Saturday, March 3, 2018

ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே தெரியும் அதிசய சிவன் கோவில்!


💫 குஜராத்தில் உள்ள நிஷ்களங்கேஸ்வர் சிவன் கோவில் பிரமிக்க வைக்கும் ஆச்சரியங்களைக் கொண்டது. 

💫 அகமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே உள்ளது 'கோலியாக்" என்ற கடற்கரை கிராமம். இந்த கடற்கரையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் ஒரு சிவாலயம் இருக்கிறது. எல்லா நேரங்களிலும் இந்த ஆலயம் கண்களுக்குத் தென்படுவதில்லை.

💫 ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் சுமார் 6 மணி நேரம் மட்டும் கடல் உள்வாங்கி சிவாலயம் வெளிப்படுவதுதான் விசேஷம். அதிலும் இந்த அதிசய சம்பவம் தினமும் அதே நேரத்தில் அதே அளவு கால இடைவெளியில் நடைபெறுவது மேலும் வியப்பை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. 

💫 ஏனென்றால் தினந்தோறும் பகல் ஒரு மணி முதல் இரவு பத்து மணி வரை கடல் தண்ணீரை உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழிவகுத்துக் கொடுக்கிறது. நீர்மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரை நோக்கித் திரும்புகின்றனர்.

💫 பௌர்ணமி காலங்களில் அதிக தூரம் உள்வாங்கும். ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் பல மணி நேரம் கடல் உள்வாங்கிய நிலையில் இருக்கும். கடல் உள்வாங்க நாமும் அப்படியே நடந்து போகலாம்.

💫 இந்த கோவில் அரபிக்கடலுக்குள் இருக்கிறது. கடலில் அலைகள் அதிகம் உள்ள நாட்களில் இங்கு ஒரு கொடி மற்றும் ஒரு தூண் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், அலைகள் குறைந்த நேரத்தில் கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றால், ஐந்து சுயம்பு லிங்கத்தை தரிசிக்கலாம்.

💫 மேலும் இந்த கோவில் பாண்டவர்கள், சிவனை வழிபட்டதன் நினைவாக ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. நிஷ்களங்கேஸ்வர் என்றால் குற்றமற்றவன், தூய்மையானவன் என பல பொருள்கள் உண்டு. இந்த சிவனை வழிபட்டால் சுபிட்சம் மற்றும் ஞானத்தை பெறலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment