Showing posts with label pariharam. Show all posts
Showing posts with label pariharam. Show all posts

Tuesday, November 27, 2018

uvari, Near thiruchendur

திருச்செந்தூர்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுயம்புலிங்க நாதர் திருக்கோயில் மிக அருமை வாய்ந்த தலமாகும். முதன்மைக் கடவுளான சிவன் இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் உள்ளதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.


கடலோரத்தில் நான்கு நன்னீர் ஊற்றுக்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து சுயம்புநாதருக்கு அபிஷேகத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுவது மிகசிறப்பு வாய்ந்ததாகும்.


cures all ailments for more details refer to  http://temple.dinamalar.com/New.php?id=793

Sunday, March 4, 2018

நவகிரகத்திற்கு செய்யக்கூடிய எளிய பரிகாரங்கள் !!


🌟 ஒவ்வொரு கிரகத்துக்கும் தொடர்புடையவராக ஒவ்வொரு கடவுள் உள்ளார். சு+ரியனுக்கு சிவனும், சந்திரனுக்கு பார்வதியும், செவ்வாய்க்கு முருகனும், புதனுக்கு விஷ்ணுவும், குருவுக்கு தட்சிணாமூர்த்தியும், சுக்கிரனுக்கு லட்சுமியும், சனிக்கு சனீஸ்வரரும், ராகுவுக்கு துர்க்கையும், கேதுவுக்கு விநாயகருமாகும். இப்பொழுது நவகிரகத்திற்கான எளிய பரிகாரங்கள் பற்றியும், ஹோமம் பற்றியும் பார்ப்போம்.

🌟 பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும், கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

🌟 அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

🌟 சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபு+ரணியின் கடாட்சம் கிட்டும்.

🌟 இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

🌟 வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுகூலம் கிடைக்கும்.

ஹோமம் மூலம் செய்யக்கூடிய பரிகாரங்கள் :

🌟 அனைத்து கிரக தோஷத்திற்கும் நவகிரக ஹோமம் நல்லது. பாலாரிஷ்ட தோஷம், அற்ப ஆயுள் தோஷம் போன்றவற்றுக்கு ஆயுள் ஹோமம் சிறந்தது.

🌟 விபத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள், கண்டக தோஷம் போன்றவற்றை நிவர்த்தி செய்ய மிருத்யுஞ்சய ஹோமம் சிறந்தது.

🌟 எதிரிகளின் தொல்லைகள், செய்வினை தொல்லைகள் உள்ளவர்கள் சுதர்சன ஹோமம் அல்லது மிருத்யுஞ்சய ஹோமம் செய்தல் நல்லது. இதே ஹோமங்களை மாரக தசா புத்திகள் நடக்கும்போதும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

🌟 ஏழரைச் சனி நடக்கும்போது நவகிரக ஹோமமும், கணபதி ஹோமமும் நடத்தினால் ஏழரைச் சனியினால் ஏற்படும் தடைகள் மட்டுப்படும்.

🌟 திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்யலாம்.

🌟 வெள்ளிக்கிழமைகளில் கோ புஜை செய்வது மகாலட்சுமியின் கடாட்சம் பெருக வழி செய்யும். 

வீட்டில் பூஜை செய்யும் முறைகள் !!


நம் வீட்டு புஜை அறைகளில் சாமி படங்களை வைத்து வணங்குகிறோம். ஆனால், புஜை அறைகளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

🌟 நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

🌟 யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

🌟 புஜையின்போது விபுதியை நீரில் குழைத்து புசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபுதியை நீரில் குழைத்து புசலாம்.

🌟 புஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

🌟 விரத தினத்தில் தாம்பு+லம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

🌟 ஈர உடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துண்டு போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

🌟 சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.

🌟 பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

🌟 கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அனுகிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

🌟 தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

🌟 விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

🌟 விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுவதோ கூடாது.

