Thursday, July 31, 2014

beauty tips viz. home made, natural, hair, skin, bath powder, shampoo


வெயிலில் அதிகம் திரிந்து வேலை செய்பவர்களுக்கு முன் நெற்றி தோல் கருமை நிறமடைய வாய்ப்பு உண்டு. சோற்றுக் கற்றாழை மடலினுள் நொங்கு போலிருக்கும் சதைப் பற்றால் பாதிக்கப்பட்ட இடத்தைத் தொடர்ந்து கழுவிவந்தால் கருமை நிறம் மறையும்.
வெயிலில் சென்று வந்தால் வரும் தலைவலி சிலருக்கு வாழ்நாள் பிரச்சினை. இந்தத் தலைவலிக்குச் சுக்குமல்லி காபி உகந்த மருந்து. மைக்ரேன் முதலான தலைவலிகளைக் குறைப்பதில் சுக்குத் தூளுக்கு உள்ள ஆற்றலைப் பல மருத்துவ இதழ்கள் ஆதாரங்களுடன் நிரூபித்து உள்ளன. உலர்ந்த சுக்குத் தூளைக் கொத்துமல்லி விதைகளுடன் சம பங்கு கலந்து வைத்துக்கொண்டு, காபித் தூளுக்குப் பதிலாக இக்கலவையைப் போட்டுத் தயாரிப்பதே சுக்குமல்லி காபி.

பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி!--அழகு குறிப்புகள் சருமத்தின் அழனை பாதுகாக்க இயற்கை மூலிகைகளை விட்டு விட்டு செயற்கையாய் விற்பதை வாங்கி பயன்படுத்துகிறோம். சொந்த காசில் சூனியம் வைத்தது போல ஆகிவிடும் நம் சருமம். ஆகையால் சருமத்தை பாதுகாக்க மூலிகை பொடி செய்து பயன்படுதுங்கள். பொலிவான தோற்றம் பெறுங்கள் மூலிகைப்  பொடி தயாரிக்கும் முறை இதோ:

பச்சைப் பயிறு - 250 கிராம், கடலை பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம், ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம் ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும். பாசிப் பயறு 250 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், கார்போக அரிசி 250 கிராம், இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சில துளி தேனைக் கலந்து முகம், கை, கால், கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து, ஊறவைத்துப் பின்னர் மேலே கூறிய பொடியைத் தேய்த்து கழுவ பளபளப்பு கிடைக்கும். ஆரோக்கியமானதும் ஆகும். வெளியில் அடிக்கடி செல்லும் பெண்களின் முகம் கறுத்து விடும். அப்படிப்பட்ட பெண்கள் இரவில் கோல்டு கிரீமையும், பகலில் வானிஷிங் கிரீமையும் தடவி வந்தால் தோலின் நிறம் மங்காது, கறுக்காது. வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்களுக்கு இவையெல்லாம் தேவையில்லை.
தேநீர், பால், சர்பத் ஆகியவற்றில் சர்க்கரைக்கு பதிலாகத் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தோல் பளபளப்பாகும். உடலும் கச்சிதமாக இருக்கும். தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து, உடலில் தடவி, ஊறிய பின் மிதச் சூட்டு நீரில் குளித்து வந்தால், தோல் பொன்னிறமாகவும், மென்மையாகவும், பட்டுப் போலும் மாறும். வசதி உள்ள பெண்கள் பாதாம் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தடவிக் கொண்டு ஊற வைத்த பின் குளியல் பொடியைத் தேய்த்துக் குளித்தால் தோல் பட்டுப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் மாறும்.

எண்ணெய் வழியும் சருமமா?--அழகு குறிப்புகள் இயற்கையின் படைப்பில் அனைத்துமே அழகுதான். அழகை சீராக பராமரிப்பதன் மூலம்தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும்.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
உடலின் உள்ளே நோயின் தாக்கம் இருந்தால் அதன் வெளிப்பாடு முகம் மற்றும் சருமப் பகுதிகளில் தெரியவரும். இன்றைய நாகரீக உலகில் காற்றும், நீரும் மாசடைந்துள்ளன. மேலும் வாகன புகைகளின் காரணமாக உடல் அலர்ஜி உண்டாகி சருமப் பாதிப்பு உண்டாகிறது.
எண்ணெய் வழியும் சருமத்திற்கு
சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் செய்த சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். கெமிக்கல் கலந்த முகப் பூச்சுகளால் அலர்ஜி உண்டாகுமே தவிர முழுமையான பலன் கிடைக்காது. இவர்கள் கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும். மேலும் தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதுபோல் வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக கெமிக்கல் அல்லாத மூலிகை சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.
முகம் பளிச்சிட
சிலருடைய முகம் எப்போது பார்த்தாலும் இருண்டே காணப்படும். எவ்வளவுதான் கிரீம்கள் தடவினாலும் முகம் பளிச்சிடாது. இவர்கள் முட்டைகோஸ் மற்றும் கேரட் போன்றவற்றின் வேகவைத்த தண்­ணீரை கீழே கொட்டிவிடாமல் அதை ஆறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
கறுப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
முகப்பரு மாறமுகப்பரு இக்கால தலைமுறையினருக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குகிறது. உணவு முறை மாறுபாட்டாலும், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தாலும் முகப்பரு உண்டாகிறது. முகப்பரு தொல்லையால் அவதிப்படுபவர்கள்

வெந்தயக் கீரை - 1 கைப்பிடி

துளசி இலை - சிறிதளவு

கொத்துமல்லி இலை - சிறிதளவு எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.


