ஆன்மிக நெறியில் கடவுளர்களின் திருக்கரங்கள் பெரிதும் போற்றப்படுபவை.
கருணையைப் பார்வையில் தேக்கி பக்தர்களை நோக்கும் கடவுளரின் திருவுருவங்கள்,
தங்களின் ஆசியை கரங்களின் வழியாகவே அன்பர்களுக்கு வழங்குவதாக ஐதீகம்.
அதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும்.
பிறகு நமது வலது உள்ளங்கையை விரித்துப்
பார்த்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரித்து விட்டு, வலது
உள்ளங்கையை நம் கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும்.
“கராக்ரே வஸதே லக்ஷ்மீ
கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்”
- என்னும் ஸ்லோகம் வழக்கில் உள்ளது.
வலது
கையின் நுனியில் லக்ஷ்மியும், மத்யத்தில் ஸரஸ்வதியும், மூலத்தில்
கெளரியும் வாசம் செய்வதால் விடியற்காலம் இவ்வாறு செய்யும் கரதர்சனம்
மங்களத்தைக் கொடுக்கும்.]
ஆண்டனை இரு கரம்கூப்பித் தொழுவதற்கும், கரங்களால் மலர் கொய்து இறைப்பணிகள்
செய்வதற்கும் உதவும் கைகளே இறைவனின் அருளை முதலில் பெரும் உடலின் பாகம்
என்றும் சொல்வர். இத்தனை பெருமைக்குரிய நம் உள்ளங்கையில் இறைவன் வாசம் செய்கிறான் என்பதும்
பக்தர்களிடையே காலம்காலமாக நிலவிவரும் ஐதீகம். இதன் தொடர்ச்சியே காலையில்
கண் விழித்து எழுந்த பின், நம்முடைய உள்ளங்கையில் வாசம் செய்யும் இறைவனை
நாம் தரிசிக்கும் செயல்.
இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி
தரும், இறையுருவத்தின் பெருமையைக் கைகள் வெளிப்படுத்தும். இதனால்தான்
கைகளைக் கடவுளுக்கு இணையாகச் குறிப்பிடுகிறது வேதம்.
No comments:
Post a Comment