Sunday, April 26, 2015

எந்தத் திசை நோக்கி திருநீறு பூசலாம்?

நெற்றியில் பூசிக் கொள்ளும் திருநீறு, நிலையாமை என்னும் தத்துவத்தை உரக்கச் சொல்கிறது. பிறப்பில் பேதமின்றி அனைவரும் சாம்பலாகப் போவதை நினைவுபடுத்துவதன் மூலம் பிறப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் காரணம் காட்டி சகமனிதனை யாரும் வெறுக்கக் கூடாது. பிற உயிர்களை வதைக்கக் கூடாது என்பதையே விளக்குகிறது.
திருநீறைப் பூசிக் கொள்வதிலும் சில முறைகளை நமது பெரியோர்கள் நிர்ணயித்துள்ளனர். பொதுவாக சூரிய உதயத்தின் போது கிழக்கு திசையை நோக்கியபடி நின்றுகொண்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொள்வது நல்லது. உச்சிக் காலத்தைத் தாண்டும் மதிய நேரத்தில் வடக்கு திசை பார்த்து நின்றபடியும், சூரியன் அஸ்தமிக்கும் மாலை நேரத்தில் மேற்கு திசை நோக்கி நின்றபடி திருநூறைப் பூசிக் கொள்ள வேண்டும். சூரியனின் கதிர்களை கிரகிக்கும் தன்மைகொண்ட திருநீறால் நன்மை ஏற்படும்.             http://tamil.thehindu.com/society/spirituality/article7131014.ece?ref=archive

No comments:

Post a Comment