வெள்ளரி - 2 துண்டு


தக்காளி - 2 துண்டு


கேரட் - 2 துண்டு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊறியபின் கழுவினால் பருக்கள் மறையும். ஆண்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.

புருவங்கள் அடர்த்தியாக  சிலருக்கு புருவங்கள் அடர்த்தியாக வளராமல் விட்டு விட்டு மெலிதாக வளர்ந்திருக்கும். இவர்கள் தேங்காய் பாலை காய்ச்சி எடுத்த எண்ணெயை புருவங்களின் மீது தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். அல்லது சுத்தமான விளக்கெண்ணெய்யை தடவி வந்தாலும் புருவம் அடர்த்தியாக வளரும்.


முகம் பளபளக்க  முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், கரும்புள்ளி உள்ள இடத்தில் பச்சைப் பயறு மாவுடன் தயிர் சேர்த்துத் தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்துப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

வெள்ளரிச் சாறு, சந்தனப் பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை, கால்களுக்குத் தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகும்.

'குளிர்காலம்..' வறண்ட சருமக்காரர்கள் உஷார்!

இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.
இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.
வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.
பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!
அதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.
எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.
தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.
மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.
இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.
மேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.

எளிய அழகு குறிப்புகள்

எளிய அழகு குறிப்புகள்
* முள்ளங்கி சாறும், தயிரும் கலந்து தேய்த்து ஊறியதும் கழுவி வர முகம் பளபளப்பாகும்.

* எலுமிச்சைப்பழத் தோலை வைத்து பொடித்து பன்னீர் அல்லது இளநீர் கலந்து தேய்த்து வர முகம் பொலிவாகும். சுருக்கம் மறையும்.

* நான்கு கரண்டி தேங்காய்ப்பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, வாரம் ஒரிரு முறை தலையில் தேய்த்து குளித்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.

* பப்பாளிப்பழத்தை பிசைந்து சிறிதளவு தேன், பாலேடு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊறிய பின் கழுவி வர பளிச் சென மாறும்.

* பாசிப் பருப்பு மாவை உடம்பில் போட்டுக் குளித்து வந்தால் வியர்வை வாடை வராது.

* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

உதடுகளுக்கு நல்ல நிறம் கிடைக்கும்--அழகு குறிப்புகள்

சிவப்பு ரோஜா பூக்களின் இதழ்களை அரைத்து, உதடுகளில் பூசுங்கள். ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். மூன்று நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால், உதடுகளுக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
* தினமும் ஒரு முறை எலுமிச்சை பழச்சாறை உதடுகளில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கழுவவும்.
* நேரம் கிடைக்கும் போதேல்லாம், பாலாடையை உதடுகளில் பூசி, அது காய்ந்து போனதும் கழுவி விடுங்கள்.
* உதடுகளில் நல்லெண்ணெய் தேய்த்து, மென்மையாக மசாஜ் செய்துவிட்டால், காலப்போக்கில் உதடுகள் ஜொலிக்கத் தொடங்கி விடும்.
* கிளிசரின் மற்றும் பன்னீர் கலவையை வெடிப்பின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.
* கொத்தமல்லி சாற்றை இரவில் பூசி வர, உதட்டின் கருப்பு நிறம் மாறும்.

கூந்தல் அழகிற்கு மூலிகை ஆலோசனைகள்--ஹெல்த் ஸ்பெஷல்,

• நல்லெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் சாறு இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து காய்ச்சி, வடிகட்டித் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை மறைந்து கூந்தல் கருகருவென வளரும்.  
• புழுவெட்டு சில சமயம் தலை முழுவதையும் வழுக்கையாக்கிவிடும். இதற்குக் கடுகெண்ணெயைத் தடவிக் குளித்து வந்தால் குணம் தெரியும். 
• அரை கப் தேங்காய்ப் பாலில் ஒரு எலுமிச்சம்பழச் சாறு கலந்து அதை மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலசி வந்தால் முடி உதிர்வது நிற்கும்.  
• முட்டையின் மஞ்சள் கருவைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி வளர்ச்சியடையும்.
• நீலகிரித் தைலத்தை சூடு செய்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலையைக் கட்டிக்கொண்டு சிறிது நேரம் கழித்து அலசவும். இப்படிச் செய்து வந்தால் பொடுகு நீங்கிக் கூந்தல் சுத்தமாகும்.



சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.

* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.* தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.

* சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு மறைந்து விடும்.

* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.

* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.* கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.

* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.

* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.


பூனை ரோமம் போயே போச்! --அழகு குறிப்புகள்

பூனை ரோமம் போயே போச்!

