ஒவ்வொரு கிரகத்துக்கும் தொடர்புடையவராக ஒவ்வொரு கடவுள் உள்ளார். சு+ரியனுக்கு சிவனும், சந்திரனுக்கு பார்வதியும், செவ்வாய்க்கு முருகனும், புதனுக்கு விஷ்ணுவும், குருவுக்கு தட்சிணாமூர்த்தியும், சுக்கிரனுக்கு லட்சுமியும், சனிக்கு சனீஸ்வரரும், ராகுவுக்கு துர்க்கையும், கேதுவுக்கு விநாயகருமாகும். இப்பொழுது நவகிரகத்திற்கான எளிய பரிகாரங்கள் பற்றியும், ஹோமம் பற்றியும் பார்ப்போம்.
பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும், கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.
அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.
சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபு+ரணியின் கடாட்சம் கிட்டும்.
இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுகூலம் கிடைக்கும்.
ஹோமம் மூலம் செய்யக்கூடிய பரிகாரங்கள் :
அனைத்து கிரக தோஷத்திற்கும் நவகிரக ஹோமம் நல்லது. பாலாரிஷ்ட தோஷம், அற்ப ஆயுள் தோஷம் போன்றவற்றுக்கு ஆயுள் ஹோமம் சிறந்தது.
விபத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள், கண்டக தோஷம் போன்றவற்றை நிவர்த்தி செய்ய மிருத்யுஞ்சய ஹோமம் சிறந்தது.
எதிரிகளின் தொல்லைகள், செய்வினை தொல்லைகள் உள்ளவர்கள் சுதர்சன ஹோமம் அல்லது மிருத்யுஞ்சய ஹோமம் செய்தல் நல்லது. இதே ஹோமங்களை மாரக தசா புத்திகள் நடக்கும்போதும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஏழரைச் சனி நடக்கும்போது நவகிரக ஹோமமும், கணபதி ஹோமமும் நடத்தினால் ஏழரைச் சனியினால் ஏற்படும் தடைகள் மட்டுப்படும்.
திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்யலாம்.
வெள்ளிக்கிழமைகளில் கோ புஜை செய்வது மகாலட்சுமியின் கடாட்சம் பெருக வழி செய்யும்.
No comments:
Post a Comment