Saturday, September 21, 2013

காசி யாத்திரை

காசிக்கு தம்பதியராகத்தான் போக வேண்டுமா?
தம்பதியராகப் போவது தான் விசேஷம். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராட சில நியதிகள் உண்டு. ஒன்று மனைவி அல்லது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு நீராட வேண்டும். இருவரும் இல்லாத பட்சத்தில் பசுமாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். இம்மூன்றிலும் தம்பதியராக நீராடுவதே உத்தமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இராமேசுவரத்தில் இராமபிரான் ஈசனை வணங்கிய இடத்தில் மண்ணை எடுத்துக் கொண்டு பிரயாகைக்குப் போய் கரைத்துவிட்டு,அங்கிருந்து கங்கை நீரை எடுத்துக்கொண்டு காசிக்குப்போய் விசுவநாதரை தரிசனம் செய்துவிட்டு, காயவில் பித்ருக்களுக்குச் செய்யவேண்டிய கர்மாக்களைச் செய்து முடித்துவிட்டு இராமேசுவரத்துக்குத் திரும்பி வந்து, கொண்டு வந்த கங்கை நீரால் இராமேசுவர நாத சுவாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு, ஊருக்குத் திரும்புவது. இதுதான் முழுமையான காசி யாத்திரை என்பது.

காசி என்ற பெயருக்கு ஒளி தரும் இடம் என்று பொருள் கூறுவார்கள். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக நான்கு மைல்கள். இதில் 64 நீராடும் கட்டங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இவற்றில் மிக முக்கியமானவை 5. இவற்றுக்கெல்லாம் காரணப் பெயர்களே வைக்கப்பட்டு இருக்கின்றன. சிலவற்றுக்கு, அருகில் உள்ள ஆலயம், கட்டிடத்தின் பெயரையே கொடுத்திருக்கிறார்கள். அஸி நதி இங்குதான் வந்து கங்கையில் சங்கமம் ஆகிறது. தசாசுவமேத கட்டம்- பத்து அசுவமேத யாகங்களைச் செய்த பலன் கிடைக்கக்கூடிய கட்டம்;வருணா கட்டம் ஖


வருணா நதி சங்கமாகும் காசியின் மறுமுனையில் உள்ள கட்டம்; பஞ்சகங்கார கட்டம்- ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமமாகும் இடத்தில் உள்ள கட்டம். மணிகர்ணிகா கட்டம் எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரதான நீராடும் கட்டம். ஐமுட் கட்டகளிலும் கங்கையில் நீராடவேண்டும். இங்கு பித்ருகளுக்கு காரியம் செய்யப்படுகிறது. காலை ஐந்து மணிக்கு தொடங்கினால், ஐந்து கட்டகளிலும், கங்கையிலும் நீராடி பித்ரு காரியம் செய்வதற்கு பிற்பகல் இரண்டு மணியாகும். பிற்பகலில் ஓய்வெடுத்து மாலையில் காசி விசுவநாதரை தரிசிக்கலாம்.மணிகர்ணிகா கட்டத்தை ஒட்டி மண்டபம் இருக்கிறது. இங்கே நீராடி இந்த மண்டபத்தில் அமர்ந்துதான், முக்கியமான பித்ரு கர்மாக்களைச் செய்கிறார்கள்.


இதை ஒட்டி அமைந்துள்ள அரிச்சந்திர காட் மிகப் பழைமையானது.இங்குதான் சந்திரமதி தனது மகன் லோகிதாசனைத் தீ மூட்டி எரிக்க வந்தாள். அரிச்சந்திரன் வெட்டியானாக வந்து மனைவியும், மகனையும் பார்த்தான். உண்மைக்குக் கிடைத்த உயர்வைத் தேவர்கள் இங்கேதான் அறிந்து கொண்டார்கள். அரிச்சந்திரா காட்டில் உடல் எரிக்கப்படுகிறது..இந்துக்களிடையே மிகவும் பெருமை தரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது.


அரிச்சந்திரன் வைத்துப் பூஜித்த மைசானேசுவரர்ஒஒ என்ற சிவலிங்கம் இன்றும் அங்கே இருக்கிறது. மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி மறைபவர்கள் முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம். மணிகர்ணிகாஷ்டகஒஒத்தில் ஆதிசங்கரர் இந்த கட்டத்தைப் பற்றி மிகச்சிறப்பாக கூறி இருக்கிறார். இங்கே நீராடியபின் மறைபவர்கள் இந்திரனும் சூரிய தேவனும் கை நீட்டி அழைத்துச் சென்று சொர்க்கத்தில் சேர்ப்பார்கள் என்பது நம்பிக்கை.



மணிகர்ணிகா கட்டத்தின் அருகில் ஒரு குளம் இருக்கிறது. முதலில் கங்கையில் நீராடி விட்டுப் பிறகு இதிலும் நீராடினால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள். சக்கரதீர்த்தம் என்ற இந்தக் குளம் மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்டது என்பது ஐதீகம். மகாவிஷ்ணுவ தனது கையில் உள்ள சக்கராஆயுதத்தினால் இந்தக்குளத்தைத் தோற்றுவித்தாகவும்,கங்கையில் மூழ்கி எழுந்த அவருடைய திருமேனியிலிருந்து வடிந்த புனித நீர் இந்தத் திருக்குளத்தை நிறைந்ததாகவும் சொல்லுகிறார்கள். இந்தக் குளத்தில் நீராடப் பார்வதியும், பரமேசுவரனும் வந்தார்களாம். அப்்படி நீராடியதும் ஈசன் ஆனந்த நடனம் ஆடத்தொடங்கி விட்டாராம். அப்போது அவர் காதில் அணிந்திருந்த குண்டலாபரணம் தெறித்து, முடியிலிருந்த மணியுடன் கங்கையில் விழுந்துவிட்டதாம்.பார்வதி தேவியின் கர்ண புஷ்பம்,விசுவநாதரின் [1] முடிமணி இரண்டும் சங்கமமான இடம் என்பதனால் அந்த நீராடும் கட்டத்துக்குத் தனி மகிமை இருக்கிறது.



இந்த மணிகர்ணிகா கட்டத்தில் நீராடியபின் சக்கர தீர்த்தத்தில் குளித்து,சிரார்த்தம் செய்யவேண்டும். இங்கு பலவகை தானங்கள் செய்வதைப் பார்க்கலாம். வசதியுள்ளவர்கள் பசுவை வாங்கி தானம் செய்கிறார்கள். மணிகர்ணிகா கட்டத்தை ஒட்டித் தாரகேசுவரர் ஆலயமும்,மேலே துர்க்கையின் கோயிலும் இருக்கின்றன. இவற்றை வலம் வந்து உள்ளே போய் சுவாமியைத் தொட்டுப் பூஜிக்கலாம்.கங்கை நீரை எடுத்து அபிஷேகம் செய்யலாம். மலர் மாலைகளைச் சார்த்தலாம்.பக்தர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.தாரகேசுவரர் தரிசனம் முடித்துக்கொண்ட பிறகுதான் காசி விசுவநாதரை தரிசிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம்.கையில் கங்கை நீரை எடுத்துச் சென்று விசுவநாதருக்கு அபிஷேகம் செய்யலாம்.



காசிவிசுவநாதர் ஆலயம் குறுகலான ஒரு சந்தில் இருக்கிறது. உள்ளே பிராகாரம் வழவழப்பான சலவைக் கல்லால் கட்டப்பட்டது. நீராடிவிட்டு வருபவர்கள்கவனமாக வரவேண்டும்.மையத்தில் காசிவிசுவநாதரின் கருவறை இருக்கிறது. கங்கை நீராலும்,பாலாலும்,வில்வ இலைகளாலும் அர்சித்து, அபிஷேகம் செய்யலாம். மலர்களை, மலர் மாலைகளை சாத்தி மகிழலாம்.



இரவு வேளையில் இங்கே மகேசுவர பூஜை நடக்கிறது. ஒரு மணி நேரம் பூஜை செய்கிறார்கள்.
சிவ தோத்திரம் சொல்லுகிறார்கள். படிப்படியாகச் சுவாமியை அலங்கரிக்கிறார்கள். முதலில் கங்கை நீர், பிறகு பால், தேன் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். நாகாபரணம் சிவலிங்கத்தின் முடியை அலங்கரிக்கிறது. ஐந்து முக தீபம் காட்டி அர்ச்சனை முடிக்கிறார்கள். ஏழு அந்தணர்கள் வாழ்க்கையின் ஏழு நிலைகளையும், பஞ்சமுக விளக்குகள் [தீபம்]ஐம்புலன்களையும் உணர்த்துவதாக விளக்கம் கூறுகிறார்கள்.



