ஜிங்க் நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும் ஆண்களில்
உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோனின் அளவை சீராக வைத்துக் கொள்ள ஜிங்க் மிகவும்
இன்றியமையாதது. அதிலும் ஆண்களுக்கு வயதாகும் டெஸ்டோஸ்டிரோனின் அளவு
குறைவதால், புரோஸ்டேட் சுரப்பியானது வீக்கமடைய ஆரம்பிக்கும். எனவே ஆண்கள் எப்போதும் ஜிங்க் நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுத்து வர வேண்டும்.
உள்ளாடை அணிவதை தவிர்க்க வேண்டாம் சிலர்
பேண்ட், ஜீன்ஸ் அணியும் போது உள்ளாடை அணியமாட்டார்கள். அப்படி அணியாமல்
இருந்தால், பேண்ட் அல்லது ஜீன்ஸானது அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுத்து,
புரோஸ்டேட் சுரப்பியை பாதிப்பிற்குள்ளாக்கும். இப்படியே நீடித்தால்,
நாளடைவில் புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கமானது ஏற்படக்கூடும்.
பச்சை பூண்டு சாப்பிடவும் பூண்டில்
அல்லியம் என்னும் பொருள் அதிகம் உள்ளது. இது புரோஸ்டேட் புற்றுநோய் வருவதை
20 சதவீதம் குறைக்கும். எனவே தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக
சாப்பிடுங்கள்.
உலர்ந்த கற்பூரவள்ளி (Oregano) உலர்ந்த
கற்பூரவள்ளியில் ஆன்டி-கேன்சர் பொருள் அதிகம் இருப்பதால், இதனை உணவில்
சேர்த்து வந்தால், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை இவை அழித்துவிடும்.
மேலும் இது புரோஸ்டேட் செல்களுக்கு மிகவும் சிறந்தது.
No comments:
Post a Comment