ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் இருந்து சுமார்1
கி.மீ. தொலைவில் உள்ளது பச்சைமலை. மலையுச்சியில் கோவில் கொண்டிருக்கிறார்
முருகப்பெருமான். சுமார் 2,000 வருட பழமை மிக்க கோவில் இது. துர்வாச
முனிவர் இந்தப் பகுதியில் இருந்து தவமிருந்தபோது இங்கேயுள்ள மலையில்
பாலகுமாரனாக ஸ்ரீசுப்பிரமணியரைப் பிரதிஷ்டை செய்து வழிபடு என அருளிச்
சென்றாராம் சிவபெருமான்.
அதன்படி அங்கே முருகன்
விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து துர்வாசர் வழிபட்டார் என்கிறது தல
புராணம். இங்கு பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது. பங்குனி உத்திரப்
பெருவிழா இந்த நாளில் முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை
பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி வீடு, மனை வாங்கும் யோகம்
கிட்டும்.
ஆறாம் நாள்-திருக்கல்யாண வைபவம். இதில்
கலந்து கொண்டு வேண்டினால் நினைத்தபடி திருமணம் இனிதே நடந்தேறும். 7-ஆம்
நாள் திருத்தேரோட்டமும் 8-ஆம் நாள் முத்துப்பல்லக்கில் பவனி வருதலும்
கோலாகலமாக நடைபெறுகின்றன. ஸ்ரீசண்முகக் கடவுளுக்கு பன்னீரால் அபிஷேகம்
செய்து, பச்சை நிற வஸ்திரம் சார்த்தி, சிறப்பு அர்ச்சனை செய்தால் வீட்டில்
சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறலாம்.
அக்னி நட்சத்திரத்தின் போது மரகதீஸ்வரருக்கு தாராபிஷேகமும், 108 லிட்டர்
பாலாபிஷேகமும் செய்யப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் நீடிக்கும்
ருத்ராபிஷேகம் 11 முறை ஜெபிக்கப்படுகிறது. இத்தலத்தில் 7 கால பூஜைகள்
நடைபெறுகின்றன.
வெயில் தாக்கத்தைக் குறைக்க தமிழகம், புதுவையில் அனைத்து
சிவாலயங்களிலும், தாரா பாத்திரம் அமைத்து நீர் நிரப்பி, சுவாமிகளுக்கு
அபிஷேகம் செய்யவேண்டுமென ஆதிசைவ சிவாச்சாரியார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Also see http://temple.dinamalar.com/New.php?id=2022
No comments:
Post a Comment