பார்க்கப் போனால் ரொம்பச் சின்ன விஷயம் ஆனால் அதுதான் பெண்ணை மனதளவில் வீழ்த்தி தன்னம்பிக்கையைக் கெடுக்கும். கை கால்களில் முளைத்திருக்கும் பூனை ரோமங்கள்தான் அவை. என்னதான் அழகாக இருந்தாலும் கைகளையும் கால்களையும் ஆமை போல மறைத்துக் கொண்டே வாழும் பெண்கள் அனேகம் பேர் இருக்கிறார்கள் பூனை ரோமங்கள் வெளியே தெரியும் என்று வெட்கப்பட்டுக்கொண்டே பலர் குட்டைக்கை வைத்த சுடிதாரோ பிளவுஸோ அணியத் தயங்குவார்கள். ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு வெளியே போக யோசிப்பார்கள். இதற்காக கடைகளில் விற்கிற �ஹேர் ரிமூவிங் கிரீம்�களைப் பயன்படுத்தினாலும் சில நாட்களில் முன்பைவிட வேகமாகவும் முரடாகவும் ரோமங்கள் வளர்ந்துவிடும். அவற்றின் அடர்த்தியும் கூடியதுபோல இருக்கும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் செல்வ சுப்பிரமணியன்.

��கெமிக்கல் கலந்த க்ரீம்களைப் பூசி பூனை ரோமத்தை நீக்குவதால் அப்போதைக்கு மட்டும்தான் தீர்வு கிடைக்கும். அதிலும் இந்தக் க்ரீம்கள் சிலருக்கு ஸ்கின் அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால் கெமிக்கல் கலந்த க்ரீம் பயன்படுத்தி ரோமங்கள் நீக்குவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவது நல்லது. அதற்குப் பதிலாக உங்கள் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து இயற்கையான முறையில் பக்கவிளைவுகள் இல்லாமல் பூனை ரோமங்களை நீக்கலாம்.

வழிமுறை - 1

குப்பைமேனி இலையையும் வேப்பந்துளிரையும் கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அதோடு ஒரு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைக்கவும். அந்தக் கலவையில் சிறிது பன்னீர் ஊற்றி குழைத்துக்கொள்ள வேண்டும். இரவு தூங்கும் முன் பூனை ரோமங்கள் இருக்கும் இடத்தில் இந்தப் பேஸ்டை தடவி மறுநாள் கழுவி விடவேண்டும். தொடர்ந்து இப்படி செய்துவந்தால் நாளடைவில் பூனை ரோமங்கள் காணாமல் போகும்.

வழிமுறை - 2

கருந்துளசி கைப்பிடி, ஒரு மாதுளை பழத்தோல் இரண்டையும் இரண்டு நாட்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்ததும் இவற்றுடன் ஒரு கஸ்தூரி மஞ்சள் சேர்த்துப் பொடியாக்கி டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவும். இரவு தூங்கும் முன் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, இந்தப் பொடியை அதில் குழைத்து ரோமப் பகுதிகளில் தடவி மறுநாள் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால், பூனை மயிரும் நீங்கும். தோலும் பளபளவென்று ஆகிவிடும்.

வழிமுறை - 3

கடலை மாவு, பயத்த மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன் இரண்டு எலுமிச்சம்பழத் தோல், வேப்பங்கொழுந்து கைப்பிடி அளவு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் மூன்றில் ஒரு பங்கு கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து தினமும் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் பூசி ஊறவைத்து குளித்தால், பூனை மயிர் படிப்படியாகக் குறையும். தோலும் மென்மையாகும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். எந்தத் தோல் வியாதியும் வராது.��

முகத்தில் வடியும் எண்ணெய்த் தன்மையைப் போக்க சில டிப்ஸ்!--மருத்துவ டிப்ஸ்

வெயில் காலத்தில் வெளியில் போவ தென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்து விடும். கவலையை விடுங்க எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்
எண்ணெய் பசை நீங்க:

வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன் பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.

தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழு வலாம்.

பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி குளிர்ந்த தண்ணீரீல் முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு முகமும் பளபளப்பாக இருக்கும்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.

சோளத்தை நன்கு பவுடர் செய்து தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும். எண்ணெய்ப் பசை சருமத்தினர் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் சிறிது தயிர், கடலை மா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.உங்கள் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற மேற்கண்ட வழி முறை களை பின்பற்றுங்கள்.
Mohamed Ali Blog11:35 PM

கூந்தலுக்கு வைத்தியம்!--ஹெல்த் ஸ்பெஷல்

* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.

* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.

* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

அழகு தரும் குளியல் பொடி--அழகு குறிப்புகள்

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது.

சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது. அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு - 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
வெட்டி வேர் - 100 கிராம்
அகில் கட்டை - 100 கிராம்
சந்தனத் தூள் - 150 கிராம்
கார்போக அரிசி - 100 கிராம்
தும்மராஷ்டம் - 100 கிராம்
விலாமிச்சை - 100 கிராம்
கோரைக்கிழங்கு - 100 கிராம்
கோஷ்டம் - 100 கிராம்     
ஏலரிசி - 100 கிராம்
பாசிப்பயறு - 250 கிராம்
இவைகளை தனித்தனியாக காயவைத்து அரைத்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும்.
மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

தலை சீவும் போது கவனம் தேவை--ஹெல்த் ஸ்பெஷல்

• தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவும் போது முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பைக் கொண்டு சீவினால், முடியானது கொத்தாக வேரோடு தான் வரும்.

• கூந்தலை சீவும் போது தலைச் சருமத்திலும் நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்குபடும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.

• கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது, கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே அப்போது முதலில் அந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.

• மேலும் கூந்தலை இறுக்கமாக கட்ட கூடாது. நிறைய பேர், இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர். கூந்தலை போனி டைல் போட கூடாது. அப்படி போட்டால் முடியானது இடையில் கட் ஆகி உதிரும்.

 

 

கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்!--அழகு குறிப்புகள்

அழகு குறிப்புகள்:'கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்!

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்...
* வைட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.
* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.
* முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.
* அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக 'மசாஜ்' செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது.
* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.
* நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது.
* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.
* தேங்காயைத் தண்ணீ­ர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.
* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.
* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.
* அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.
* தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.
* நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம்.
* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.
* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.
* ஓடி ஆடி வெயிலில் அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமானவிளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடியும் உதிராது.
* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீ­ருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.
இதோ, முடி பளபளப்பாக காய்கறி வைத்தியம்:
* வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.

வழு வழு ஸ்கின் ரகசியம்! --அழகு குறிப்புகள்.

ஸ்ரேயா சொல்கிறார்:

என்னுடைய ஸ்கின் டோனின் ரகசியமே பப்பாளிதான். உணவில் நிறையப் பப்பாளி எடுத்துக்கொள்வேன். பப்பாளி பேக்கும் பயன்படுத்துவேன்.

 தினமும் என் ஸ்கின்னில் ‘விட்டமின் சி’ அடங்கிய மாய்ஸ்சுரைஸரை அப்ளை செய்வேன். அதனால்தான் என் சருமம் வறண்டு போகாமல் மினுமினுத்துக் கொண்டே இருக்கிறது.

 லிப்ஸிடிக்கைப் பயன்படுத்தும்போதெல்லாம், கட்டாயமாக நான் அதே கலர் லிப்லைனரைப் பயன்படுத்துகிறேன். அப்போதுதான் லிப்ஸ்டிக் கச்சிதமாகப் பொருந்தும். பார்ட்டிகளுக்குச் செல்வதனால் லிப்ஸ்டிக்கின் மேல் லிப்கிளாஸை மெலிதாகப் போட்டுக்கொண்டால், நீங்கள்தான் அந்த நிகழ்ச்சியின் ஸ்டார்!

‘‘என்ன உன் கை இவ்வளவு சொரசொரப்பா இருக்கு...?’’ என்று எல்லோரும் உங்களைக் கிண்டல் செய்கிறார்களா? தினமும் இரவு படுக்கப் போகும் முன்பு வாஸ்லினை அப்ளை செய்து விட்டுத் தூங்குங்கள். கமெண்ட் அடிப்பவர்கள் கப்_சிப் ஆகிவிடுவார்கள்.

சொர சொர கை, கால்களை ஸாஃப்ட்டாக்க ஒரு ஈஸி வழி. இஞ்சியை நறுக்கி, தண்ணீரில் போட்டு இருபது நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு ஆற வைத்து வடிகட்டி, நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சேர்த்துக் குளித்துப் பாருங்களேன். கை, கால்கள் படு ஸாஃப்ட்டாக மாறிவிடும்.

சுத்தமான பளிச் நகங்கள் வேண்டுமா? டூத்பேஸ்ட்டை கொஞ்சம் எடுத்து நகங்களில் ஸ்க்ரப் செய்யுங்கள். அவ்வளவுதான். நகங்கள் மின்னும்...

அதிகமான எண்ணெய்ப்பசை கொண்ட சருமத்தினரா நீங்கள்? இரவு படுப்பதற்கு முன் சோப்பால் தேய்த்து நன்கு குளியுங்கள். இப்படி செய்து வந்தால் உங்கள் சருமத்தின் இறந்த செல்கள் நீங்கி, புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். காலையில் குளிப்பதைவிட இரவில் இப்படி குளிப்பது இறந்த செல்களை அதிகம் போக்கும்.

இரண்டு பங்கு ஷாம்பூ, ஒரு பங்கு எண்ணெய் (ஆலிவ், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் என்று எதுவாகவும் இருக்கலாம்) அத்துடன் நீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம் எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கப் போகும் முன், இந்தக் கலவையை நன்கு குலுக்கி சில சொட்டுக்களை தண்ணீரில் சேர்த்துக் குளித்துப் பாருங்கள், சருமம் படு ஸாஃப்ட்டாக இருக்கும்.

ஒரு கப் கெட்டித் தயிருடன் ஒரு டேபிள்ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸையும், ஒரு டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸையும் கலந்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். முகத்தில் நன்றாகத் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். அப்புறம் பாருங்கள்... உங்கள் முகம் ஜொலி ஜொலிப்பதை!

திடீரென பார்ட்டிக்குப் போக வேண்டும். 15 நிமிடம் வரை ஊற விட நேரம் இல்லையென்றால் மேற்சொன்ன பேஸ்ட்டுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேனையும், 2 டேபிள்ஸ்பூன் பாலையும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். முழங்கால், முழங்கை, முகம், பாதங்களில் அப்ளை செய்து சில நிமிடங்களில் கழுவி விடுங்கள். முகம் சும்மா டாலடிக்கும்.

முகப்பரு மறைய ஒரு ஈஸி வழி சொல்லட்டுமா? கேரட்டை நன்றாக அரைத்து, முகத்தில் தடவுங்கள். முகப்பருவுக்கும், கேரட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? கேரட்டில் இருக்கும் விட்டமின்_சி பருக்களை உருவாக்கும் துளைகளை முழுவதுமாக க்ளென்ஸ் செய்து விடும்.

சருமம் பட்டுப் போல் வழுக்கிக் கொண்டு வர வேண்டுமா? வாழைப்பழத்தை பாலுடன் கலந்து முகம், முழங்கால், முழங்கைகளில் தடவுங்கள். பிறகென்ன...? எல்லோர் கண்களும் உங்கள் மேல்தான்! மாசு மருவில்லாத முகம் வேண்டுமா? (குறிப்பாக சிவப்பு, கறுப்பு நிறத் திட்டுக்கள் முகத்தை ஒரு வழி செய்து விடும்.) பப்பாளிப் பழ பேக்கை முகத்தில் அடிக்கடி போட்டுக் கொண்டால், முகம் நல்ல நிறமாக இருக்கும். காரணம், முகத்தின் மேற் பகுதியில் அதிக அளவு மெலனின் சேர்வதை, பப்பாளி தடுத்து விடுகிறது. (இந்த மெலனின் தான் சருமத்தின் நிறத்தையே முடிவு செய்கிறது)

முட்டி, கழுத்துப் பகுதிகள் கறுப்பாக இருக்கிறதா? கடுகு எண்ணெயை அந்த இடங்களில் நன்றாகத் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து கடலைமாவால் சுத்தம் செய்யுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் கருமை மறைந்து பளிச்சென்று மாறிவிடும்.

அழகுக்கும் இளமைக்கும் 'ஃபேஸ் மாஸ்க்' ===அழகு குறிப்புகள்.

முகத்தை அழகாகவும், இளமையாகவும் வைத்திருக்க “மாஸ்க்” மிக முக்கியமானது. இது முகப் பொலிவைக் கொண்டு வருவதுடன் ஒரு வெளிப்படையான நிற மாறுதலையும் கொண்டு வரும்.

அது மட்டுமில்லாமல் உங்கள் முகத்தில் ஒரு மென்மையையும் புத்துயிரையும் கொடுக்கும். இதனை சரியாக மற்றும் பொருத்தமான அளவில் பயன்படுத்துவதால் முகத்தில் தெரியும் குறைகள் நீங்குகின்றன.

மார்க்கெட்டில் ஏராள “மாஸ்க்” வகைகள் உள்ளன. உங்கள் முகத்தைப் பொறுத்து பொருத்தமான “மாஸ்க்”கை தேர்ந்தெடுத்து அதையே கடைசி வரை கடைபிடிக்கவும். நீங்கள் விரும்பினால் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே மாஸ்க்கை தயாரிக்கலாம்.

சொர சொரப்பான சருமத்திற்கு

முட்டையின் மஞ்சள் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன் கலந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி பால் பவுடர் போட்டு கலந்து “பேஸ்ட்’ மாதிரி உருவாக்கி முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்கு பிறகு நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.

பிசுபிசுப்பான (எண்ணெய்ப் பசை) சருமத்திற்கு

முட்டையின் வெள்ளைக் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன் கலந்து அதில் பாதி தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து “பேஸ்ட்” மாதிரி செய்து கொண்டு முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை நீரால் கழுவிக் கொள்ளவும்.

ஆழமான துளைகள் கொண்ட சருமத்திற்கு

சோள மாவுடன் பால் கலந்து அடிதல் சிறிது எலுமிச்சை சாறு கலந்து “பேஸ்ட்” செய்து அதை முகத்தில் உடனே தடவிக் கொள்ளவும். மூல்தானி மிட்டி ஒரு “மாஸ்க்’காக பயன்படுகிறது. எண்ணெய் பிசுபிசுப்பு முகம் மற்றும் காம்பினேஷன் முகத்திற்கும் இதை பயன்படுத்தலாம்.

கருப்பு மருக்களைக் கொண்ட சருமத்திற்கு

முட்டையின் வெள்ளைக் கருவை சோள மாவுடன் கலந்து பேஸ்ட் ஆக்கி இதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரை மணி நேரம் வரை தடவவும். பிறகு தூய்மையான நீரில் தேய்த்துத் தேய்த்துக் கழுவவும்.

எல்லாவித சருமத்திற்கும்

வெள்ளரி பேஸ்ட்டை செய்து முழு முகத்திலும் தடவவும். வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். இது பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது.

மாஸ்க் தடவும் முறை

முடியை கெட்டியாக முடிந்து கொள்ளவும். தூய்மையான நீரைக் கொண்டு நன்றாக முகத்தைக் கழுவிக் கொள்ளவும். அகன்ற பாத்திரம் மற்றும் மிருதுவான பிரஷ்ஷை உபயோகிக்கவும். “மாஸ்” கை முகத்தின் மென்மையான பாகங்களான கண்களின் ஓரம், இமைகள் மற்றும் உதடுகள் ஆகியவற்றில் தடவுவதை தவிர்க்கவும்.

