Sunday, May 3, 2015

நாடி சுத்தி, பிராணாயாமம்

வாழக்கையை வளமாக்கும் இரகசிய சாதனைகள்
மாத சந்தி திதி சந்தியினை போன்று நட்சத்திர சந்தியின் ரகசியம் வெளியில் தெரியாமல் மறைக்கபட்டுள்ளது.ஒவ்வொரு நபரும் எதாவது ஒரு நட்சத்திரத்தில்தான் பிறந்திருப்பார் (உம்) ஒருவர் மே~ம் இராசியில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று எடுத்துக்கொண்ட அவருடைய ஜென்ம நட்சத்திரம் பரணி ஆகும். இந்த பரணி நட்சரத்தின் மூலம் தான் ஜாதகரின் கர்மா பற்றிய ரகசியங்களை ஒரளவு தெரிந்து கொண்டு அதற்கான பிராயசித்த பரிகாரங்களை செய்து வாழ்கை முன்னேற்றம் அடையலாம். மாதத்தில் ஒருநாள் தோராயமாக 27 நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு நபரின் நட்சத்திரமும் கட்டாயவரும்.
இதில் நட்சத்திரசந்தி என்பது தான் பிறந்த நட்சத்திரத்தின் முத்தைய நட்சத்திரம்
முடியும் தருவாயில் உள்ள ஒரு மணி 30 நிமிட நேரமும் தன்னுடைய ஜென்ம நட்சத்திரம் ஆரம்பித்து ஒருமணி 30 நிமிட நேரமும் உள்ள இடைபட்டகால அளவே நட்சத்திர சந்தி என்று அழைக்கபடுகிறது.
27 நட்சத்திரங்களின் மற்திரபீஜங்கள்
அசுவனி – அம்
பரணி – பம்
கார்த்திகை – கம்
ரோகிணி – ரோம்
மிருகசீரிடம் – ம்ரும்
திருவாதிரை – ஆம்
புனர்பூசம் – பும்
பூசம் – பூம்
ஆயில்யம் – ஆம்
மகம் – மம்
பூரம் – பூம்
உத்திரம் – உம்
அஸ்த்தம் – ஹம்
சித்திரை – சிம்
சுவாதி – ஸ்வாம்
விசாகம் – விம்
அனு~ம் – அம்
கேட்டை – ஜேம்
மூலம் – மும்
பூராடம் – பூம்
உத்திராடம் – உம்
திருவோணம் – திம்
அவிட்டம் – அம்
சதயம் – சம்
பூரட்டாதி – பூம்
உத்திரட்டாதி – உம்
ரேவதி – ரேம்
மேற்படி அவர்களின் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மந்திர பீஜங்களை காலையில் பத்து நிமிடம் மற்றும் மாலையில் பத்தி நிமிடம் முறை தவறாமல் ஜெபித்து வர வேண்டும். இதனுடன் கூடவே நாடி சுத்தி பிராணாயாமம் பயிற்சியை தினசரி செய்து வரவேண்டும் பெறும்பாலும் வடக்கு திசை நேக்கி அமர்ந்து ஜெபித்து வருவர மிகவும் நல்லது. மேலும் நட்சத்திர அதிபதியின் கிரகத்தின் நிறத்தில் உடைய துணியை விரித்து அதன் மேல் அமர்ந்து ஜெபித்த வர படிபடியாக கர்ம பலனின் வேகம் குறையும். இப்படி செய்து வரும் பொழுது அவரவர்களின் நட்சத்திர சந்திவரும் காலத்தில் கட்டாயம் மேற்படி ஜெபத்தினை சுமார் 3 மணிநேரம் ஜெபித்து வர நம்முடைய பாவ பதிவுகள் படிபடியாக குறையும். முடக்கங்கள் எல்லாம் விலகும்.எப்படிபட்ட மாந்ரீக பாதிப்புகள் நமக்கு இருந்தாலும் நட்சத்திர சந்தியின் காலத்தி மிருகி முத்திரையை காட்டி 108 தடவை பீஜமந்திரத்தை ஜெபிக்க கட்டுகள் முடக்கங்கள் உடையும் இறுதியாக ஓவ்வொருவரும் அவர்களுக்கு தாமே
தலையில் அட்சனை தலையில் போட்டு 27 தடவை பீஜ மந்திரத்தை செல்லி முடிக்க வேண்டும்.