🌟 எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

திருஷ்டி கழிக்கும் முறைகள்


கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பார்க்கும் பார்வை இயல்பாக இருந்து விட்டால் பாதிப்பு ஏதும் கிடையாது. அதே சமயம் பார்வையில் பொறாமை கலந்திருந்தால், அது ஒரு குடும்பத்தைப் பாதிக்கும் என்பது காலம் காலமான நம்பிக்கை. இதைத்தான் திருஷ்டி என்கிறார்கள். திருஷ்டியினை கழிக்கும் வழிகளை பற்றி இங்கு பார்ப்போம்.

கற்புரம் ஏற்றுதல்: 🌟 தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்புரத்தை வாசலில் போட்டுவிடவும். கற்புரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.

மிளகாய் சுற்றி போடுதல் :🌟 சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும்.

உப்பு சுற்றி போடுதல் :🌟 கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்பொழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.

கருப்பு வளையல் :🌟 பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடுவதால் குழந்தைகளின் மேல் விழும் திருஷ்டி காணாமல் போகும்.

மண் :🌟 சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும்.

எலுமிச்சை குங்குமம் :🌟 சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம், வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிந்தால் திருஷ்டி கழிந்து விடும்.

புசணிக்காய் உடைத்தல் 🌟 புசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பு+ரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.

தேங்காய் உடைத்தல் 🌟 ஒரு தேங்காயின்மேல் கற்பு+ரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.

அருள்மிகு உத்தமர் திருக்கோவில் !!


ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் !


👉 அருள்மிகு உத்தமர் திருக்கோவில் திருச்சிராப்பள்ளியிலிருந்து சேலம் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலமாகும் Trichy to salem. ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் உலகின் ஒரே திருத்தலம் இதுவாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசமாகும்.

தல வரலாறு :

👉 சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி, அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தார். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார்.

👉 இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை.

👉 அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பு+லோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார்.

👉 அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பு+ரணமாக நிரம்பி சிவனின் பசியை நீக்கியது. இதனால் தாயார் 'பு+ரணவல்லி" என்ற பெயரும் பெற்றாள். பெருமாளும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.

தல பெருமை :

👉 புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமாதலால், உத்தமர் கோவில் எனப் புகழ் பெற்றது. பல மன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்ததாக இங்கு காணப்படும் குறிப்புகள் வெளியிடுகின்றன.

👉 பெருமாள் கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார்.

ஏழு குருபகவான் :

👉 பிரம்மகுரு

👉 விஷ்ணுகுரு

👉 சிவகுரு

👉 சக்திகுரு

👉 சுப்ரமயணிகுரு

👉 தேவகுரு பிரஹஸ்பதி

👉 அசுரகுரு சுக்ராச்சார்யார்

ஆகிய ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் உலகின் ஒரே திருத்தலம். தென்முகமாக குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில் பிரம்மா அருளும் தலம். பிரம்மாவின் இடப்புறம் தனிசன்னதியில் ஞானசரஸ்வதி குடிக்கொண்டு இருக்கும் தலம்.

தல சிறப்பு :

👉 மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியருடன், அருகருகே தனித்தனி சன்னதிகளில் அமைந்து அருளும் திருத்தலம் இந்தியாவில் இது ஒன்றே.

Saturday, March 3, 2018

கிழமைகளுக்கான அதிர்ஷ்ட நிறம்


ஞாயிறு : சூரியனுக்குரிய நிறம் தான் மஞ்சள். இது எதிரிகளை விலக்க வல்லது மற்றும் உடனடியாக பலன் தரக்கூடியதும். ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கவல்லது.

எனவே ஞாயிற்றுக்கிழமை அன்று மஞ்சள் நிற உடைகள் மற்றும் நகைகளை அணிவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

திங்கள் : திங்கட்கிழமை வெள்ளை நிறத்துடன் தொடர்புடையது. அதுவும் திங்கள் சந்திரனைக் குறிக்கும் சொல் என்பதால் அதன் வெள்ளை நிறம் அனைத்திலும் சிறந்ததைக் குறிக்கிறது.

எனவே திங்கட்கிழமை வெள்ளை நிற உடைகளை அணிந்து, வெள்ளை நிறமுள்ள முத்து, வைரம் போன்ற நகைகளை போட்டுக் கொள்வது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

செவ்வாய் : செவ்வாய் சிவப்பு நிறங்களைக் குறிக்கும். எனவே, செவ்வாய்க்கிழமை அன்று சிவப்பு வண்ண உடைகளையும், சிவப்புக்கல் அல்லது பவளம் ஆகிய நகைகளையும் அணிவது மிகவும் நல்லது.

புதன் : புதன்கிழமை பசுமையைக் குறிக்கும். புதன்கிழமையில் பச்சை நிறம் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, புதன்கிழமை அன்று பச்சை நிற உடைகள், மரகதம் உள்ளிட்ட பச்சை நிறக் கற்கள் ஆகியவற்றை அணியலாம்.

வியாழன் : வியாழக்கிழமை மஞ்சள் நிறத்தைக் குறிக்கிறது. மஞ்சள் நகைகள் மற்றும் தங்க நிற உடைகளை அணிவது மங்களகரமாக இருக்கும்.

வெள்ளி : வெள்ளிக்கிழமை இளங்சிவப்பு நிறத்தை குறிக்கும். எனவே, வெள்ளிக்கிழமைகளில் இளங்சிவப்பு நிறம் உடைய உடைகள், மாணிக்கம் உள்ளிட்ட சிவப்பு நிறக்கற்களை கொண்ட நகைகள் ஆகியவற்றை அணிவது மிகவும் நல்லது.

சனி : சனிக்கிழமை அன்று கருப்பு நிறத்தில் உடை அணிவது சிறந்தது. அதேபோல் அன்று நீலம், ஊதா மற்றும் வாடாமல்லி போன்ற நிறங்களையும் அணியலாம். days colour

ஆயுளை அதிகரிக்கும் மூன்றாம் பிறை தரிசனம்..!


மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சுரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

மூன்றாம் பிறை சந்திர தரிசனமே மிகவும் அபு+ர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறை சந்திரனையே சு+டி சந்திர மௌலீஸ்வரராக காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.

மூன்றாம் பிறை பிறந்த கதை :

ஒருமுறை விநாயகப் பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக் கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.

இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன், சிவனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழுவெண்மதியை பெற்றான். முழுமதி நாளில் சந்திரனை வழிபடுவது சந்திர தரிசனம் ஆகும்.

மூன்றாம் பிறையை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் :

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தௌpவாகும். 

மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

மூன்றாம் பிறை சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள குழப்பங்கள் விலகி மன நிம்மதியும், தௌpவான ஞானமும், ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சந்திரனின் பரிபுரண அருளைப் பெறலாம். 

Saturday, January 6, 2018

வெள்ளிக்கிழமைகளில் இதை செய்தால் பணம் கொட்டும் !

🌟 வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும்.

🌟 வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும்.

🌟 வெள்ளிக்கிழமையில் அவரவர் நட்சத்திர தன தாரை ஓரையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபம் ஏற்றி, 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.

🌟 மேலும், வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.

🌟 தினந்தோறும் உங்களின் குல தெய்வத்தை காலையில் பிரார்த்தனை செய்து வர வீட்டில் பணம் அதிகரிக்கும்.

🌟 வியாழக்கிழமை மாலை 4 - 5 மணி நேரம் குபேர காலமாகும். அதனால் இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பணம் அதிகரிக்கும்.

🌟 தாமரை திரி போட்டு குபேரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பண வரவு உண்டாகும்.!

🌟 அமாவாசை, வியதீபாதம் மற்றும் நம் முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் தானம் செய்திட தனலாபம் உண்டாகும்.

🌟 வீட்டில் திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி படம் வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு அதிகமாகும்.

🌟 சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளைகளிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி வீடு முழுவதும் தௌpத்திட செல்வம் சேரும்.

🌟 கனகதாரா தோத்திரம் ஸ்ரீசு+க்தம் படிப்பதன் மூலமும், அவரவர் நட்சத்திர மூலிகையை பணப்பெட்டியில் வைப்பதன் மூலமும் பண வரவுக் கூடும்.

🌟 ஓடும் வெள்ளைக்குதிரை, ஜோடி கழுதைப் படம் ஆகியவற்றை அடிக்கடி பார்த்து வர பண வரவு அதிகமாகும்.