“மாஸ்க்” தடவிய பிறகு குறைந்தது அரை மணி நேரம் காய வைக்கவும். “மாஸ்கை" அகற்றும் போது கவனத்துடன் அகற்றவும். மீண்டும் தூய்மையான நீரால் நன்றாக முகத்தைத் துடைத்துக் கழுவவும்.
கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும், இதிகாசங்களிலும் அதிகம் காணப்படுகிறது. நீண்ட தலைமுடியை கூந்தல் என அழைக்கிறோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும், பெண்களும் பாரபட்சமின்றி கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று பெண்கள் கூட கூந்தலை கத்தரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே முடிவைத்துக் கொண்டுள்ளனர். இன்றைய நவீன இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் பருவ மாற்றங்களால் நீண்ட கூந்தல் என்பது சில பெண்களுக்கு கனவாக அமைந்துவிடுகிறது.
பொடுகு என்றால் என்ன?
கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல... அதைப் பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். பகட்டு விளம்பரங்களில் வரும் இரசாயனக் கலவையான ஷாம்புகளைப் பயன்படுத்தி சிலர் மேலும் முடிகளை இழக்கின்றனர்.
முடி உதிர்வதைத் தடுக்கவும், நீண்ட நெடிய கூந்தலைப் பெற பொடுகின் தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம். பொடுகினால்தான் அநேக பேருக்கு முடி உதிர்கிறது. தலையில் அரிப்பு இருந்தாலே பொடுகு இருக்கிறது என்று உணர்ந்துக் கொள்ளலாம்.
பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தை சொரிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும். பின் அரிப்பானது தலை முழுவதும் பரவி சொரியச் செய்துவிடும். அந்த இடங்கள் வெண்மையாய் சாம்பல் பூத்தது போல் தோன்றி முடி உதிர ஆரம்பிக்கும்.
சிலருக்கு இந்நோயின் தாக்கம் புருவத்திலும் ஏற்படுவதுண்டு. தலையை சொரிந்த கையால் பிற இடங்களையும் சொரிந்தால் அங்கும் இந்நோய் பரவும் (குறிப்பாக காதில் பரவும்) இது உடலில் தேவையான அளவு எண்ணெய் பசை இல்லாததால் உண்டாவதாகும். இந்தப் பொடுகை தடுக்காவிட்டால் தலைமுடி அனைத்தும் உதிர ஆரம்பிக்கும்.
பொடுகு எல்லாக் காலங்களிலும் இருக்குமென்றாலும் மழை மற்றும் பனிக்காலங்களில் தான் அதிகம் காணப்படும். இந்த காலகட்டத்தில் பொடுகை அடியோடு ஒழித்துக்கட்ட இங்கே நிறைய வழிமுறைகள் தரப்பட்டுள்ளது. அதில் தங்களுடைய உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் முறைகளைப் பின்பற்றி பயனடையுங்கள்.
பொடுகு வராமல் தடுக்க:
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
சோற்றுக்கற்றாழை தேய்த்தும் குளிக்கலாம்.
நெய், பால், வெண்ணெய் முதலிய கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
இந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக் காப்பாற்றலாம்.

பொடுகினை அழிக்க:
பொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.
வேப்பிலை - 2 கைப்பிடி
நல்ல மிளகு - 15-20
இரண்டையும் அரைத்துத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தலையை கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.
வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்துத் தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு வராது.
அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து தலையில் தேய்த்து வந்தால் தலையில் உண்டான அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.
நாட்டு மருத்துக்கடையில் கிடைக்கும் பொடுதலைத் தைலம், வெட்பாலை தைலம் இவற்றை தினமும் தலையில் தேய்த்து வரலாம்.
வெள்ளை மிளகு - 4 டீ ஸ்பூன்
வெந்தயம் - 2 டீ ஸ்பூன்
இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்துத் தலைக்கு பேக் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகு நீங்கி தலைமுடி நீண்டு வளரும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.
வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டி தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.
தேங்காய் பால் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 4 டீ ஸ்பூன்
வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது
இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.
பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.
இத்தனைக் குறிப்புகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.

பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி!--அழகு குறிப்புகள்

பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி!

அழகு குறிப்புகள்:பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி!
சருமத்தின் அழனை பாதுகாக்க இயற்கை மூலிகைகளை விட்டு விட்டு செயற்கையாய் விற்பதை வாங்கி பயன்படுத்துகிறோம். சொந்த காசில் சூனியம் வைத்தது போல ஆகிவிடும் நம் சருமம். ஆகையால் சருமத்தை பாதுகாக்க மூலிகை பொடி செய்து பயன்படுதுங்கள். பொலிவான தோற்றம் பெறுங்கள்...
மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை இதோ:
பச்சைப் பயிறு - 250 கிராம், கடலை பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம், ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம் ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.
பாசிப் பயறு 250 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், கார்போக அரிசி 250 கிராம், இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சில துளி தேனைக் கலந்து முகம், கை, கால், கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து, ஊறவைத்துப் பின்னர் மேலே கூறிய பொடியைத் தேய்த்து கழுவ பளபளப்பு கிடைக்கும். ஆரோக்கியமானதும் ஆகும்.
வெளியில் அடிக்கடி செல்லும் பெண்களின் முகம் கறுத்து விடும். அப்படிப்பட்ட பெண்கள் இரவில் கோல்டு கிரீமையும், பகலில் வானிஷிங் கிரீமையும் தடவி வந்தால் தோலின் நிறம் மங்காது, கறுக்காது. வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்களுக்கு இவையெல்லாம் தேவையில்லை.
தேநீர், பால், சர்பத் ஆகியவற்றில் சர்க்கரைக்கு பதிலாகத் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தோல் பளபளப்பாகும். உடலும் கச்சிதமாக இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து, உடலில் தடவி, ஊறிய பின் மிதச் சூட்டு நீரில் குளித்து வந்தால், தோல் பொன்னிறமாகவும், மென்மையாகவும், பட்டுப் போலும் மாறும்.
வசதி உள்ள பெண்கள் பாதாம் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தடவிக் கொண்டு ஊற வைத்த பின் குளியல் பொடியைத் தேய்த்துக் குளித்தால் தோல் பட்டுப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் மாறும்.

