Sunday, August 31, 2014
Make fantastic filter kaapi
The defining characteristics of a good filter kaapi are its
aroma, body and a delectable patina on the palate. Pure coffee - either
Arabica or Robusta - doesn't have body and chicory gives the requisite
body and creaminess that is desired. The roasting, blend and grind of the coffee differs from house to house.
The grind shouldn't be too fine or coarse, only medium; otherwise the
decoction will not have the right consistency.
Ingredients:
Coffee powder, fresh roasted and medium ground; 80% pure coffee + 20 % chicory - 150 gm
Boiled water, brought to 95 degree C - 500 ml
Fresh cow's milk, boiling - 600 ml
Sugar - to taste
Equipment required:
Coffee filter, pan, dabara-tumbler set.
Procedure:
Boil water in a pan.
Wash the interiors of the filter with boiling water in order to make it wet and hot
Using a spoon, pack the coffee powder slightly in the filter.
Sprinkle some water on the coffee. Pour the remaining water gently on
the coffee and close the filter. Let the decoction trickle down for the
next 15 minutes.
Boil fresh milk without adding water or sugar.
Pour 30 ml decoction in a tumbler, add 150 ml milk, 1 tbsp sugar and mix well by pouring back and forth using a dabara.
Saturday, August 30, 2014
chennai food
Mak n Bajji Five minutes from the beach, and five minutes from the temple,
M.A. Kaliesraj and K. Selvarani’s home is perfectly located for bhajjis.
As they quickly hand out freshly fried spicy bread bhajjis along with
tumblers of frothy, fragrant Kumbakonam degree coffee, They’re already selling about 600 bhajjis a day. Open from 3.30 p.m.-8 p.m. Bhajjis: Rs. 10 each. Address: Old No. 30, New No. 58, Nalla Thambi Street, Triplicane.
To order, call: 97908 78377
Akash cool bar The surprise of the day: paneer soda casually served in authentic, old-fashioned, green goli soda bottles at this practical ‘cool bar’ stocked with sweets, cut-mango pickle sachets and ‘cool drinks’, among other things. The shopkeeper here sells the drink for Rs. 7. It’s mildly sweet, gently fizzy and fragrant with the scent of roses. Address: 28, Alangatha Street, Triplicane. Tel: 2844 3021
The kaiyendhi bhavan outside Hindu Senior Secondary School Raja has been frying and selling Mangalore bondas from his cart in the same place since 1988. As he holds out a paper plate filled with four generous bondas, crisp outside and deliciously fluffy inside. Mangalore bondas, he says, were an obvious choice. “No one makes them right in the city.” At Rs. 6 per piece, he makes about 1,200 snacks a day (including medhu pakodas and chilli bajjis.) His secret, he adds, is “fresh oil”. Not selling to hungry students, he quickly adds with a laugh. “Principal told me to open only after school closes, so I start at 5 p.m.” Address: 83, Big Street.
Hema Milk Depot Hemraj, who this shop is named after, moved to Triplicane more
than 40 years ago from Rajasthan. He started out by trying to sell kulfi from
a cycle before realising that he needed a new business plan. Kadai doodh,
a Rajasthani delicacy made with spiced milk simmered in a special iron kadai,
seemed unusual enough to stand out. The neighbourhood still
lines up for glasses of his hot masala milk, which begins with 50 litres and
then slowly thickens and changes colour, getting richer and richer through the
night. A generous ‘half cup’ of milk, laced with cardamom, saffron, almonds and
pistachios, is just Rs. 8, and is served with a flourish of cream on top. The
chatty cooks will also throw in some sugary kova if they like you. Address: 73/35, Pycrofts Road, Triplicane. Tel: 9500513366
Thanigaivelan Inippagam “Our onion pakoda is special,” says Thanigaivelan, as one of his staff heaves a massive tray of knobbly, skilfully browned pakodas, chunky with caramelised onions and places it on the counter. The pakodas, a happy mix of crisp and chewy, have been made the same way for 20 years. Also, people like to buy pakodas and take them to the beach.”Address: 261/3, Pycrofts Road, Bharathi Salai, Narayana Krishnaraja Puram. Tel: 98411 84446
Ratna Café Started in 1948 this Triplicane institution is famous for its sambar, the recipe for which has been reportedly passed down through the years. Old timers who have eaten here for decades know they should ask for ‘sambar idli’ instead of the accepted ‘idli sambar’ format: because over here, the idlis are just a side show. However, do save some space for the ghee smeared podi idlis which are actually better.
