பாரம்பரியமிக்க ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. சக்தி உண்டு. அந்தந்த கோவிலின் வரலாற்றுடன் தொடர்புடையவர்கள் – மற்றவர்கள் நன்மைக்காக – குறிப்பிட்ட கோரிக்கைகளை வரமாக பெறும்போது அது பரிகாரத் தலமாகிறது. அந்த வகையில் பிரசித்தி பெற்று விளங்கும் சில பரிகாரத் தலங்களை பார்ப்போம்.
நம்பிக்கையுடன் பரிகாரம் செய்யுங்கள். நல்லருள் பெறுங்கள். நாளை சந்திப்போம்.
* அரியக்குடி தென் திருவேங்கடமுடையானுக்கும் தாயாருக்கும் 12 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டால் விரும்பிய வேலை கிடைக்கும்.
* திருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்றான திருக்காவளம்பாடி ராஜகோபால சுவாமிக்கு அவலும் வெண்ணெயும் நிவேதித்தால் மழலை வரம் கிட்டும்.
* திருக்கோலக்காவில் அருளும் தொனிப்ரதாம்பாளுக்கு வாக்வாதினி அர்ச்சனை செய்து, அம்பிகைக்கு அபிஷேகித்த தேனை உண்ணச் செய்தால் சரியாகப் பேச வராத குழந்தைகள் நன்கு பேசும்.
* செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள சிராத்த சம்ரட்சணப்பெருமாளை தொடர்ந்து அமாவாசையில் தரிசித்தால் பித்ரு தோஷங்களும் பித்ரு சாபங்களும் விலகும்.
* திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள வானமாமலைப்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெயை சரும நோய் உள்ளவர்கள் தடவி வர அந்த நோய் நீங்கும்.
* கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அருளும் ஐராவதேஸ்வரருக்கு மிளகு அரைத்துத் தடவி வெந்நீரால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க, காய்ச்சல் விலகிவிடும்.
* சிறுநீரக நோய்கள் நீங்க லால்குடிக்கு அருகே உள்ள ஊட்டத்தூரில் அருளும் பஞ்சநதக் கல்லால் செய்யப்பட்ட நடராஜப்பெருமானை தரிசித்து, வெட்டிவேர் மாலை சாத்தி தினமும் வெட்டிவேர் போட்ட நீரை அருந்தலாம்.
* திருக்காரவாசல் கண்ணாயிரமுடையாருக்கு மூலிகைத் தைல அபிஷேகம் செய்து, அத்திப்பழத்தை நிவேதித்து பிரசாதமாகப்பெற்று 48 நாட்கள் தைலத்தை தலையில் தேய்த்தும் தேனில் ஊறிய அத்திப்பழத்தை உண்டும் வந்தால் கண் நோய்கள் தீரும்.
* திருநீலக்குடி மனோக்ஞநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து நீல நிற பட்டுத்துணியையும் எள்ளையும் தானமளித்தால் மரண பயம் விலகும்.
* சென்னை-மயிலாப்பூர் கோலவிழியம்மன் ஆலயம் அருகில் உள்ள வாலீஸ்வரரை வணங்கினால் எதிரிகள் தொல்லை விலகும்.
* திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூர் ப்ருஹன்மாதவனுக்கு அர்ச்சனை செய்தால் கனவில் பாம்பு வந்து தொல்லை தராது. இது ஒரு சர்ப்பதோஷ பரிகாரத் தலம்.
* வைத்தீஸ்வரன் கோயில் வைத்யநாதரையும் தையல்நாயகியையும் வழிபட்டு, ஆட்டு வாகனத்தில் ஆரோகணித்திருக்கும் அங்காரகனுக்கு அர்ச்சனை செய்ய, செவ்வாய் தோஷம் நீங்கும்.
* திருச்சி கன்டோன்மென்ட் லாசன்ஸ் சாலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் உள்ள நாகதேவதைகளுக்கு பூஜை செய்து பிரசாதமாகத் தரப்படும் பால் பாயசத்தை உண்டு, மஞ்சளை தினமும் அணிந்து கொள்ள, திருமணத் தடை, புத்திரபாக்கியத் தடை நீங்குகின்றன.
