முருகேசன், 2008 முதல், வாழை நாரில் பை, கயிறு, பெட்ஷீட், பாய், ஜன்னல் திரை தயார் செய்கிறார். இதற்காக, வாழை பட்டையை மெல்லியதாக உரிக்கும் கருவியை, அவரே தயாரித்து, 40 பேர் வரை, பணியில் அமர்த்தி உள்ளார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, இப்பொருட்களை குறைந்தபட்சம், 20 முதல், 2,000 ரூபாய் வரையில் விற்கிறார். வாழைநார் திரிக்கும் கருவி: சைக்கிளில் உள்ள சக்கரத்தினைப் பயன்படுத்தி கயிறு திரிக்கும் சாதனத்தை உருவாக்கியுள்ளார் விவசாயி. இதன்மூலம் அவருக்கு சராசரியாக 15,000 மீட்டர் அளவிற்கு கயிறு உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. 40 கூலியாட்கள் மூலம் இரண்டு தொழில்நுட்ப கூடங்களை அமைத்தார். இன்று அவர் தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு அவர் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை (வாழைநார் பைகள், கயிறு) எடுத்துச்சென்று வியாபாரம் செய்கிறார். மத்திய அரசு விவசாயியைக் கவுரவித்து 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது என்று கூறும் விவசாயியின் தொடர்பு முகவரி: பி.எம்.முருகேசன், மேலக்கால் கிராமம், திருமங்கலம், மதுரை. 93605 97884.
உழவர் கண்டுபிடிப்பு - ராஜராஜன் 1000க்கு நடவு குறியீட்டுக்கருவி: விவசாயி தன்னுடைய நிலத்தில் களிமண் பாங்கு அதிகம் இருப்பதால் நடவு குறியீட்டுக் கருவியினை பரிந்துரைப்படி கடைபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார். எனவே தானே ஒரு குறியீட்டுக் கருவியினை உருவாக்கினார். அதாவது மூன்றேமுக்கால் அடி நீளத்தில் 11' பிவிசி அளவுள்ள உருளையில் எடை குறைந்த, எளிதில் உபயோகிக்கக்கூடிய குறியீட்டுக் கருவியை தயாரித்துள்ளார். இக்கருவி உபயோகத்தால் தனக்கு ஒரு ஏக்கர் நடவிற்கு 12 பணியாட்களுக்குப் பதிலாக 6 நபர்களே தேவைப்பட்டனர். இதன் பயன்பாடு தற்பொழுது 980 எக்டர் நிலத்தில் உள்ளது என்று கூறுகிறார் விவசாயி. மற்ற உழவர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். இதன் பயன்பாடு நேரடி நெல் விதைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.350/-தான். இதனை பயன்படுத்தினால் விதை அளவு குறைந்து கோனோ களைக்கருவி உபயோகத்திற்கு ஏற்றதாக இருக்கிறது என்று கூறுகிறார் விவசாயி. தொடர்புக்கு: பாலகுரு, கருணாவூர் கிராமம், மன்னார்குடி தாலுகா, திருவாரூர். 94425 25236.
நெல்லில் சக்கர உருளை வடிவ களைக்கருவி: சுமார் 10 கிலோ எடையுள்ள இக்கருவியை வடிவமைத்த விவசாயி கூறுவது: இக்கருவி களைகளை சுலபமாக அகற்றி மண்ணில் அமிழ்த்திவிடுவதால் தனக்கு களை மேலாண்மை உர மேலாண்மையில் வெற்றி கிட்டியது என்கிறார். இக்களைக்கருவியினை மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தின் ஆலோசனையின்படி பிற உழவர்களுக்கு விலைக்கு கொடுப்பதில் சராசரியாக ரூ.15,000 வருமானம் கிடைக்கிறது என்று கூறும் விவசாயியின் தொடர்பு முகவரி: சண்முகசுந்தரம், கல்லேரிப்பட்டி, ஆத்தூர், சேலம். 94427 82142.
No comments:
Post a Comment