இந்த இரண்டையும் பயன்படுத்தி ஈசனை வழிபட வேண்டும் என்பது தத்துவம் ஆகும்.
காசிவிசுவநாதர் ஆலயத்தில் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. இந்த ஆலயத்தை அகல்யாபாய் என்ற ராணி முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கட்டியதாகச் சொல்லுகிறார்கள். கோயிலில் இருபத்தியிரண்டு மணங்கு நிறையுள்ள தங்கத் தகடுகள் உபயோகிக்கப்பட்டதாம். அதனால் இன்றும் காசிவிசுவநாதர் ஆலயம் தங்க ஆலயம் என்றே குறிப்பிடுகிறார்கள். காசிவிசுவநாதர் ஆலயம் அமைந்துள்ள அதே தெரு சற்றே தூரத்தில் மாதா அன்னபூரணியின் கோயிலும் அமைந்திருக்கிறது. காசிவிசுவநாதருக்கு தேவி உணவு அளித்த இடம். அதனால் காசியில் பசிப்பிணி இல்லை என்று சொல்லுகிறார்கள். இதை நிரூப்பதைப் போலவே இங்கு வரும் யாத்திரீகர்கள் அன்னதான் உற்சவம் நடத்துகிறார்கள்.



அழகான சித்திர வேலைப்பாடுகள் அமைந்த அன்னபூரணியின் கோயில் மராத்திய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலின் நடுவில் எண்கோண வடிவத்தில் மண்டபம் அமைந்திருக்கிறது. அதைப் பன்னிராண்டு கல்தூண்கள் தாங்குகின்றன. அம்மன் சந்நிதிக்கு எதிரே உள்ள சலவைகள் தளத்தில் பக்தர்கள் அமர்ந்து பஜனை செய்த வண்ணம் இருப்பதைக் காணலாம்.



கர்ப்பக்கிருகத்தில் உள்ள அன்னபூரணியைத் துவாரங்கள் செதுக்கிய பலகணியின் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். தேவியின் திருமுகம் மட்டுமே தரிசனத்துக்குக் கிட்டுகிறது. அன்னபூரணியின் அழகான அலங்காரத்துடன்,கீழே ஸ்ரீ சக்ரமேரு யந்திரம் இருக்கிறது.இடக்கரத்தில் தங்கக் கிண்ணம்,வலது கரத்தில் தங்கக் கரண்டி இவற்றுடன், பிச்சை ஏந்தி நிற்கும் இறைவனுக்கே அன்னம் அளிக்கிறாள் அன்னபூரணி.



அம்பாள் தனியாக அமர்ந்திருப்பதில்லை.இருபுறமும் ஸ்ரீ தேவியும்,பூதேவியும் கொலுவிருந்து,கையை தூக்கி ஆசீர்வதித்து அருளுகிறார்கள். இவையும் பொன்னால் ஆனது.விசுவேசுவரரின் உருவம் மட்டும் வெள்ளியால் ஆனது.அன்னபூரணியை தீபாவளியன்று தரிசிப்பது வெகு விசேஷம். அன்னபூரணி ஆலயம் அருகில் விசாலாட்சியின் ஆலயம் இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் இந்த ஆலயம் தமிழ் நாட்டு பாணியில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலான இந்த கோயில் நாட்டுக் கோட்டை செட்டியார் அமைப்பு பராமரித்து வருகிறது.



குத்து விளக்கின் ஒளியில் கோயில் கர்ப்பக்கிருகத்தில் தேவியைத் தரிசிக்கலாம். சிவலிங்கம், தண்டாயுதபாணி, விநாயகர், சண்டிகேசுவரர் ஆகியோர் சந்நிதிகளுடன் நவக்கிரங்களும் உண்டு. தமிழ் நாட்டு ஆலய அமைப்பிலேயே உள்ளது.