முகப்பரு நீங்க...இய‌ற்கை வைத்தியம்

முகப்பரு நீங்க...
கைப்பிடியளவு வெந்தயக்கீரை, சிறிது துளசி இலைகள், சிறிது கொத்துமல்லி இலை ஆகிய அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் உள்ள பருக்களில் தடவி வந்தால், அவை மறைவதோடு, பருக்கள் ஏற்படுத்திய கரும்புள்ளிகளும் மறையும்.

முடி உதிர்வதை தடுக்க எளிய முறைகள்--அழகு குறிப்புகள்

* வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

* இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

* தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

• பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

* மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

* கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!--அழகு குறிப்புகள்

நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.

* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.
I had fizzy hair before my wedding and I used some homemade hair packs /homemade hair masks which helped me in straightening my hair. You can see the result in the above pic of mine.
Straight long hair completely changed my look in my wedding and lot of my friends asked me to reveal my secret.
Homemade pack for hair - Below is the recipe of homemade hair pack which can give you long and healthy hair.
1. Take once cup multani mitti (fuller earth) ,add 5tsp of rice flour in it and add 1 egg white. Now mix all the ingredients together. You can add little water to make a loose paste. Cover up your scalp and hair thoroughly with this pack.
Few things which you have to take care of while using this pack are as follows:-
1. Take a wide comb and comb your hair down 2-3 times before you apply the pack.
2. Massage your hair with oil at night and use this hair pack the next day.
3. While you apply this hair pack keep combing your hair straight in between. Idea is to keep your hair as straight as possible.
4. Let the pack dry completely which takes around 40 minutes. Wash it off with water. Multani mitti take time in getting out but if rinse properly it takes around 15 minutes.
I used this hair pack once in 15 days for four months and you can see the result above.My hair are naturally straight now so to give them nutrition I add shikakai and amla powder into it too.
One of my friend Latika has shared her hair straightening recipe.
Take ½ cup of milk and put it in a spray bottle. Spray it on your hair and comb 4-5 times thoroughly. Let the milk penetrate into your hair 15-20 minute’s .Shampoo and condition your hair as usual.
This will make your hair straight, silky and bouncy. Effect of this mixture will last till you wash your hair next time.
So all you beauties out there who wish for long silky, straight hair try to go for herbal remedies.
Hairpacks at home are everlasting than any other market product. Hair straightener cannot give you permanent result.
Using iron rod on your hair is OK once in a while but if use it regularly then it is going to result in hair fall, hair thinning and rough hair problem only.
Homemade hair packs for dry hair – I am updating the post due to the comment frequency.This pack might not work on dry hair still if you are interested in trying it out then you will require lot of oiling and conditioning on your hair.
   

எளிய அழகுக் குறிப்புகள்--ஹெல்த் ஸ்பெஷல்


* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.
* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.* தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.
* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.

* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.

* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.* கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.

* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.

* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.

பூனை ரோமம் போயே போச்! --அழகு குறிப்புகள்

பூனை ரோமம் போயே போச்!

பார்க்கப் போனால் ரொம்பச் சின்ன விஷயம் ஆனால் அதுதான் பெண்ணை மனதளவில் வீழ்த்தி தன்னம்பிக்கையைக் கெடுக்கும். கை கால்களில் முளைத்திருக்கும் பூனை ரோமங்கள்தான் அவை. என்னதான் அழகாக இருந்தாலும் கைகளையும் கால்களையும் ஆமை போல மறைத்துக் கொண்டே வாழும் பெண்கள் அனேகம் பேர் இருக்கிறார்கள் பூனை ரோமங்கள் வெளியே தெரியும் என்று வெட்கப்பட்டுக்கொண்டே பலர் குட்டைக்கை வைத்த சுடிதாரோ பிளவுஸோ அணியத் தயங்குவார்கள். ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு வெளியே போக யோசிப்பார்கள். இதற்காக கடைகளில் விற்கிற �ஹேர் ரிமூவிங் கிரீம்�களைப் பயன்படுத்தினாலும் சில நாட்களில் முன்பைவிட வேகமாகவும் முரடாகவும் ரோமங்கள் வளர்ந்துவிடும். அவற்றின் அடர்த்தியும் கூடியதுபோல இருக்கும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் செல்வ சுப்பிரமணியன்.

��கெமிக்கல் கலந்த க்ரீம்களைப் பூசி பூனை ரோமத்தை நீக்குவதால் அப்போதைக்கு மட்டும்தான் தீர்வு கிடைக்கும். அதிலும் இந்தக் க்ரீம்கள் சிலருக்கு ஸ்கின் அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால் கெமிக்கல் கலந்த க்ரீம் பயன்படுத்தி ரோமங்கள் நீக்குவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவது நல்லது. அதற்குப் பதிலாக உங்கள் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து இயற்கையான முறையில் பக்கவிளைவுகள் இல்லாமல் பூனை ரோமங்களை நீக்கலாம்.