Address: 255, Triplicane High Road. Tel: 9150149001
Link’s Traders – Quick Bites & Ice Gola The murukku
sandwich is a Chennai specialty, and no one does it better than Link’s. Tiny
crisp murukkus are slathered with pudina chutney so spicy that it forces you to
buy a bottle of cold water to cool your mouth. Tomatoes, onions and a
ridiculous amount of cheese is added before the entire wobbly construction is
proudly served on a flimsy paper plate. Other favourites here are the corn
canop (canapé?) with cheese and ice golas. Service is fast but the place
is cramped, filled with college kids that stop here for a quick bite before
heading home. Cost: Rs. 30 for a murukku sandwich and Rs. 50 for corn cheese
canop Address: 22, Raja Annamalai Road (Opposite Dharmaprakash Marriage
Hall)
Mehtaa’s Vada Pav The branch of the Sowcarpet Mehtaa’s makes their famous brand of vada pav more accessible. Run by the third generation of the Mehtaa family, the food here is as good as the Sowcarpet branch. An added bonus: there’s even an air-conditioned space where you can savour the chaat they so excel at. Cost: Rs. 20 for the classic vada pav and Rs. 30 for the cheese vada pav Address: 22/9, Raja Annamalai Road
Ashok Pan House For school students in the area, this is a frequent haunt. Thankfully, by late evening, the crowd has thinned. The tiny shop has been around for 25 years and specialises in sandwiches, paan and Masala ThumsUp. The cheese bhujia sandwich, made of white bread packed with thick slices of cucumber topped with sev, is a popular choice as is the chilli cheese toast. Opt for the Masala ThumsUp only if you really, really, really love chaat masala: the flavour can be quite overwhelming so it’s best to share. Cost: Rs. 60 for cheese bhujia sandwich and Rs. 20 for Masala ThumsUp Address: 3, Raja Annamalai Road
Venkateshwara Boli Stall While there’s some confusion as to whether this is an original branch of the famous boli stall in West Mambalam, the taste speaks for itself. Served on sheets of newspaper, the coconut boli is soft and delicious. Cost: Rs. 11 for two pieces Address: 43/111, Dr Alagappa Rd
Ajnabee Sweets Formerly known as Ajab’s Ajnabi Mithai Ghar, this offshoot of the Fountain Plaza chaat shop has made a name for itself in the area. Manager Dharshan says they are most busy in the morning hours, serving a breakfast of dhoklas and fafda from 7 a.m. on weekdays and 6:30 a.m. on Sundays. Parking may be a problem during peak hours. But the newly introduced methi fafda makes it worth your while: it is soft, yet crisp and flavourful.Cost: Rs. 40 per 100 gm of methi fafda Address: 51, Alagappa Road, Behind Sangam Theatre
King’s Vada Pav While the jalebis at Ajnabee look tempting, word on the street is that the shop facing it has better stuff. Barely eight months old, King’s has built a strong clientele based on taste. The jalebis are not served hot, but remain crisp and sweet, lacking the acidic tang often associated with jalebis.
Cost: Rs. 20 for 50 gm Address: 59, Alagappa Road, Behind Sangam Theatre
Hotel Sri Rama’s This little restaurant with a sweet shop attached has been around since 1950. Now managed by the grandson of the founder, they continue to serve Palakkad cuisine at competitive rates. As there’s no time for a proper meal, coffee will have to do. Cost: Rs. 8 per cup Address: 125/55, Purasawalkam High Road
Welcome Hotel is to Purasawalkam what Ratna Cafe is to Triplicane. The long walk has whetted appetites; many order idli or uthapam with the signature sambhar. We go with the vadai. It arrives at just the right temperature to dig in – perhaps that was because we paused to sprinkle the onion on it in just the right way to Instagram it – but it is delicious. Cost: Rs. 44 for a plate of two sambhar vadais Address: 112/241, Purasawalkam High Road
Old Lala Topi Walah High Class Sweets The name is intriguing but the man behind the counter is none too forthcoming with details about the store unfortunately. The sweets and samosa are displayed in charming old-fashioned glass cases. The counter itself is made of glass containers which hold a variety of murukkus and boondi. Address: 134, Gangadeeswarar Koil Street
Lingam Hot Chips Being used to huge, black kadais at the entrance to any chips shop, it is surprising to see an industrial sized fryer being cleaned here. The shop looks unassuming but places a high value on healthy cooking methods. Proprietor Harish says that their popular pakodas and banana chips are fried in oil that is used only once. “The jackfruit chips are made using a no oil method. It’s our own brand called Byocrips,” cost Rs 50for 35grms. he says.Address: 32, Gangadeeswarar Koil Street (Opposite Gangadeeswarar Koil)
http://www.thehindu.com/features/metroplus/eating-with-eyes-wide-open/article6341753.ece dt. 23-08-2014
Kakada Ramprasad A sweet shop tucked in narrow
Mint Street. Quite famous for its rich Badam Milk & fill your stomach Costs
Rs. 70/- and is available in sealed tumblers for easy take away :) They have
other Bengali & Milk sweets too. Check out their Malai Gulla – also a good
sweet, if you have affinity for Bengali sweets. They do have Chat items but
served only after 3pm onwards. Badam milk and malai gulla Pocket Friendly :
Slightly high end! Address: New # 348, Old # 343, Mint Street Sowcarpet Chennai
600 079 Phone: 044-2538 8251. Next AM Jain Mandir
Anmol Mohit Lassi, Dinesh Soni @ 343 Mint Street I am a wrestler-turned-lassi walla,” he
explains his rugged look. Speciality, kesar lassi, for the past 21 years says
Dinesh, who hails from a family of goldsmiths. Apart from lassi, he also sells
Mohit shampoo and hair oil, which he claims can cure all problems. He hopes his
son Mohit will join the business after he finishes engineering. Cost: Rs. 70
for kesar lassi and Rs. 30 for chaas.
Ajnabi Mithai Ghar This is where Ajnabi originated 60 years ago, before setting
up their popular Fountain Plaza outlet. Gathiyas, fafda, dhokla, thepla, gajar halwa,
dudhi halwa…and all things Gujarati. Unfortunately, the fafdas are over, but
the gathiyas make up for it. Cost: Rs. 70 for 1/4kg gathiya. Tel. 98403 61108
Mehta
Bros Mithaiwala spl dish Kaju Cutley
/ Kalakand / Ice Halwa Near
Ekambreshwar Temple @ 310 & 325, Mint
Street, Park
Town, Chennai. Tel 04425350689 /
04442624626+91 9840177613, Time 07:00 AM to 09:00 PM
Maya Chat beside a large kadai dark with age and
brimming with bubbling oil. The cook gets busy frying fluffy kachoris, which in
no time get sold out like hot cakes…err kachoris. Served with bright green
chutney, these spicy onion kachoris are a delight. Cost: Rs. 18. Tel: 98401
94323
Seena Bhai Tiffin Centre # 51, N.S.C. Bose Road Sowcarpet Chennai
600079 Tel. 044-25346263 94444 79797 No matter how full you are, take a walk to
this 35-year-old eatery that opens at 6 p.m. Seena Bhai makes just two things —
nei uthapam and nei idlis — and he does it to perfection. Dripping with ghee
and tossed in podi and chutney, they are worth the long walk. Cost: Rs. 40 each
Maharaja Kulfis After all the namkeen, balance your palate with
some creamy matka kulfi, rich with nuts. Then there’s the real mango ice cream,
with virulent orange ice cream stuffed inside a frozen mango skin — it catches
your fancy but tastes less impressive than it looks. Cost: Rs. 40 each. Tel:
99402 34566
This nameless sugarcane juice man is stationed outside Chotu Motu Sweets and Savouries( #360 Mint Street, Sowcarpet, Chennai- 600079) Nr Jain Temple. He rapidly fills endless glasses of freshly made juice from a large glass jar. The juice, infused with ginger, is sweet and refreshing. Cost: Rs. 10. Chotu Motu Sweets and Savouries , Sowcarpet , Chennai
Friday, August 29, 2014
சஞ்சீவனி மூலிகை & செங்காந்தள் மலர்
ராமாயணத்தில் அனுமார் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகை போன்ற
ஒன்று இமாலயத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் அதிசயித்துள்ளனர்.
இமாலயத்தில் உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் உள்ளன. இந்நிலையில் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை பன்மடங்கு அதகரித்து ஒழுங்கு படுத்துவதும், பிராண வாயு பற்றாக்குறை இருக்கும் மலைப்பிரதேசங்களில் உயிர்களைப் பாதுகாக்கவும் செய்யும் ரோடியோலா என்ற அதிசய மூலிகையின் மகத்துவங்களை விஞ்ஞானிகள் விதந்தோதி வருகின்றனர்.
இந்த ரோடியோலாவை ‘சஞ்சீவனி’ என்றே கருதுகின்றனர் விஞ்ஞானிகள். லடாக்கில் ‘சோலோ’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் அரிய குணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமலே உள்ளது. ஆனால் லடாக்வாசிகள் இதன் இலைகளை உணவுப்பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இதன் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.
ரோடியோலா என்ற இந்த மூலிகை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது, கடினமான வாழ்விடச் சூழலில் நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான சக்தியை வழங்குகிறது, அனைத்திற்கும் மேலாக கதிரியக்கத்தின் விளைவுகளிலிருந்தும் இந்த மூலிகை உயிர்களைப் பாதுகாக்கிறது என்று ஆய்வுக் கழகத்தின் ஆர்.பி.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
ரசாயன ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை வெளிப்படுத்தும் நச்சுக் கதிரியக்கத்தின் விளைவுகளை இந்த ரோடியோலா மூலிகை அகற்றும் என்கிறார் இவர்.
மேலும் மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணையாகவும் ஜீரண சக்திகளை மேம்படுத்தும் குணங்களும் இந்த மூலிகைக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இமாலயத்தில் உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் உள்ளன. இந்நிலையில் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை பன்மடங்கு அதகரித்து ஒழுங்கு படுத்துவதும், பிராண வாயு பற்றாக்குறை இருக்கும் மலைப்பிரதேசங்களில் உயிர்களைப் பாதுகாக்கவும் செய்யும் ரோடியோலா என்ற அதிசய மூலிகையின் மகத்துவங்களை விஞ்ஞானிகள் விதந்தோதி வருகின்றனர்.
இந்த ரோடியோலாவை ‘சஞ்சீவனி’ என்றே கருதுகின்றனர் விஞ்ஞானிகள். லடாக்கில் ‘சோலோ’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் அரிய குணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமலே உள்ளது. ஆனால் லடாக்வாசிகள் இதன் இலைகளை உணவுப்பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இதன் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.
ரோடியோலா என்ற இந்த மூலிகை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது, கடினமான வாழ்விடச் சூழலில் நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான சக்தியை வழங்குகிறது, அனைத்திற்கும் மேலாக கதிரியக்கத்தின் விளைவுகளிலிருந்தும் இந்த மூலிகை உயிர்களைப் பாதுகாக்கிறது என்று ஆய்வுக் கழகத்தின் ஆர்.பி.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
ரசாயன ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை வெளிப்படுத்தும் நச்சுக் கதிரியக்கத்தின் விளைவுகளை இந்த ரோடியோலா மூலிகை அகற்றும் என்கிறார் இவர்.
மேலும் மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணையாகவும் ஜீரண சக்திகளை மேம்படுத்தும் குணங்களும் இந்த மூலிகைக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் மாநில மலரான செங்காந்தள் அழிவின் விளிம்பில் உள்ள
நிலையில், புற்று நோய் தீர்க்கக் கூடிய அரிய மருத்துவ குணம் கொண்டுள்ளதால்,
உலக அளவில் அதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழக அரசின் மலராக செங்காந்தள் மலர் போற்றப்படுகிறது. சங்க இலக்கியமான
பத்துப் பாட்டு, எட்டுத்தொகை ஆகியவற்றில்ஏழு இடங்களில் செங்காந்தள் மலர்
இடம் பெற்றுள்ளது. இதில் 64 இடங்களில் காந்தள் என்ற வார்த்தை
பயன்படுத்தப்பட்டுள்ளது. செங்காந்தள் மலர் உயர்ந்த மலைகளிலும், மலை முகடு,
சரிவுகளிலும் அதிக அளவு காணப்படும். மலரின் நிறம் நெருப்பு போன்றதாக வும்,
குருதி வண்ணம் மிக்கதாகவும், ஒளி பொருந்தியதாகவும் புலவர்களால் வர்ணிக்கப்
பட்டுள்ளது. அந்தக் காலத்தில் வேடுவர்களிடம் செங்காந்தள் மலர்களைச் சூடும்
பழக்கம் இருந்துள்ளது. மற்ற பெண்களும் பிற மலர்களுடன் செங்காந்தள் மலரைக்
கோர்த்து சூடி மகிழ்ந்துள்ளனர்.
தேன் மிகுதியாகக் காணப்படும் செங்காந்தள் மலரை எப்போதும் வண்டினங்கள்
வட்டமிட்டுக் கொண்டே இருக்குமாம். பிற மலர்கள் பூத்து உதிரும். ஆனால்,
செங்காந்தள் மலர் வாடினாலும் உதிர்வது இல்லை. கிராமங்களில் கண்வலி பூ
என்றும் இதனை அழைப்பது உண்டு. இந்தப் பூவை உற்றுப் பார்த்தால் கண்வலி
ஏற்படும் என்பதால் அவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
உயிர் காக்கும் மகத்துவம்
செங்காந்தள் மலர் புற்று நோயைத் தீர்க்கக் கூடிய அரிய மருத்துவ குணம்
கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் பரவாமல் தடுக்கக்
கூடிய கால்சிசின், குலோரியோசின் மருந்துகள் செங்காந்தள் செடியில் உள்ள விதை
களிலும், கிழங்குகளிலும் அதிக அளவு உள்ளது. இதில் இருந்து மருந்துகளை
எடுத்து, ஹீமோ தெரபி மூலம் புற்றுநோய் பரவாமல் தடுக்கலாம் என
சொல்லப்படுகிறது. செங்காந்தள் செடியின் விதையை ஐரோப்பிய நாடுகளும்,
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு மருந்து நிறுவனங்களும் அதிகஅளவு
வாங்குகின்றன.
உலக அளவில் மவுசு
தமிழகத்தில் திண்டுக்கல், ஈரோடு மாவட்டம் சித்தோடு, துறையூர் ஆகிய
இடங்களில் விவசாயிகள் அதிக அளவில் செங்காந்தள் மலரை பயிரிட்டு வருகின்றனர்.
விதையை வெளிநாட்டு நிறுவனங்கள் கிலோ ரூ.850-க்கு கொள்முதல் செய்கின்றன.
இதன் கிழங்கிலும் மருத்துவ குணம் இருந்தாலும், ஐந்தாண்டுகள் வரை இந்தப்
பயிர் வளர்வதால், இதன் விதையையே அதிக அளவு வாங்குகின்றனர். செங்காந்தள்
கிழங்கு கிலோ 300 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. குறைந்த தண்ணீர்
இருந்தாலே இந்தப் பயிர் செழித்து வளரும் தன்மை கொண்டது. தமிழக மலரில்
புற்று நோய் தீர்க்கும் மருத்துவ குணத்தால், உலக அளவில் வரவேற்பு
அதிகரித்துள்ளது.
அழிவின் விளிம்பில் செங்காந்தள்
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உயிர் தொழில்நுட்பவியல் பேராசிரியர் பி.வெங்கடாசலம் கூறியதாவது:
‘‘தமிழகத்தில் அழிந்து வரும் தாவரங்களை பாதுகாக்கும் முக்கிய ஆராய்ச்சியில்
ஈடுபட்டு வருகிறோம். திசு வளர்ப்பு மூலம் அழிந்து வரும் தாவரங்களை சோதனைக்
கூடங்களில் வளர்த்து, புத்துயிர் அளித்து, நிலங்களில் விளைவித்து
வருகிறோம்.
மாநில மலரான செங்காந்தள் அழிந்து வரும் தாவரங்கள் பட்டியலில் இடம்
பெற்றுள்ளது. வனத்துறையின் சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள அழிந்து வரும்
தாவர இனங்களில் செங்காந்தள் மலரும் உள்ளது.
