேம்பு... நிலவேம்பு
என்று ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த நிலவேம்பும்,
சிறியாநங்கையும் ஒன்று என்பது பலருக்கு தெரியாது. இதன் தாவரப்பெயர்
Andrographis paniculata. அதிலும் பொதுவாக நங்கையில் பல்வேறு வகைகள் உள்ளன.
சிறியா நங்கை, பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு
நங்கை, வெண் நங்கை, வசியா நங்கை, செந் நங்கை என பல நங்கைகள் இருந்தாலும்
சிறியா நங்கை மற்றும் பெரியா நங்கையே நம்மில் பயன்படுத்தப்படுகிறது.
மிளகாய்ச்செடியின் இலையைப்போலவே சிறியாநங்கை காணப்படும். இதன்
முழுச்செடியையும் (வேர் முதல் விதை வரை) நிழலில் காய வைத்து பிறகு வெயிலில்
காய வைத்து இடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால் ஸ்பூன்
அளவு காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் சேர்த்து சாப்பிட வேண்டும்.
இதேபோல் மாலையிலும் (இருவேளை) 48 நாள் சாப்பிட்டு வந்தால் நம்மை பாம்போ,
தேளோ கடித்தால் அவை இறந்துபோகும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை
நமக்குள் ஊடுருவி இருக்கும். பொதுவாக சிறியாநங்கை செடியின் இலையை
பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையை கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது.
இந்தநிலையில் சாப்பாட்டை தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்கு
கசப்பாக இருக்கும். வீடுகளின் வேலியில் சிறியாநங்கை செடியை வளர்த்து
வந்தால் பாம்பு எட்டிப்பார்க்காது. அதாவது சிறியாநங்கை இலை மீது பரவி வரும்
காற்று பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால்
பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடுமாம். தினமும் காலையில் சிறியாநங்கை
பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அலர்ஜி
நோய்கள் குணமாகும். இதுமட்டுமல்லாமல் கல்லீரல் நோய்கள், மஞ்சள்காமாலை,
சைனஸ், மலேரியா போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.
ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை,
இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள்,
பாம்புகளை நெருங்க விடாது
கசப்பு மருந்து எனப்படும்
சிறியாநங்கை, பெரியாநங்கை தாவரங்கள் மருத்துவகுணம் நிறைந்தவை. இவை செம்மண்,
கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று
எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள்
ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து
நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள்.
ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின்
1.5 - 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து
விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment