சென்னையில் வெறும் 700 ரூபாய் முதலீட்டுடன், பெண்களை சிறிய தொழில் முனைவோராக மாற்றி வருகிறது ‘கதிர்’ சாலையோர உணவகங்கள். மருத்துவ துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஒரு தொண்டு நிறுவனம், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ‘எக்கோ கிச்சன்’ எனும் திட்டத்தில், ‘கதிர்’ என்ற வர்த்தக பெயருடன் மொத்தமாக உணவை சமைத்து, அதை பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு உற்பத்தி விலையிலேயே தருகிறது. அதை பெண்கள், சாலையோர உணவகங்கள் மூலமாக விற்பனை செய்கின்றனர்.
அதிகபட்சம் 700 ரூபாய் இருந்தால், பெண்கள் இது போன்ற உணவகத்தை அமைத்து கொள்ளலாம் என்கிறார் அந்த அமைப்பின் ‘எக்கோ கிச்சன்’ திட்ட மேலாளர் கணேஷ்.இந்த திட்டம் பெண்களை பொருளாதார ரீதியாக தன்னிறைவை உருவாக்குவதுடன், குடும்பங்களில் முடிவெடுப்பதில், பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது, குடும்ப வன்முறையை எதிர்கொள்வது, குழந்தைகள் வளர்ப்பு என, மொத்தமாகவே பெண்களை இந்த திட்டம் மேம்படுத்தியுள்ளது என்கிறார் ‘எக்கோ கிச்சன்’ மேலாளர் சேதுலட்சுமி.
பொருளாதார சுதந்திரம்இதுகுறித்து சேதுலட்சுமி கூறியதாவது:எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக சென்னையில் உள்ள பல்வேறு குடிசை பகுதிகளுக்கு ஆய்விற்கு சென்ற போது, பொது சுகாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவை பெண்களின் பொருளாதாரத்துடன் தொடர்புடையதாக இருந்ததை கண்டோம்.பெண்கள் அதிக அளவில் உடல் ரீதியான வன்முறை, வார்த்தை அளவிலான வன்முறையை தினசரி எதிர்கொள்கின்றனர்.
குழந்தைகள் வளர்ப்பில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தனர். ஆரோக்கியமான உடல் நிலை அடைய, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு பெண்களுக்கு பொருளாதார ரீதியான சுதந்திரம் அவசியமாகிறது. பெண்கள் தினசரி ஈடுபடும் பணிகளை ஆய்வு செய்தோம். அதில் பெண்கள் உணவகங்கள் அமைத்து அவற்றை விற்பனை செய்வது இயல்பாக இருக்கும் என, நினைத்தோம்.அந்த அடிப்படையில் உருவானது தான் ‘எக்கோ கிச்சன்’ எனும் திட்டம். இந்த திட்டம் 2007ல் சிறிய அளவில் செய்து வந்தோம். பின், அதை
2010ல் விரிவுபடுத்தி, 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.இவ்வாறு சேதுலட்சுமி தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், கதிர் சைவ உணவகம் என்கிற பெயரில் சாலையோரங்களில் உணவகங்கள் அமைக்க தேவையான இரும்பு தகட்டினால் ஆன கடை போன்ற அமைப்பு, அமரும் நாற்காலிகள், உணவை கொண்டு செல்வதற்கான பாத்திரங்கள் ஆகியவற்றை நாங்களே தருவோம்.
ஒரு சாப்பாட்டிற்கு தினசரி ௧ ரூபாய் வாடகை மட்டும் எங்களுக்கு அவர்கள் தர வேண்டும். 35 சாப்பாடு விற்றால், 35 ரூபாய் எங்களுக்கு வாடகை தரவேண்டும். அது அந்த பொருள்களின் மீது அவர்களுக்கு பொறுப்பு வருவதற்காக வசூலிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படுவதற்கான செலவை மட்டுமே பெண்களிடம் இருந்து வசூலிக்கிறோம், என்றார் கணேஷ் கூறுகையில்,‘‘இந்த திட்டத்தில் எந்த பகுதி யில் உள்ள பெண்களும் சேரலாம். உணவை நாங்கள் வழங்க வேண்டு மென்றால், அதற்கான பணத்தை அவர்கள் ஒரு நாளைக்கு முன்பே வழங்க வேண்டும். உணவை சமைத்து விட்டு வாங்கவில்லைஎன்றால் கெட்டுவிடும்.
அதாவது குறைந்தபட்சம் 35 சாப்பாடு என்றால், 700 ரூபாய் வரை எங்களுக்கு அளிக்க வேண்டும். மறு நாள் மதியத்திற்குள் உணவு தயாரிக்கப்பட்டு, அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு போய் கொடுத்து விடுவோம். பின் நாங்களே பாத்திரங்களை வாங்கி கொண்டு வந்து விடுவோம். பெண்கள் அதை விற்பனை செய்து கொள்ள வேண்டும்,என்றார் இந்த திட்டம் மிக எளிமையாக இருந்தாலும், சாலையோரங்களில் இந்த உணவகங்கள் நடத்துவதில் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில், ஒருநாள் உணவு மீதமாகி நஷ்டம் ஏற்பட்டாலும், ஒரு வாரத்திற்கு அந்த பகு தியில் இருந்து உணவை வாங்க வரமாட்டார்கள். அதுமட்டுமில்லாமல், உள்ளூர் அரசியல்வாதிகள், அதிகாரிகள், கடைக்கு வருவோர் பலரையும் சமாளிப்பது ஒரு சவாலான காரியம் என்கின்றனர்.
சமூக மாற்றம்
சேதுலட்சுமி கூறுகையில், சென்னையில் மொத்தம் 63 இடங்களில், சாலையோர கடைகள் உள்ளன. இ.சி.ஆர்., கிண்டி, ஆழ்வார்பேட்டை, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இந்த கடைகள் சாலையோரங்களில் அமைந்துள்ளதால், முதலில் உணவகம் அமைக்க, அந்தந்த பகுதி மாநகராட்சி மற்றும் காவல் நிலைய அதிகாரிகளை சந்திப்போம். ‘‘இந்த திட்டத்திற்கு இதுநாள் வரை அனைவரும் உதவி செய்தே வந்துள்ளனர். அங்கு வரும் பிரச்னைகளுக்கு ஏற்ப அரசு அதிகாரிகளின் உதவியை நாடுவோம். பின், பெண்களே தனியாக அந்த கடையை நடத்தி கொள்ள வேண்டும், என்றார் இந்த திட்டம் வெறும் வேலைவாய்ப்பு என்றில்லாமல், சாதாரண குடும்பத்து பெண்களை, ஐ.டி., நிறுவனங்களின் உணவகங்களில் பணியாற்றவும் வாய்ப்பளிக்கிறது. நாள் ஒன்றுக்கு 7,000 சாப்பாடு தயாரிக்கப்படுகின்றன. இதில் 3,000 முதல் 3,500 வரை சாலையோர கடைகளுக்கும், மீதம் ஐ.டி., நிறுவன
உணவகங்களுக்கும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு மேலும் பலரது ஆதரவு கிடைத்தால், இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் கணேஷ்.இறுதியாக சேதுலட்சுமி கூறுகையில், ‘‘இந்த உணவகம் வெறுமனே, பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் என்பதையும் தாண்டி, குடும்பங்களில் முடிவுகளை எடுக்கும் இடத்திற்கு பெண்களை முன் னேற்றும். குழந்தைகள் வளர்ப்பு குறித்த விழிப்புணர் வையும் ஏற்படுத்தும்,’’ என்றார்.ஒரு சாப்பாட்டிற்கு தினசரி ௧ ரூபாய் வாடகை மட்டும் எங்களுக்கு அவர்கள் தர வேண்டும். 35 சாப்பாடு விற்றால், 35 ரூபாய் எங்களுக்கு வாடகை தரவேண்டும். அது அந்த பொருள்களின் மீது
அவர்களுக்கு பொறுப்பு வருவதற்காக வசூலிக்கப்படுகிறது
https://www.facebook.com/ecokitchen/notes
ECO-Kitchen, Chennai's Notes
- In addition to its Kathir entrepreneurship program, the Eco-Kitchen has two other brand names: Kathir Dhan and Out of the Box.
KATHIR DHAN is the donation program. If you want to do something for the community, but you don’t know how, you can contact Eco kitchen by phone (044-3040 2222) by email (at kathirdhan@ecokitchen.org orcustomercare@ecokitc... - The ECO KITCHEN (Enhancing Community Opportunities) is an eco-friendly 18,000-square-foot cooking facility that operates YRG CARE's Kathir program, an initiative to offer nutritious vegetarian meals at affordable prices.
There is a link between poverty, alcohol consumption and domestic abuse. In patriarchal Indian households, women are often the EeeeEEECO kitchen also provides organic meals?? A MUST TRY!!
No comments:
Post a Comment