கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பார்க்கும் பார்வை இயல்பாக இருந்து விட்டால் பாதிப்பு ஏதும் கிடையாது. அதே சமயம் பார்வையில் பொறாமை கலந்திருந்தால், அது ஒரு குடும்பத்தைப் பாதிக்கும் என்பது காலம் காலமான நம்பிக்கை. இதைத்தான் திருஷ்டி என்கிறார்கள். திருஷ்டியினை கழிக்கும் வழிகளை பற்றி இங்கு பார்ப்போம்.
கற்புரம் ஏற்றுதல்: தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்புரத்தை வாசலில் போட்டுவிடவும். கற்புரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.
மிளகாய் சுற்றி போடுதல் : சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும்.
உப்பு சுற்றி போடுதல் : கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்பொழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.
கருப்பு வளையல் : பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடுவதால் குழந்தைகளின் மேல் விழும் திருஷ்டி காணாமல் போகும்.
மண் : சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும்.
எலுமிச்சை குங்குமம் : சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம், வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிந்தால் திருஷ்டி கழிந்து விடும்.
புசணிக்காய் உடைத்தல் புசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பு+ரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.
தேங்காய் உடைத்தல் ஒரு தேங்காயின்மேல் கற்பு+ரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.
No comments:
Post a Comment