புற்றுநோயைத் தீர்க்கக் கூடிய அரிய மருத்துவ குணம் கொண்ட செங்காந்தள் மலரை
அழிவின் விளிம்பில் இருந்து காத்திட, விவசாயிகள் பெருவாரியான இடங்களில்
பயிரிட வேண்டும். இதன் மூலம் உயிர் காக்கும் மருந்தும், மாநில மலரின்
பெருமையும் வருங்காலத்தில் நிலை நிறுத்தப்படும்’’ இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
learn english
Child என்ற சொல் ஒருமை. குழந்தையைக் குறிக் கிறது. குழந்தைகள் என்று
பன்மையில் குறிப்பிட children என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். கூட ஒரு
‘S’ சேர்த்துக் கொண்டு சில்ரன்ஸ் என்று நீட்டி முழக்கக் கூடாது. அதேபோல்
man என்பதன் பன்மை men. Woman என்றால் பெண். women (விமன்)என்றால் பெண்கள்.
Mens என்றோ womens என்றோ சொற்கள் கிடையாது. Alumni என்றால் பன்மை. முன்னாள் மாணவர்கள் என்றுதான் அர்த்தம். அதன் ஒருமை
alumnus என்பதுதான். இதைச் சுட்டிக்காட்டியதும் அவர் முகத்தில் அதிர்ச்சி.
“தெரியும். அவசரமாகப் பேசியதில் தப்பாகி விட்டது” என்று சமாளித்தார்! பல் என்றால் tooth. பற்கள் என்றால் teeth. ஓஹோ toothனா ஒரே ஒரு பல்தானா?
அப்படியானால் toothpasteஐக் கொண்டு ஒரே ஒரு பல்லைத்தான் தேய்க்க வேண்டுமா
என்று கேட்கக் கூடாது. ஒவ்வொரு பல்லையும் கவனமாகத் தேய்க்க வேண்டும் என்று
வைத்துக்கொள்ளலாம்.
அதேபோல் கால் என்றால் foot. கால்கள் என்றால் feet (பாதம், பாதங்கள் என்ற
பொருளிலும் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன). ஆனால் ஆங்கிலத்தில் my
foot என்பது எதிர்ப்பைக் காட்டும் சொற்கள். நீங்கள் உங்கள் நண்பரிடம் “நம்ம முத்துகிருஷ்ணன் ரொம்ப நாணயமானவர்” என்று
சொல்கிறீர்கள். அவர் பதிலுக்கு “முத்துகிருஷ்ணன் நாணயமானவர்! my foot’’
என்றால் அவர் அந்த நபரைக் கொ ஞ்சம்கூட நாணய மில்லாதவர் என்று கருதுகிறார்
என்று அர்த்தம். பல பத்திரிகைகளும் வார இதழ்களும் “மீடியாக்கள்” என்ற வார்த்தையைப்
பயன்படுத்துகின்றன. மீடியம் (medium) என்பது ஒருமை. மீடியா (media) என்பது
பன்மை. எனவே மீடியாக்கள் என்பது தவறான சொல். ஏனென்றால் medias என்று ஒரு
சொல் கிடையாதே!
இது போலவே தவறாகப் பயன் படுத்தப்படும் இன்னொரு சொல் ‘பாக்டீரியாக்கள்’.
பாக்டீரியம் (bacterium) என்பது ஒரு கிருமியையும், பாக்டீரியா (bacteria)
என்பது பல கிருமிகளையும் குறிக்கின்றன. அப்புறம் எப்படி ‘பாக்டீரியாக்கள்'
வரும்?
டைலமா என்பது இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற குழப்ப நிலையைக்
குறிக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் dilemma என்ற
வார்த்தைக்கு வேறொரு பரிமாணம் உண்டு.
Apprise - Appraise
Apprise என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? ‘தெரியப்படுத்துதல்’ என்று
அர்த்தம். அதாவது Inform என்று பொருள். Apprise this information என்றால்
இந்தத் தகவலைத் தெரியப்படுத்து என்று பொருள்.
சிலர் இந்த வார்த்தையை Appraise என்ற வார்த்தையுடன் சேர்த்துக்
குழப்பிக்கொள்வதுண்டு. எனவே Appraise என்ற – அதிகப்படியாக ஒரு a நடுவில்
சேர்க்கப்பட்ட – வார்த்தைக்கான அர்த்தத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
பாராட்டுதல் என்ற அர்த்தம் தரும் Praise என்ற வார்த்தை
உள்ளடக்கியிருப்பதால் அதே அர்த்தத்தைத்தான இதுவும் தரும் என்று நினைத்துக்
கொள்ளக் கூடாது. Appraise என்றால் மதிப்பிடுதல் என்று அர்த்தம்.
அதனால்தான் நிறுவனங்களில் ஊழியர்களை மதிப்பிடும் முறையை Appraisal என்று
குறிப்பிடுகிறார்கள். ஊழியர்களின் திறமைகளை மதிப்பிடும் Performance
Appraisal பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே? நகைகளை மதிப்பிடுபவரை Jewel
Appraiser என்றும், நிலங்களை மதிப்பிடுபவரை Land Appraiser என்றும்
குறிப்பிடுவதை நீங்கள் அறிவீர்கள்தானே?
வாசகர் ஒருவர் ‘நானான நானில்லை தாயே’ என்ற வாக்கியத்தை ஆங்கிலத்தில் எப்படி
எழுதலாம் என்று கேட்டிருந்தார். ஒரு திரைப்பாடலின் தொடக்க வரி இது.
