இமயமலையில் இருப்பதாகச் சொல்லப்படும் பாபாஜியின் தந்தை சுவேதநாதைய்யர் இக்கோயிலில்தான் அர்ச்சகராக பணியாற்றினார். இங்கிருந்து சற்று தூரத்தில் பாபாஜியின் அவதாரத்தலத்தில் அவருக்கு கோயில் உள்ளது.
நிர்வாக அதிகாரி, அருள்மிகு முத்துக்குமர சுவாமிதிருக்கோயில், பரங்கிப்பேட்டை - 608 507. கடலூர் மாவட்டம்.
+91 84184 11058, 98940 48206 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் உள்ள பரங்கிப்பேட்டையில், பஸ் ஸ்டாண்ட் அருகில் இக்கோயில் உள்ளது.
இழந்தது கிடைக்க வழிபாடு: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய திசையில் (வடகிழக்கு) அமைந்த தலம் இது. பொருளை இழந்தவர்கள் மீண்டும் கிடைக்கவும், தெரிந்தோ, தெரியாமலோ பதவியிறக்கம் அல்லது வேலை இழந்தவர்கள் மீண்டும் பணி கிடைக்க சிவனுக்கு வஸ்திரம் அணிவித்து, சம்பார் சாதம் அல்லது பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். விசாலாட்சி அம்பிகைக்கு வடை, சர்க்கரைப்பொங்கல் படைத்து லலிதா சகஸ்நாமம் பாராயணம் செய்து வணங்குகின்றனர்.
விசேஷ பிரம்மா: இந்திரன், இங்கு கார்த்திகை முதல் ஞாயிற்றுக் கிழமையில் வணங்கி அருள் பெற்றானாம். எனவே, இந்நாளில் இங்கு வழிபடுவது விசேஷம். கார்த்திகை திங்களில் 108 சங்காபிஷேகமும் நடக்கும். இங்கு அமர்ந்து இரண்டு கைகளையும் கூப்பி, வணங்கிய நிலையில் இருக்கிறார். இவரது தரிசனம் மிக விசேஷம். அருகிலுள்ள துர்க்கை எட்டு கைகளுடன் காட்சியளிப்பது மற்றொரு சிறப்பு. வளர்பிறை அஷ்டமியன்று இவளுக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும்.
தேன் பிரசாதம்: முத்துக்குமரர் முன்புறம் ஐந்து, பின்புறம் ஒன்று என ஆறு முகங்களுடன், இந்திர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். கிருத்திகை நாட்களில் இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். செவ்வாய் தோறும் இவருக்கு "சத்ருசம்ஹார திரிசதி' அர்ச்சனை நடக்கிறது. அப்போது, முருகனின் ஆறு முகங்களுக்கும் செவ்வரளி மாலை அணிவித்து, தனித்தனியே தீபாராதனை செய்து, தனித்தனி நைவேத்யத்துடன் பூஜை நடக்கும். இவ்வேளையில் இவருக்கு பிரதானமாக தேன் படைத்து, அதையே பிரசாதமாகத் தருவர். மலைப்பகுதியில் பிறந்த வள்ளியின் கணவன் என்பதன் அடிப்படையில், தேன் படைக்கின்றனர்.
நாகதோஷம் மற்றும் களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளோர் நாகருக்கு தாலி மற்றும் சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர்.
No comments:
Post a Comment