வழிமுறை - 1

குப்பைமேனி இலையையும் வேப்பந்துளிரையும் கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அதோடு ஒரு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைக்கவும். அந்தக் கலவையில் சிறிது பன்னீர் ஊற்றி குழைத்துக்கொள்ள வேண்டும். இரவு தூங்கும் முன் பூனை ரோமங்கள் இருக்கும் இடத்தில் இந்தப் பேஸ்டை தடவி மறுநாள் கழுவி விடவேண்டும். தொடர்ந்து இப்படி செய்துவந்தால் நாளடைவில் பூனை ரோமங்கள் காணாமல் போகும்.

வழிமுறை - 2

கருந்துளசி கைப்பிடி, ஒரு மாதுளை பழத்தோல் இரண்டையும் இரண்டு நாட்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்ததும் இவற்றுடன் ஒரு கஸ்தூரி மஞ்சள் சேர்த்துப் பொடியாக்கி டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவும். இரவு தூங்கும் முன் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, இந்தப் பொடியை அதில் குழைத்து ரோமப் பகுதிகளில் தடவி மறுநாள் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால், பூனை மயிரும் நீங்கும். தோலும் பளபளவென்று ஆகிவிடும்.

வழிமுறை - 3

கடலை மாவு, பயத்த மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன் இரண்டு எலுமிச்சம்பழத் தோல், வேப்பங்கொழுந்து கைப்பிடி அளவு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் மூன்றில் ஒரு பங்கு கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து தினமும் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் பூசி ஊறவைத்து குளித்தால், பூனை மயிர் படிப்படியாகக் குறையும். தோலும் மென்மையாகும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். எந்தத் தோல் வியாதியும் வராது.��

முகத்தில் வடியும் எண்ணெய்த் தன்மையைப் போக்க சில டிப்ஸ்!--மருத்துவ டிப்ஸ் 

 

வெயில் காலத்தில் வெளியில் போவ தென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்து விடும். கவலையை விடுங்க எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்

 

எண்ணெய் பசை நீங்க:

வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன் பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.

தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழு வலாம்.

பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி குளிர்ந்த தண்ணீரீல் முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு முகமும் பளபளப்பாக இருக்கும்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.

சோளத்தை நன்கு பவுடர் செய்து தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும். எண்ணெய்ப் பசை சருமத்தினர் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் சிறிது தயிர், கடலை மா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.உங்கள் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற மேற்கண்ட வழி முறை களை பின்பற்றுங்கள்.



Hibiscus shampoo
Ingredients:-
8-10 Hibiscus leaves and 1 or 2 flowers of hibiscus
1and ½ tbsp. of green gram flour/moog dal
1tbsp coconut /Almond /olive oil
Water to form a paste
Method and preparation.
Step1-Take the leaves and flower of hibiscus and add 1 cup of water in it.
Step2- Try to mash the leaves in the water and add gram flour into it.
Step3-Mix it thoroughly and you will see a sticky liquid if it is thick in consistency then add more water so that a loose liquid if formed.
Step4 -Filter the liquid with the help of a sieve and take out the liquid in a bowl.
Step5- Add any of the above mentioned oil in the liquid.
You can increase or decrease quantity of the liquid according to your suitability. Use it as your regular shampoo and rinse thoroughly your hair and scalp with it.
You do not have to use your regular shampoo the day you use this liquid as a shampoo. Don’t be harsh on your hair while using the shampoo and let the hair dry on its own without the help of a towel. Using this remedy once in a week or once in fifteen days will make your hair shiny, strong and youthful.
P.S-
1.To make hibiscus powder just dry the leaves and flower and grind them .Store it in a air tight bottle. 
2.You can use any color hibiscus flower .
You have to add powder moog daal when you mash the hibiscus leaves in the water.
*****
Hibiscus Hair Pack
You have seen how to make hibiscus hair shampoo. But whenever you think to use hibiscus shampoo, fresh hibiscus leaves should be available and you need time to get the leaves and prepare it. So the hibiscus hair pack is the remedy for all these hustles. Whenever you want you can apply the hibiscus hair pack.
How to prepare hibiscus hair pack
As a first step to make hibiscus hair pack collect the leaves of hibiscus as much you can. Keep the leaves on the sun for one or two days. When it is completely dry put it in mixer-grinder and powder it. This powder you can use it whenever you want to prepare hibiscus hair pack. One thing I have to mention that the hibiscus flower powder is available in the market to add to the hibiscus hair pack.

At the time of using, take 1/2 cup of hibiscus leaf powder. Mix with 5tsp. of amla powder and 2tsp. of shikakai powder. Then add water and mix well to get a paste. This is the hibiscus hair pack. This herbal pack will work as a shampoo and a super conditioner. It will give extra shine and make hair color too dark. If you apply this hibiscus hair pack at least once in a week you can avoid the formation of dandruff and reduce hair loss. Eventually this pack will help hair growth.

How to apply hibiscus hair pack
Before applying pack apply your favorite oil on hair. If your hair is too dry apply generously. Massage the scalp. Then apply the hibiscus hair pack all over hair. You know how to apply. Apply from the roots to tips, strands by strands. After applying on each strand twist it and make it like a bun. Similarly add all strands upon this made bun. Wait for 15-20 min. Then rinse hair wash it off all the pack. One more thing if you want to use henna powder you can add that also. It will give a reddish tint to hair. But consider hibiscus powder as main ingredient for this hibiscus hair pack. Do not make the paste and try to keep it in fridge. Use it instantly when you make the paste. I am sure you will enjoy this hibiscus hair pack well.

No comments:

Post a Comment