Saturday, November 22, 2014

சுவையான சாப்பாடு / உணவகம்

சென்னை முதல் குமரிவரை ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கிற சிறந்த உணவு வகைகளை எல்லாம் பெரும்பாலும் ருசித்துவிட்டேன் என்று சொல்லும் இந்த நாவுக்கரசருக்கு இப்போது 35 வயது. அதற்குள் 35 நாடுகளை வலம் வந்து, அந்நாடுகளின் சிறந்த உணவுகளையும் விழுங்கிவிட்டார், இந்த உணவுக்கரசர். எந்த டூர் என்றாலும், முன்கூட்டியே எங்கே என்ன சாப்பிடுவது என்று பிளான் பண்ணி டிராவல் பண்ண ஆரம்பித்திருக்கிறார். உணவு தொடர்பாக எழுதப்பட்ட பிளாக்குகளையும் படிக்கத் தொடங்கியிருக்கிறார். “அந்த அனுபவம் காரணமாக, 2012-ம்
ஆண்டு ஜூன் மாதம் ஒரு பிளாக் ஆரம்பித்தேன். கடல்பயணம் என்ற அந்த பிளாக்கில், என்னுடைய பயணங்களை மட்டுமின்றி, இதுவரையில் நான் ருசித்துள்ள 200 வகை உணவுகளைப் பற்றியும் எழுதிவிட்டேன். என்னைப் போல பிளாக்கைப் படித்துவிட்டுக் கடையைத் தேடுபவர்களின் வசதிக்காக அந்தக் கடைகளுக்குச் செல்லும் பாதையைக் காட்டும் மேப்களையும் பதிவிட்டிருக்கிறேன்” என்கிறார் சுரேஷ்குமார்.
மதுரை மீனாட்சி பஜாரில் மோய்ஞா, மாமா பிரை போன்ற பர்மா உணவுகளும் கிடைக்கின்றன கண்டுபிடித்தேன்” என்கிறார் சுரேஷ்குமார். சிங்கிள் டீயை 2 லட்சத்திற்கு விற்கிறார்கள் என்ற தகவலறிந்து, சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஓட்டலுக்குச் சென்று வேடிக்கை பார்த்த சுவாரஸ்மான அனுபவத்தையும் எழுதியிருக்கிறார் சுரேஷ். வலைப்பூ முகவரி: http://www.kadalpayanangal.com/

No comments:

Post a Comment