Sunday, April 5, 2015

வன்னிவேடு அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்

1000-2000 பழமை கோயில் வேலூர் மாவட்டம் காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். +91 4172 270 595, 94432 27864
செவ்வாய் தோஷ நிவர்த்திக்கும், சனியின் தாக்கத்தைக் குறைத்து, இனிமையாய் வாழ இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து எள் தீபமேற்றி வழிபட்டும், முருகனுக்கு பீட்ரூட் சாதம் படைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் திங்களன்று சந்திரஹோரை நேரத்தில், சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்கிறார்கள்.

 ஆவுடை அம்பிகை: அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் (பீடம்) மீது நின்று தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். நவராத்திரியின் போது  இவளுக்கு ஹோமத்துடன் பூஜை நடக்கும். பவுர்ணமியன்று சப்தரிஷிகளான அகத்தியர், அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகியோர் இவளை பூஜிப்பதாக ஐதீகம். இதற்காக அன்றிரவில் அம்பாள் சந்நிதி முன்பு, லகுசண்டி ஹோமம் நடத்துகின்றனர்.

அஷ்டதிக்பாலகர்:  கோயில் பிரகாரத்தில் அஷ்டதிக் பாலகர்கள் தங்களுக்குரிய திசையில் தனித்தனி சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். இவர்களில் வடக்கு திசைக்குரிய குபேரருக்கு, செல்வ விருத்திக்காக வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவர். வடமேற்கு திசைக்குரிய அக்னி பகவானுக்கு திருமணத்தடை நீங்க சிவப்பு வஸ்திரத்துடன் தக்காளி சாதம் படைப்பர். தெற்கு திசைக்குரிய எமனுக்கு விபத்தை தவிர்க்க பாலபிஷேகம் செய்வர்.
பாகற்காய் மாலை: ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர், சனீஸ்வரர் இருவரும் அடுத்தடுத்து உள்ளனர். வீடு, கட்டடம் கட்டும் பணியைத் துவக்குவோர் அது தடங்கலின்றி நடக்கவும், வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களில் மூழ்கியிருப்போர் அது நீங்கவும் இவர்களுக்கு பூஜை செய்வர். சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து எள் தீபமேற்றி வழிபட்டால் கசப்பை சனீஸ்வரர் ஏற்று நமக்கு விடுதலையளிப்பார் என்பது நம்பிக்கை.
முருகனுக்கு பீட்ரூட்: செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு இங்கு உள்ள  முருகனுக்கு பீட்ரூட் சாதம் படைக்கிறார்கள். இதனால் திருமணத்தடை நீங்கி சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என நம்புகிறார்கள். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சுப்பிரமணியர், சரபேஸ்வரர், காலபைரவர் ஆகியோருக்கும் சந்நிதி இருக்கிறது. பள்ளி திறக்கும் இந்த நேரத்தில் இங்குள்ள ஹயக்ரீவரை வழிபடுவது நல்லது. அகத்தியர் சிவபூஜை செய்யும் சுதை சிற்பமும் உள்ளது. வன்னிமர வனமாக இருந்ததால், வன்னிக்காடு என அழைக்கப்பெற்ற  இத்தலம், பிற்காலத்தில் வன்னிவேடு என மருவியது.             http://temple.dinamalar.com/New.php?id=1771

No comments:

Post a Comment