எளிமையாகத்தானே இருக்கிறது என்று தோன்றியது. ஆனால் யோசித்துப் பார்த்தால்,
அதற்கான கீழே உள்ள இருவித மொழி பெயர்ப்புகளும் உணர்த்தும்
அர்த்தங்களுக்கிடையே உள்ள மெல்லிய வேறுபாட்டை உணர முடிகிறதா?
1) O Mother, I Am Not What I Am
2) O Mother, I Am Not As I Was
கொஞ்சம் நேரமும், அதிக ஆர்வமும் இருப்பவர்கள் கீழே உள்ள மொழிபெயர்ப்புகள்
எந்தத் திரைப் பாடல்களின் தொடக்க வரிகள் என்பதை யோசிக்கலாமே. (இரண்டும்
கமலஹாசன் வாயசைத்த பாடல்கள்)
1) If You Focus Only On Stone, God Will Be Invisible.
2) Oh, The Jewel Among Women, Oh The Angel Of Forest, Sing A Song
பெயர்ச்சொல் என்றால் Noun என்பது உங்களுக்குத் தெரியும்தானே? கீழே உள்ள வார்த்தைகள் Nouns-ஆ?
1. Shyam
2. Rekha
எளிதாகக் கண்டுபிடித்திருப்பீர்கள். இப்போது மீதமுள்ள வார்த்தைகளையும் அவை Nounsஆ இல்லையா என்று இனம் பிரியுங்கள்.
3. Boy
4. Crowd
5. Ganges
6. River
எதிலாவது குழப்பம் வந்ததா? இப்போது கீழே கொடுத்துள்ள வார்த்தைகளையும்
Nouns, Nouns அல்லாதவை என்று வேறுபடுத்த முடிகிறதா என்று பாருங்கள்.
7. Elephant
8. Animal
9. Affection
10. Honesty
மேலே உள்ள பத்து வார்த்தைகளில் எவற்றை Nouns என்பீர்கள்? ஒரு ஆங்கிலப்
பயிற்சி வகுப்பில் இதைக் கேட்டேன். என்ன காரணத்தினாலோ பலருக்கும் Crowd,
River போன்ற வார்த்தைகளில் தயக்கம் வந்தது. Affection, Honesty ஆகியவை
Nouns அல்ல என்றே பெரும்பாலானவர்கள் பதில் சொன்னார்கள். ஆனால் மேலே குறிப்பிட்ட பத்து வார்த்தைகளும் Nounsதான். Shyam, Rekha போன்றவை Personal Nouns. குறிப்பிட்ட நபர்களைக் குறிக்கின்றன. Boy, River, Elephant, Animal ஆகியவை Common Nouns. அந்த வகையிலுள்ள யாரை அல்லது எதை வேண்டு மானாலும் அந்த வார்த்தை குறிக்கும். Crowd, Army ஆகிய வார்த்தைகள் Collective Nouns. ஒரே பெயர்ச்சொல் போலக் காணப்பட்டாலும் அவை ஒவ்வொன்றும் பல நபர்களை உள்ளடக்கியது. Affection, Honesty, Love ஆகியவை Abstract Nouns. அதாவது உணர்வுகள். இவற்றை உணரத்தான் முடியுமே தவிர கண்களால் காண முடியாது.
பெயர்ச்சொல்லின் விதி
ஒரு வார்த்தை Noun ஆ இல்லையா? என்பதைக் கண்டுபிடிக்க எனது தோராய மான ஆலோசனை இதுதான். Name என்று தொடங்கும் ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள்.உதாரணமாக Name This என்று எதையோ சுட்டிக் காட்டு கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.Chair, Table, Pen, Book என்று எதுவாகவும் பதில் இருக்கலாம். அல்லது ஒரு நதியைக் காட்டி Name It என்றால் பதில் River என்பதாகவும் இருக்கலாம். Ganges என்பதாகவும் இருக்கலாம். இப்படி ‘Name..’ என்று தொடங்கும் எந்தக் கேள்விக்கும் அளிக்கப்படுகிற எந்த ஒற்றை வார்த்தை விடையுமே Nounதான். Name Him அல்லது Her என்ற கேள்விக்கு நீங்கள் அளிக்கும் விடையும் Nounதான்.
ஆல்டரேஷனும் ஆல்டர்கேஷனும்
Alteration – Altercation – Alternate - Alternative
ஒரு பொருளை மாற்றி அமைப்பதை Alter என்பார்கள். அதனால்தான் தையல்காரரிடம்
கொடுக்கும்போது “பேண்ட்டைக் கொஞ்சம் Alter செய்யணும்’ என்று
தொடங்குகிறோம். Alter என்ற வார்த்தைக்குச் சமமாக Change, Amend, Redesign
போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடலாம். Alter வினைச் சொல். அதற்கான பெயர்ச்
சொல் Alteration.
ஆனால் Alteration என்பதற்கு நடுவே ‘கடல்’ புகுந்து கொண்டால்? அதாவது ‘C’
சேர்க்கப்பட்டால்?. உரத்த குரலில் சண்டை, பொது இடத்தில் கத்தி விவா தித்தல்
போன்றவற்றைக் குறிப்பிடவே Altercation என்ற வார்த்தை பயன் படுகிறது. எனக்குத் தெரிந்த பலரும் Alternate மற்றும் Alternative ஆகிய வார்த் தைகளை
மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் கூறும் தீர்வு உங்களுக்குப்
பிடிக்கவில்லையென்று வைத்துக் கொள்வோம். இதற்கு Alternate என்ன என்று
கேட்கக் கூடாது. Alternate என்றால் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறுகிற
என்று பொருள். 1,3,5,7,9 ஆகியவை Alternate Numbers. Periods Of Depression
Alternate With Periods Of Elation. Alternative என்பது மாற்று, அதாவது Substitute அல்லது Replacement. These
Are The Alternative Methods For Resolving The Issues என்பதுபோல. While
Raining, Playing An Indoor Game Is An Alternative To Reading என்பதைப்
போல. தவிர வேறொரு அர்த்தத்திலும் Alternative என்ற வார்த்தை
பயன் படுத்தப்படுகிறது. மரபுகளிலிருந்து விலகிய பொருட்கள் மற்றும்
செயல் பாடுகளைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு. An
Alternative Life Style, An Alternative World என்பதைப் போல. அதாவது
Unusual, Radical, Unorthodox போன்ற வார்த்தைகளை Alternative என்ற
வார்த்தைக்குச் சமமான வார்த் தைகளாகக் குறிப்பிடலாம்.
சென்ற வாரத்தில் Affection, Honesty ஆகிய சொற்கள் Nouns என்று குறிப்பிட்டதில் நண்பர் ஒருவருக்குப் பலத்த சந்தேகம்.
அப்படியானால் Love என்பதும் Noun-தானா? ஆமாம் என்றால் I Love You என்பதில்
இடம் பெறும் Love Verb-தானே? ஆக Love என்பது Nounஆ? Verbஆ? என அவர் பல
கேள்விகளை எழுப்புகிறார்.
சொல்லின் பல அவதாரங்கள்
ஆங்கிலத்தில் பல வார்த்தைகளை விதவிதமாகப் பயன்படுத்த முடியும். Love என்ற
ஒரே வார்த்தையை வைத்துக் கொண்டு அது Nounஆ Verbஆ என்று சொல்ல முடியாது. அது
பயன்படுத்தப்படும் விதத்தைக் கொண்டுதான் அதைச் சொல்ல முடியும்.
Love Is A Pleasant Feeling என்பதில் Love Noun ஆகப் பயன்
படுத்தப்பட்டிருக்கிறது. I Love You அல்லது He Loves Her என்பதில் Love
Verbஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கீழே உள்ள வாக்கியங்களில் அடுத்தடுத்து ஒரே வார்த்தை எப்படி Noun ஆகவும்
Verb ஆகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.
This Is An Act Of Mercy.
Do Not Act Like A Fool.
Write The Address.
You Have To Address The Issue.
Divorce Should Be The Last Step.
I Want To Divorce You.
The Delay Is Not Accepted.
Do Not Delay Sending The Mail.
இப்போது ஒரே வாக்கியத்தில்
ஒரே வார்த்தை Noun, Verb ஆகிய
இரண்டாகவும் பயன்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
Drink The Drink.
Do Not Trick Me With Your Trick.
ஆசிரியரும் மாஸ்டரும்
ஆசிரியருக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று ஒரு கேள்வி
உண்டு. இதற்கான பதில் “A Teacher Trains The Mind. A Station Master
Minds The Train” என்பதாகும். இதில் முதல் வாக்கியத்தில் Train என்பது
Verbஆகவும், இரண்டாவது வாக்கியத்தில் Train என்பது Noun ஆகவும்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் முதல் வாக்கியத்தில் Mind என்பது Nounஆகவும், இரண்டாவது
வாக்கியத்தில் Mind என்பது Verbஆகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. Love All
என்பது அனைவரையும் நேசி என்ற அழகான வார்த்தை. இதில் Love என்பது Verbஆகப்
பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
டென்னிஸ் விளையாட்டில் Love All, Love One என்றெல்லாம் ஸ்கோர்கள்
அளிக்கப்படுகின்றன. இவற்றில் உள்ள Love எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளது?
Nounஆகவா? Verbஆகவா? யோசியுங்கள்.
Pre - Post
Pre என்றால் முன்னதாக என்ற அர்த்தம். Preplan என்றால் முன்னதாகவே
திட்டமிடு என்று பொருள். Preview என்றால் மற்றவர்களுக்கு முன்னதாகவே
பார்த்தல் என்ற அர்த்தம். Post என்றால் (தபால் என்பதைத் தவிர) பிறகு என்று
அர்த்தம். Prepaid Connection, Post Paid Connection ஆகியவை நமக்குத்
தெரிந்தவைதானே!
Postpone என்ற வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. தள்ளிப் போடுதல் என்று இதற்கு
அர்த்தம். ஆனால் சிலர் Prepone என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.
அதாவது 18-ம் தேதி நடக்கவிருந்த சந்திப்பை இரு நாட்களுக்கு முன்பாகவே
வைத்துக் கொள்ளலாம் (அதாவது 16-ம் தேதியே சந்திக்கலாம்) என மாற்றியமைத்தால்
அது Prepone செய்வதாம். இது தப்பு. Prepone என்ற வார்த்தை ஆங்கிலத்தில்
கிடையாது.
Check, Cheque
Check என்றால் சரிபார்த்தல் என்று பொருள். Checking Inspector, Ticket Checker என்றெல்லாம் சொல்வது இந்தப் பொருளில்தான்.
Cheque என்பது காசோலை. “செக், கிரடிட் கார்டு ஆகியவற்றைப் பெற முடியாது.
ரொக்கம் மட்டும்தான்’’ என்பதில் பயன்படுத்தப்படும் செக், Chequeதான்.
(இன்னொன்றைக் கவனித் திருக்கிறீர்களா? Q என்ற எழுத்து எங்கே வந்தாலும்
அதைத் தொடர்ந்து U என்ற எழுத்து கட்டாயம் வரும்).
ஆங்கிலத்தைப் பொறுத்தவரை எல்லோருக்கும் ஒரு வழி என்றால்
அமெரிக்கர்களுக்குத் தனி வழிதானே? அவர்கள் காசோலையைக்கூட Check என்றே
குறிப்பிடுகிறார்கள்.
ஆங்கிலத்தில் சினிமா பாடலின் வரி
இன்று Love பற்றி அதிகமாகப் பேசி விட்டதால் நலம் விசாரிக்கும் சில தமிழ்ப்
பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. அவற்றின் முதல் வரியின் ஆங்கில வடிவம் இவை.
எந்தப் பாடல்கள் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள்.
1. Are You Well?
2. Are You Well My Dear?
3. Hi Dear, Are You Well?
எண்ணக்கூடிய Nouns எல்லாம் Countable Nouns.
எண்ண முடியாத Nouns கூட உண்டா என்கிறீர்களா? ஏன் இல்லை? Water கூட Nounதான். அதை எண்ண முடியுமா? “முடியுமே. நான்கு பக்கெட் தண்ணீர் எனலாமே’’ என்கிறீர்களா? நான்கு பக்கெட்
தண்ணீர் எனும்போது நீங்கள் எண்ணுவது பக்கெட்டைத்தான், தண்ணீரை அல்ல.
“ஐம்பது லிட்டர் தண்ணீர் என்று சொல்லலாமே’’ என்கிறீர்களா? சரிதான். ஆனாலும்
தண்ணீரை அளக்க முடியுமே தவிர, எண்ண முடியாது. We Can Measure Water. But
We Cannot Count Water. சிலவற்றை எண்ண முடியும். சிலவற்றை எண்ண முடியாது. இப்போது அதற்கு என்ன? இந்த வேறுபாட்டை உணர்ந்து கொண்டு சரியான வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். அதுதான் விஷயம்.
Few வும் Less ம்
இப்போது கீழே உள்ள நான்கு வாக்கியங்களையும் ஆங்கிலப்படுத்துங்கள்.
1. நாற்காலிகள் கொஞ்சமாக இருக்கின்றன.
2. தண்ணீர் குறைவாக இருக்கிறது.
3. ஐம்பதுக்கும் குறைவான நபர்களே இருந்தனர்.
4. அவனுக்குக் குறைவான அறிவுத் திறன்தான்.
கொஞ்சமான, குறைவான என்ற வார்த்தைகளுக்கு இணையாக நீங்கள் பயன்படுத்திய
வார்த்தைகள் எவை? Few? Less? ஒரே அர்த்தம் கொண்டவைதான். ஆனால் எதை எங்கே
பயன்படுத்த வேண்டும் என்பதில் வேறுபாடு இருக்கிறது.
1. There Are A Few Chairs.
2. Water Is Less.
3. There Were Fewer Than Fifty Persons.
4. He Has Less Intelligence.
இரண்டு வாக்கியங்களில் Few என்ற வார்த்தையையும் மற்ற இரண்டு வாக்கியங்களில்
Less என்ற வார்த்தையையும் பயன்படுத்தியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
Few என்பதை Countable Nounக்குப் பயன்படுத்த வேண்டும். I Have Only A Few Pens என்பதுபோல.
Less என்பதை Non-Countable Nounக்குப் பயன் படுத்துவோம். There Is Less Water In The Pot என்பதுபோல.
Few–ம் A Few-ம்
இந்த இடத்தில் வேறொன்றையும் தெரிந்து கொள்வோமே. எப்போது Few? எப்போது A Few?
ஆங்கில மரபுப்படி குறைவான என்றால் A Few. எதுவுமே இல்லையென்றால் Few.
அதாவது A Few Decisions Were Taken At The Meeting என்றால் சில
தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்று அர்த்தம். மாறாக Few Decisions என்று
மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை
என்று அர்த்தம்.
அதேபோல அதிகமான என்பதற்கும் இரண்டு விதமான வார்த்தைகள் உண்டு. More, Much.
இவற்றில் More என்பதைக் Countable Nounக்கும், Much என்பதை Non-Countable
Nounக்கும் பயன்படுத்த வேண்டும். I Have More Pens. There Is Much Water In
The Pot.
பாடல் வரிகளின் விடை
சென்ற முறை சில தமிழ்திரைப்படப் பாடல்களின் தொடக்க வரிகளை ஆங்கிலத்தில் அளித்திருந்தேன். விடைகள் இதோ:-
1. Are You Well? – நலந்தானா? (உடலும் உள்ளமும் நலந்தானா?)
2. Are You Well My Dear? – சவுக்கியமா கண்ணே (சவுக்கியமா?)
3. Hi Dear, Are You Well? – என்னம்மா கண்ணு சவுக்கியமா?
மேலும் சில பாடல் வரிகளை நீங்களே ஆங்கிலப்படுத்திப்பாருங்கள்.
தொடர்புக்கு:
(aruncharanya@gmail.com)
Subscribe to:
Posts (Atom)