மேற்படி மந்திர பீஜங்களை நாடி சந்தி பிராணயாம் செய்யும் போது பயன்படுத்தும் முறையை நேரடி பயிற்சி மூலம் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும்.ஏனெனில் இந்த பயிற்சி செய்து வரும்பொழுது நோய் பாதிப்புகள் படிபடியாக குறைந்து ஆரோக்கியம் அதிகரிக்கும் மேலும் காம உணர்வு அதிகரிக்கும். எனவே தான் நேரடி பயிற்சி மூலம் மட்டுமே சரியாக செய்ய முடியும் .
வேணும் சுபம் வல்லநாட்டு சாமி அருள்துணை
ஸ்ரீ கண்னையா யோகி அருள் துணை
ஸ்ரீ வெள்ளைசாமி அடிகள் அருள் துணை.
வாழக்கையை வளமாக்கும் இரகசிய சாதனைகள்    http://siddhargalarul.com/?page_id=122

உடலுக்குள்ளே எவ்வளவோ நரம்புகள் இருந்தாலும், உயிரோட்டத்தை உடைய 72000 நரம்புகளையே நாடிகள் என்பார்கள். நாடி சுத்தி பிராணாயாமம் செய்வதால் இந்த நாடிகள் தூய்மையடைந்து உயிரோட்டம் இந்த உடல் முழுவதும் தங்கு தடையின்றி பரவுவதற்கு ஏதுவாகிறது. இடது மூக்கு வழியான சுவாசம் சந்திர கலை, வலது மூக்கு வழியான சுவாசம் சூரிய கலை என்பது யாவரும் பொதுவாக அறிந்ததே. எனினும் சந்திரன் மறைந்த பிறகு திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் இரண்டு மணி நேரம் சந்திர கலையும், ஞாயிறு, செவ்வாய், சனிக் கிழமைகளில் இரண்டு மணி நேரம் சூரிய கலையும் பயிற்சி செய்வது மிகவும் நல்லது. காற்றை இரண்டு துவாரத்திலும் ஒரு சேர உறிவது நல்லதல்ல. இதை கேவல சுழுமுனை என்பார்கள். இதனால் உடலுக்குப் பெருங்கேடு விளையும். ஒரு மூக்கின் வழியாக இழுத்து தொப்புள் வரை கொண்டு சென்று நிறுத்தி, மறு துவாரம் வழியாக விடுவதே பூரண மூச்சாகும். இதையே பூரண சுழுமுனை என்பார்கள். பூரண மூச்சை இயல்பாகக் கொண்டவனுக்கு நோய் நொடிகள் வரவே வராது. அவன் மார்க்கண்டேயனைப் போல சிரஞ்சீவி போல வாழ்வான்.
பொதுவாக நம் முன்னோர்கள் மூச்சுக்கலையை யோகாசனத்தோடு சேர்த்துதான் செய்திருக்கிறார்கள். காலப் போக்கில் பிராணாயாமம் குறித்து பல வகையில் ஆராய்ந்து அது தனியாகவே பல முறைகளில் செய்யப்படுகிறது. இதில் அடங்கியுள்ள மூன்று நிலைகளான ரேசகம், பூரகம், கும்பகத்தில் ரேசகத்தின் நேரத்தை படிப்படியாக அதிகரிப்பவனுக்கு ஆயுளும் அதிகரிக்கும் என்பது திருமூலர் வாக்கு. இந்தப் பிராணாயாமத்தின் தொடர்ச்சியாக பந்தங்களும், முத்திரைகளும் நம் முன்னோர்களால் தரப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஜலந்திரபந்தம், மகா வேதை, எண்முக முத்திரை, மூலபந்தம் எனபவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜலந்திர பந்தம் - சித்தாசனம் அல்லது பத்மாசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, நெஞ்சை சற்று நிமிர்ந்த நிலையில் வைத்துக் கொண்டு இழுத்த சுவாசத்தை மெதுவாகப் பூரணமாக வெளியற்றி தலையைத் தாழ்த்தி தொண்டைக் குழியில் தாடை படுமாறு வையுங்கள். நெஞ்சைத் தாழ்த்தக் கூடாது. இயல்பாகச் செய்ய வேண்டும். முரட்டுத்தனமாகச் செய்யக் கூடாது. இரண்டு கண்களாலும் மூக்கின் நுனியைப் பாருங்கள். கைகள் யோக முத்திரையில் இருக்கட்டும் இதுவே ஜலந்திர பந்தம். ஆரம்பத்தில் அதிக நேரம் இந்நிலையில் இருக்க முடியாது. பழகி வரும் போது எளிதாகி விடும். சிலர் மூச்சை இழுத்து கும்பிக்கும் போது தாடையை மார்போடு வைத்தால் ஜலந்திர பந்தம் என்பார்கள். இதனால் செல்களில் உட்சுவாசம் அதிகரிக்கிறது. இரத்த ஓட்டம் கழுத்தின் கீழ் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உடலியக்கத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி மன அமைதியை உண்டாக்கும். இதனால் சுவாசம் தறிகெட்டு உட்புகாமல் சீராகப் புகுந்து உள்ளுறுப்புகளைச் சீராக இயக்கும். மன ஓட்டம் கட்டுப்படும்.

மகா வேதை - முதலில் கால்களை நீட்டி உட்காரவும். பிறகு இடக் காலை மடித்து மலத்துவாரத்தை குதி காலால் மூடவும். அதன் பிறகு வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும். ஜலந்திர பந்தம் போடவும். இப்போது இரு கைகளையும் பக்க வாட்டில் தரையில் ஊன்றி உடலை மேலே தூக்கவும். இப்போது மூலத்தை இடது குதிகாலால் மெதுவாகத் தட்டவும். இதுவே மகா வேதை. இப்பயிற்சியினால் நரம்பு செல்களில் பிராண ஓட்டம் அதிகரிக்கும். குண்டலினியில் அசைவு ஏற்படும்.
எண்முக முத்திரை. மூலாதார தசைகளை நன்றாக உள்ளிழுக்கவும். இடது கை பெருவிரலால் இடது காதையும், வலது கை பெரு விரலால் வலது காதையும் அடைக்க வேண்டும்.அடுத்தபடியாக இடது கை ஆள்காட்டி விரலால் இடது கண் மேல் இமையையும், வலது கை ஆள்காட்டி விரலால் வலது கண்ணின் மேல் இமையையும் மூடவேண்டும்.இடது கை நடு விரலால் இடது மூக்குத் துவாரத்தையும், வலது கை நடு விரலால் வலது மூக்குத் துவாரத்தையும் மூட வேண்டும். இடது கை மோதிர விரலால் வாயின் இடது பக்கத்தையும், வலது கை மோதிர விரலால் வாயின் வலது பக்கத்தையும் மூடி அழுத்தி மூடவும். நாக்கை மேல் தாடையின் உட்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளவும். இதுவே எண்முக முத்திரை. இந்த முத்திரையை பயிற்சி செய்பவர்கள் இடது மூக்குத் துவாரத்தில் உள்ள நடுவிரலைத் தளர்த்தி மெதுவாக காற்றை உள்ளே இழுக்க வேண்டும். இழுத்த பிறகு மூக்குத் துவாரத்தை விரலால் மூடி விட வேண்டும். இப்போது இழுத்த நேரத்தைப் போல நான்கு மடங்கு நேரம் காற்றை உள் நிறுத்தி கும்பிக்க வேண்டும். பிறகு வலது மூக்குத் துவாரத்தை அடைத்துள்ள விரலைத் தளர்த்தி மெதுவாக இழுத்த நேரத்தின் இரண்டு மடங்கு நேரம் வெளியே விட வேண்டும். இப்பயிற்சியினால் நரம்பு செல் உட்பட அனைத்து செல்களிலும் உட் சுவாசம் அதிகரித்து அதி பிராணவாயு கிடைக்கும். இதனால் ஆயுள் கூடும்.
மூலபந்தம் - ஜலந்திர பந்தத்தில் இருந்து கொண்டு மூலத் தசைகளை உள் நோக்கி இழுப்பதே மூல பந்தம். இதைப் பயிற்சி செய்பவர்களுக்கு உணர்வுகள் அடித்தள மூளை வரை சென்று நாளமில்லாச் சுரப்பிகளை நன்கு , சீராக இயங்கச் செய்திடும். ஜலந்திர பந்தம், எண்முக முத்திரை, மூலபந்தம் மூன்றும் ஒரு சேர செய்யும் போது உள்ளே சென்ற காற்றானது எந்த வழியாகவும் செல்ல முடியாமல் மூலாதாரத்திற்கு மேல் உள்ள நடு நாடியின் மூடியிருக்கும் வாசலில் போய் மோதும். மேலும் மகாவேதை செய்யும் போது மூலாதாரத்தை குதிகாலால் தட்டும் போது மூலாதாரத்தில் உள்ள நரம்புக் கொத்துகள் சூடேறும். இப்போது கும்பகத்தால் கடைத்த பிராண சக்தியும் உடலின் விந்து சக்தியும் மனதின் சக்தியும் சேர்ந்து சூடேறி விழித்த நிலையில் இருக்கும் குண்டலினியை உந்துத் தள்ளுகிறது. இதனால் நடு நாடி எளிதில் திறந்து விடும். அது எதனால் என்றால் வாயுவுடன் சேர்ந்த மகா சக்தி வாயு ரூபம் கொண்டு மேலெழும்புகிறது. வாயு மேல் நோக்கிச் செல்லும் தன்மை உடையது. மேலும் தலை உச்சியில் பிரம்மரந்திரத்தில் ஒரு கண்ணுக்குத் தெரியாத துளை உள்ளது. மற்றவழிகள் அடைக்கப்பட்டுள்ளதால் அது நோக்கி மகா சக்தி இழுக்கப்படுகிறது.
''வடிவு பத்மாசனத் திருத்தி மூல வனலையே
மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து நாலையு
முடிவு முத்திரைப் படுத்தி மூல வீணா தண்டினால் முளரி யாலயங் கடந்து மூல நாடி யூடு போய்.....
என்று சிவ வாக்கியர் பாடுவது இதைத்தான். மகா சக்தியானது ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூவான மூளையைச் சென்றடைந்து ஹைப்போ தலாமஸ் எனும்அடித்தள மூளை வழியாக பிட்யூட்டரி சுரப்பியை அழுத்துகிறது. இதனால் அங்கு உடல் வளர்ச்சிக்குத் தேவையான சுரப்பு நீர் அதிகம் சுரக்கிறது. இதுவே அமிர்தம் என்றும், சோம ரசம் என்றும் சொல்லப்படுகிறது. இதை உண்ட சாதகரின் உடல் அழியாத் தன்மையை பெற்று விடுகிறது. ஜலந்திரபந்தம் மற்றும் மூலபந்தம் செய்து கும்பிப்பதால் மகா வேதையால் சூடேறி கிளம்பத் தயாரகத் தவித்துக் கொண்டிருக்கும் மகாசக்தி பிராணனோடு கலக்கும். பிறகு மூலபந்தம் போட்டு எண்முக முத்திரை செய்யும் போது அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருப்பதால் வாயு ரூபத்தில் இருக்கும் மகா சக்தி நடுநாடியைத் திறந்து கொண்டு அனைத்து ஆதாரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை சென்றடையும். இது நடை பெறுவதற்கு மனோ சக்தியும் அவசியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே குண்டலின் மேலேறுவது என்பது அஷ்டாங்க யோகத்தின் ஏழு நிலைகளும் விடா முயற்சியுடன் முழுமையாகவும், முறையாகவும் கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். குருவே துணை. குரு போற்றி. குரு திருவடிகள் சரணம். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
https://ta-in.facebook.com/PayanamTetal/posts/254225604740423

No comments:

Post a Comment