தனது வீட்டுத்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு சிறுநீர் ஊற்றி வளர்த்ததாக
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இத்தகவல் சமூக இணையதளங்க
ளில் பிரபலமாகி வருகிறது.
வறட்சிக்கு எதிரான நீர்ப்பாசன முறைகள் குறித்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய
அமைச்சர் நிதின் கட்கரி, “டெல்லியில் எனக்கு பெரிய பங்களா உள்ளது. அங்கு
சுமார் ஒரு ஏக்கர் பரப் பளவில் ஏராளமான மரங்கள் உள்ளன. எனது சிறுநீரை ஒரு
பிளாஸ்டிக் கேனில் சேமிக்கத் தொடங்கினேன். அது 50 லிட்டர் அளவுக்கு
சேர்ந்தவுடன், எனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள சில செடிகளுக்கு மட்டும்,
சேமித்து வைத்த சிறுநீரை தோட்டக்காரர் உதவியுடன் பாய்ச்சினேன். மற்ற
செடிகளை விட சிறுநீர் ஊற்றப்பட்ட செடிகள் ஒன்றரை அடி உயரம் கூடுதலாக
வளர்ந்தன. இதை உங்களிடம் சொல்வது சிரமம்தான். இதனை தவறாக புரிந்துகொள்ள
வேண்டாம். நான் ஒரு பரிசோதனை முயற்சியாகவே இதனைச் செய்தேன். நீங்கள்
உங்கள் சிறுநீரை சேமித்து செடிகளுக்கு பயன்படுத்துங்கள். அதில்,
யூரியாவும், நைட்ரஜனும் இருக்கிறது. சிறுநீரை நீங்கள் ஆரஞ்சு மரத்துக்கு
ஊற்றினால், அதன் வளர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும்” எனத் தெரிவித்தார்.
நிதின் கட்கரியின் இந்த பேச்சு யூ டியூப்பில் வெளியாகியுள்ளது. இதனைப்
பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் கேலியான கருத்துகளைப் பதிவு செய்து
வருகின்றனர்.
http://tamil.thehindu.com/india/article7175784.ece
http://tamil.thehindu.com/india/article7175784.ece
No comments:
Post a Comment