திருத்துறைப்பூண்டியில் இருந்து தென்மேற்கே 16 கி.மி. தொலைவில் இத்தலம்
உள்ளது. திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டை போன்ற
இடங்களில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.
திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் நகரப் பேருந்து
இத்தலத்திற்குச் செல்கிறது. முத்துப்பேட்டை - வேதாரண்யம் பேருந்து சாலையில்
பயணித்தும் இத்தலத்தை அடையலாம்.
திருக்கடிக்குளம் இத்தலத்திலிருந்து 1 கி.மி. தொலைவில் உள்ளது.அருள்மிகு சற்குணநாதேசுவரர் திருக்கோயில்
இடும்பாவனம்
இடும்பாவனம் அஞ்சல்
திருவாரூர் மாவட்டம்
PIN - 614703
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலய தொடர்புக்கு: சசிசேகர சிவாச்சாரியார், கைபேசி: 9843628109
இடும்பாவனம்
இடும்பாவனம் அஞ்சல்
திருவாரூர் மாவட்டம்
PIN - 614703
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலய தொடர்புக்கு: சசிசேகர சிவாச்சாரியார், கைபேசி: 9843628109
இறைவனுக்குப் பின்புறம் கருவறைச் சுவற்றில் இந்த மணவாளக்கோலம் உள்ளதைக்
காணலாம். இத்தலம் பிதுர்முக்தித் தலங்களுள் ஒன்றாகும். ஆகவே
பிதுர்க்கர்மாக்களைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானதாகக்
கருதப்படுகிறது. சிவராத்திரியன்று உபவாசம் இருந்து இங்குள்ள பிரம்ம
தீர்த்தத்தில் நீராடி சற்குணநாதரை வணங்கினால், முன்னோரது பாவங்கள் நீங்கி
அவர்கள் மோட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை.
http://www.shivatemples.com/sofct/sct108.php
No comments:
Post a Comment