இங்கு நவராத்தியும்,சிவராத்திரியும் விசேஷமானது. காசி விசுவநாதர், அன்னபூரணி, விசாலாட்சி ஆகிய மூன்று ஆலயங்களிலுமே நாதசுர இசை உண்டு. தமிழ் நாட்டின் முத்திரையை அங்கே மனம் குளிரப் பார்த்து காது குளிர கேட்கலாம்.
விசுவேசம் - மாதவம் துண்டியும் - தண்டபாணிஞ்ச பைரவம்
வந்தே காசிம் குஹாம் கங்காம் பவானிம் மணிகர்ணியம்.
இது காசியில் உள்ள முக்கியமான மூர்த்திகள்.
காசியில் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு தெருவுக்கும் வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு படித்துறையும் ஒரு புராணத்தின் அங்கமாக விளங்குகிறது. ஑ஒகங்காஒஒ என்றால் ஓடிக்கொண்டு இருப்பவள் என்று பொருளாம்.இந்து மதத்தின் பிரயாணத்தை ஓடிக்கொண்டே கவனிக்கும் புனித நதி கங்கை. அதன் கரையில் அமைந்திருக்கும் மூன்று கோயில்கள். 


மாதவம் :-- திருவேணி சங்கமத்தில் வேணிமாதவர்,காசியில் பிந்துமாதவர்,இரமேசுவரத்தில் சேதுமாதவர் ஆகிய மூன்று மூர்த்திகளின் தரிசனமும்,காசி யாத்திரையில் முக்கியமானது.காசியில் பிந்துமாதவர் ஆலயம் பஞ்ச கங்கா கட்டத்தில் அமைந்திருக்கிறது.கார்த்திகை மாதம் முப்பது நாட்களும் பெண்கள் பஞ்சகங்க கட்டத்தில் கங்கையில் நீராடி விரதம் இருந்து பூஜை செய்கிறார்கள்.அகல் விளக்கு ஏற்றி சிறு கூடையில் வைத்து,மூங்கில் நுனியில் அந்தக் கூடையைத் தொங்க விடுகிறார்கள்.இதை ஆகாச தீபம் என்று வணங்குகிறார்கள்.



பஞ்ச கட்டத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து படிகள் மேலே போனால் பிந்து மாதவர் ஆலயத்தை அடையலாம். இங்கே உள்ள மூர்த்தி நாராணயன் சங்கு,சக்கர,கதா பதம சொரூபராகப் பெருமாள் நிற்கிறார்.



மண்டபத்தின் வலது புறம் ஜகஜீவனேசுவர் என்ற சிவலிங்கமும் பூஜைக்கு உரியதாக அமைந்திருக்கிறது. சிலாவடிவான பிந்து மாதவரின் இரண்டு பாதங்களை வெளியே காணப்படுகின்றன.அங்கு கங்கை நீரை அபிஷேகம் செய்வித்து,மலர்களைப் போடுகிறார்கள். கங்கா நீர், மலர் பிரசாதம் கிடைக்கிறது.



துண்டிம் :-- இது செந்தூர நிறத்தில் உள்ள விநாயகர் கோயில். நாம் சாலை ஓரத்தில் அமைத்து
வணங்கும் சிறு கோயில். சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே, விநாயகர் அமர்ந்திருக்கிற கோலத்தில் காட்சி தருகிறார். விநாயகருக்குச் செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்கிறார்கள். விநாயகரின் வடிவம் பூரணமாக இல்லை.துண்டி மகராஜ் என்று பக்தர்கள் விநாயகரை மிகுந்த மரியாதையுடன் அழைத்து வழிபடுகிறார்கள். காசிக்கு வருபவர்கள் கணபதி மகராஜிடம் உத்தரவு பெறாமல் போககூடாது என்று சம்பிரதாயம் இருக்கிறது.



தண்டபாணி :-- கேதாரேசுவரர் கோயிலுக்குச் செல்லும் வழியில் தண்டபாணியின் சிறு ஆலயம் அமைந்துள்ளது. இது முழுவதும் சலவைக் கல்லால் இழைக்கப்பட்டிருக்கிறது. முழுங்காலுக்கு நேரே இரு கைகளிலும் ஒரு தண்டத்தைப் பிடித்துக்கொண்டு,சுவாமி குத்திட்டு அமர்ந்திருக்கிறார். கழுத்திலும், தலைச்சுற்றியும் ருத்திராட்ச மாலைகள் அழகு செய்கின்றன.சிவகணங்களில் ஒருவர் என்று இங்கு வழிபடுகிறார்கள். சிவபெருமானை ஆராதித்துப் பெருமை பெற்ற தண்டநாயகன் இந்தத் தொண்டருக்குக் காசிக்கு வரும் பக்தர்கள் வணக்கம் செலுத்திவிட்டுப் போகிறார்கள்.