* திருவிற்குடி கங்களாஞ்சேரி வீரட்டேஸ்வரரையும் அம்பிகையையும் தரிசித்து ஆலயத்திலிருந்து கல் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.
* லால்குடி திருமங்கலம் சாமவேதீஸ்வரர் ஆலய சனிபகவானை தரிசித்து அர்ச்சனை செய்தால் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.
* திருச்சி-துடையூர் கடம்பவன விஷமங்களேஸ்வரர் திருக்கோயில் அருகிலுள்ள வாதக்கல் முனி சமாதியை வழிபட்டால் அனைத்து வகை வாத நோய்களும் நீங்கும்.
* கலைகளில் சிறந்து விளங்க ஊத்துக்காடு காளிங்கநர்த்தனருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
* எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேற நாச்சியார்கோயில் கல் கருடனுக்கு அர்ச்சனை செய்து அமிர்தகலசம் எனும் நைவேத்தியத்தைப் படைக்க வேண்டும்.
* மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க பெட்டவாய்த்தலை (திருச்சி) மத்யார்ஜுனர் ஆலய பூவாய் சித்தர் சந்நதியில் சீட்டெழுதிக் கட்டினால் நிவாரணம் பெறலாம்.
* சாக்கோட்டை சிவபுரத்தில் உள்ள சிவகுருநாதசுவாமி ஆலயத்தில் பைரவமூர்த்திக்கு வடைமாலை சாத்தி வழிபட, வழக்குகளில் வெற்றி பெறலாம்.
நன்றி : ந.பரணிகுமார்| DINAKARAN.COM
சுபகாரியம் நடைபெறவுள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்
சுபகாரியம் நடைபெறவுள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால், முதலில் இறந்தவருக்கும், சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கும் என்ன பந்தம் (இரத்த பந்தமா அல்லது நெருங்கிய சொந்தமா) என்பதைப் பார்க்க வேண்டும்.
இரத்த பந்தம், உடன்பிறப்பு வழியில் உள்ளவர் இறந்துவிட்டால், அடுத்த 30 நாட்களுக்கு எந்த சுப காரியமும் செய்யக் கூடாது. ஆனால், இரத்த பந்தத்திலேயே 70 வயதைக் கடந்தவர் உயிரிழந்தால், குறைந்தபட்சம் 3 நாட்களுக்குப் பின்னரும், அதிகபட்சம் 10 நாட்களுக்குப் பின்னரும் சுபகாரியம் செய்யலாம். அதில் தவறில்லை.
அதேபோல் விபத்து உள்ளிட்ட துர்மரணங்கள் ஏற்பட்டாலும் 30 நாட்களுக்குப் பின்னரே சுபகாரியங்களை செய்ய வேண்டும்.
சுபகாரியத்திற்கு தடையாக மரணம் நிகழ்ந்து விட்டதாக கருதுவதை முதலில் நிறுத்த வேண்டும். இதற்குக் காரணம், உயிரிழந்தவரின் கிரக அமைப்பு அந்தச் சூழலில் சிறப்பாக இருந்திருக்காது. அதற்காக சுபகாரியத்தை நிறுத்துவது சரியல்ல. சுப நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட குடும்பத்தில், ஒன்றுக்கும் மேற்பட்டவருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் இதுபோன்ற அசம்பாவித சம்பங்கள் நிகழும்.
ஒரு சில ஜாதகருக்கு அசுபம் நடந்த பின்னரே சுப நிகழ்ச்சி நடக்கும். சில வீடுகளில் சுப நிகழ்ச்சி நடந்த ஓரிரு நாளில் அசுப நிகழ்வு ஏற்படும். இதற்கும் கிரக அமைப்புகளே காரணம். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் சனியும், குருவும் ஒன்றாக இருந்தால் அவருக்கு சுபமும், அசுபமும் அடுத்தடுத்து நடக்கும் என்பது விதி. எனவே, அவற்றை தடங்கலாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
சுபகாரியத்திற்கு முன்பாக அசுபம் நிகழும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் புண்ணிய நதிகளில் நீராடி உரிய பரிகாரங்களைச் செய்துவிட்டு, அதன் பின்னர் சுபகாரியத்தை மேற்கொள்வதில் எந்தத் தீங்கும் ஏற்படாது.

No comments:
Post a Comment