1. தை மாதத்தில் போர் போடலாமா?
போர் போட எந்தவொரு மாதமும் கணக்கில்லை. போர் வண்டி கிடைக்கும்போது பயன்படுத்தி கொள்ளவும்.
2. எந்த திசை மனையானாலும் வடகிழக்கு தென்கிழக்கு சமையலறை அமைப்பும், வடமேற்கு கழிவறை அமைப்பும் வருவதே சிறப்பு.
3. கிழக்கு பார்த்த வீட்டிற்கு மொத்த அறைகள் கிழக்கு முகமாக வருவது சிறப்பாகும்.
4. மேல்கை, கீழ்கை என்பது மேற்கு பகுதி, கிழக்கு பகுதியாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் தரைதளம், முதல்தளம், கூரையின் தளம் அனைத்துமே ஒரே சமதளமாகவே வரவேண்டும். ஏற்றம் இறக்கம் என்றால் அது பெரிய தவறு. கவனம் தேவை.
5. கன்னி மூலை மட்டும் இன்னொரு வீட்டில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அதோடு வீட்டைச்சுற்றி சரியான சுற்றுசுவர் இல்லை. தெற்குப்பக்கம் ஒரு மனையை விலைக்கு வாங்கினோம். இப்போது வீடுகட்ட முயற்சி செய்கிறோம். ஆனால், அனைத்தும் தடையாக இருக்கிறது. இதற்கு சரியான தீர்வு தாருங்கள்.
மேற்கு பகுதி இன்னொரு விட்டுடன் ஒட்டி உள்ளது என்றால் உங்களுக்கு நன்மை.
நான்கு புறமும் காம்பவுண்ட் மிக அவசியம். இல்லையென்றால் அது மிகப்பெரிய தவறு.
வீட்டிற்கு தெற்கு பகுதியில், இலவசமாக இடம் கிடைத்தால் வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கினால் கடன் பிரச்சனை, வேலை தடை போன்ற சிரமங்கள் வரக்கூடும்.
6. தெற்கு பார்த்தப்படி வீட்டின் வாசல் உள்ளது. இங்கு போர்டிக்கோ அமைக்கலாமா?
தெற்கு பார்த்த வீட்டிற்கு போர்டிக்கோ போடலாம். ஆனால், மிக கவனமாக போடவேண்டும். நல்ல அனுபவம் வாய்ந்த ஒரு வாஸ்து நிபுணரின் உதவியால் செய்வது சிறப்பு.
No comments:
Post a Comment