இயற்கை எழில் கொண்ட அழகான பசுமையான இடத்தில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கும் முருகப்பெருமான் கோவிலில் ஒரு ஆச்சரியமான தகவல் உள்ளது....!

அந்த கோவில் தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் இருக்கும் அருள்மிகு மாவுற்று வேலப்பர் கோவில் Mavoottru Velappar,Theppampatti,Theni District. இந்த இறைவன் வேலப்பர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு பழமையானதாகும். Murugan
வற்றாத நீருற்று...!
இந்த ஆலயம் மலைகள் நிறைந்த பகுதியில் காணப்படுகிறது. தற்போது வேலப்பர் குடிகொண்டிருக்கும் பகுதி முழுமையும், ஆதியில் மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது.
இக்கோவிலின் தலவிருட்சமாக மாமரம் இருக்கிறது. கோவிலுக்கு தெற்கே உள்ள இந்த மாமரத்தின் அடியில் வற்றாத நீரூற்று, எப்பொழுதும் பொங்கி வழிந்தபடி இருக்கிறது. இத்தல விநாயகர் மாவு+ற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

மாமரத்தின் அடியில் இருந்து வரும் ஊற்று காரணமாகவே, இந்த இறைவன் 'மாவு+ற்று வேலப்பர்" என்றும், இந்த தீர்த்தம் 'மாவு+ற்று தீர்த்தம்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், தீராத நோய்களும், மனக்குறைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment