1990ல், ஐயப்ப விக்ரஹம் ஒன்று செய்யப்பட்டு, பம்பைநதியில் ஆராட்டும்,
சபரிமலை 18படியேற்றி விபூதியும் சாத்தப்பட்டது. பின்னர் அஷ்டமங்கள
பிரசன்னம் பார்த்ததில், அந்த விக்ரஹத்தை, நங்கநல்லூர் ஸ்ரீசபரி சைதன்ய
÷க்ஷத்திரத்தில், தர்மசாஸ்தா என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்ய உத்தரவு
கிடைத்தது. 1995ல், இந்த விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு
தொடங்கியது. இக்கோயில் அருகில் புகழ்பெற்ற 32 அடி உயர நங்கநல்லூர்
விஸ்வரூப ஆஞ்சநேயர், குருவாயூரப்பன், 16படி மீது அமர்ந்திருக்கும்
ராஜராஜேஸ்வரி கோயில்கள் உள்ளன. சபரிமலையில் நடையை அடைத்தபின், இங்கிருந்து
ஐயப்பன் அருள்பாலிப்பதாக பிரசன்னத்தில் அறியப்பட்டது. இதனால், இதை
இரண்டாவது சபரிமலை எனலாம். சிறப்பு மிக்க இந்தக் கோயிலில், உலகநன்மை
வேண்டி, கோடி அர்ச்சனை வைபவம் வரும் டிசம்பர் 7 முதல் 22 வரை நடக்கிறது.
தினமும் காலை காலை7 முதல் மதியம் 12, மாலை 4 முதல் இரவு 8 வரை அர்ச்சனை
நடக்கும். இந்த அர்ச்சனையை செய்வோருக்கு சகல செல்வம் சாப விமோசனம்
கிடைக்கும். அர்ச்சனையில் பக்தர்கள் பங்கேற்கலாம்.
போன்: 93810 24451.
போன்: 93810 24451.
No comments:
Post a Comment