பைரவர் :-- காலபைரவர் ஆலயம் விசுவேசுவரர் ஆலயத்துக்கு ஒரு மைல் வடக்கே உள்ளது.காசிப் பட்டணத்துக்கே இவர்தாம் காவல்காரர் என்று சொல்லுகிறார்கள்.கோயில் வாயிலில் காசிக்கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டுகிறார்கள். அது உடல் நலத்திற்கும்,வாழ்க்கை வளத்துக்கும் காப்பாக அமையும் என்று சொல்லுகிறார்கள். பைரவருக்கு நாய்தான் வாகனம்.காசிக்கு வருபவர்கள் பைரவர்க்கு கணக்குச் சொல்லி விடைபெற்று செல்லவேண்டும் என்பது ஐதீகம்.



காசி:-- இங்கே காசி என்று குறிப்பிடுவது ஆதிகாசி.இது ஒருசிறு கோயில்.. இங்கு லிங்கமும், சிவமூர்த்தியும் இருக்கின்றன.கங்கை நீரையை சுவாமி மீது பொழிந்து மலர்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.



குஹாம் :- இது சிறு வாயிற்படி கொண்ட குகை.இந்த குகையின் வாயிலில் ஜைகிஷ்வ்யர் என்ற முனிவர்க்கு சிவபெருமான் தரிசனம் கொடுத்து மோட்ச பதவி அளித்ததாகக் கூறுமிறார்கள்.இந்த குகை வழியாகச் சென்று கைலாசத்தை அடையலாம் என்று ஒரு சம்பிரதாயக் கதையும் கூறுகிறார்கள்.விசேஷ பூஜை எதுவும் இல்லை.தரிசனம் மட்டும்தான் கிடைக்கிறது.



கங்காம் :- இது ஆதிகங்கை இருந்த இடம்.பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான் என்பது புராணம். இங்கே கங்கையைத் தடாகமாக, நீர் நிலையாகக் கொலுவிருக்கச் செய்திருக்கிறார்கள் ஆதிகங்கையின் நீரைப் புரோட்சணம் செய்து கொண்டால்தான் கங்கை குளியல் பலன் முழுமையாகும்.

திருச்சிற்றம்பலம்


பவானி; திதி கொடுக்க வரும் பொதுமக்களை ஏமாற்றும் போலி புரோகிதர்களை கட்டுப்படுத்த புது திட்டம்
ஈரோடு மாவட்டம், பாவனியில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில், காசிக்கு அடுத்தபடியானது என்பதால், பரிகாரம், முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் போன்றவைகளுக்காக இங்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்வர்.
கடந்த சில காலமாக, இங்கு போலி புரோகிதர்கள் நடமாட்டத்தால், பக்தர்களிடம் பணம் பறிப்பு, திருட்டு போன்ற பல சம்பவங்கள் நடந்ததால், கோவில் நிர்வாகத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இதனால் புரோகிதர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும், கோவில் பின்னால் புரோகிதம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மந்திரம் தெரிந்தும், அடையாள அட்டை இன்றி, பலர் வெளியேற்றப்பட்டதால், புரோகிதர்கள் அனைவரையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பரிகாரம் செய்யும் புரோகிதர்கள், இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்தி, டோக்கன் பெற்று பரிகாரம் செய்ய வேண்டும், பெண்களை பரிகாரம் செய்யும்போது, உடன் அமர வைக்கக்கூடாது. பூஜை செய்த பொருட்களை திரும்ப பயன்படுத்த கூடாது.
வரும் செப்டம்பர் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள், புரோகிதர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். அதில், தேர்வானவர்கள் மட்டுமே, இனி வரும் காலத்தில் புரோகிதம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் தவறியவர்கள், கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவில் நிர்வாகம் மூலம் பாடத்திட்டம் வழங்கப்படும். பக்தர்களை, எந்த புரோக்கரும் வலுக்கட்டாயமாக அழைக்கக்கூடாது, என முடிவுகள் செய்யப்பட்டது.
அறநிலைய துறை இணை ஆணையர் நடராஜன், ஈரோடு உதவி ஆணையர் வில்வமூர்த்தி, சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, பவானி போலிஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் உட்பட 80க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment