Monday, May 11, 2015

தங்கத்தில் கலப்படத்தை கண்டுபிடிக்க புதிய கருவி: நகையை வைத்தால் 'கலப்பு' எவ்வளவு என கூறிவிடும்

இதுகுறித்து கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன் கூறியதாவது: ஓஸ்மீயம், பல்லேடியம், ருத்தீனியம், இரிடியம் ஆகிய வெள்ளை உலோகங்கள் தற்போது பெரும்பாலான தங்க நகைகளில் கலக்கப்படுகின்றன. இதைக் கண்டறிவது மிகவும் கடினம். நகைகளை உருக்கினால்தான் இந்த உலோகங்களைக் கண்டு பிடிக்க முடியும். அதுவும், 2,200 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப் பப்படுத்த வேண்டும். ஆனால், அந்த அளவு வெப்பத்தில் தங்கம் துகளாக மாறி காற்றில் கலந்துவிடும். இந்த முறைக்கு மாற்றாக, தங்கத்தின் தூய தன்மையை எளிதில் கண்டறிய தற்போது எக்ஸ்.ஆர்.எஸ் (XRS) என்ற கருவி உள்ளது. இந்த கருவியில் ஒரு தங்க நகையை வைத்தால், அதில் எந்த அளவுக்கு தங்கம், வெள்ளி, செம்பு, இதர உலோகங்கள் உள்ளன என்பதை சிறிது நேரத்தில் கண்டறிந்து தெரிவித்துவிடும்.
 http://tamil.thehindu.com/india/ece
தங்க நகைகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ள வெள்ளை உலோகங்களைக் கண்டுபிடிக்க உதவும் எக்ஸ்.ஆர்.எப். கருவி
தங்க நகைகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ள வெள்ளை உலோகங்களைக் கண்டுபிடிக்க உதவும் எக்ஸ்.ஆர்.எப்.கருவி 

No comments:

Post a Comment