Showing posts with label temples. Show all posts
Showing posts with label temples. Show all posts

Friday, October 4, 2019

கோவில்களில் இறைவனை வணங்க சாஸ்திரங்கள் கூறும் மூன்று வகை நமஸ்காரங்கள்!


கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகள் உள்ளதாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

உத்தம நமஸ்காரம்:
லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து, மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒருநொடியேனும் மனதார வணங்க வேண்டும். மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம்.

அஷ்டாங்க நமஸ்காரம்:
இவ்வகையான நமஸ்காரமுறை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம் எட்டு; அங்கம் உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு இறைவனின் திருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.

பஞ்சாங்க நமஸ்காரம்: 
இந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணங்கல் முறையில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம் ஐந்து; அங்கம் உடற்பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிட்டும்.

Sunday, March 4, 2018

பெண் உருவில் இருக்கும் அதிசய பிள்ளையார்

🐘 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் Suchindram Kanyakumari Dist, தாணுமாலயன் கோவிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரை காணலாம். 


🐘 பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையார் விக்னேஷ்வரி, விநாயகி, கணேஷினி, கணேஷ்வரி என பல பெயர்களில் வணங்கப்படுகிறார்.

🐘 இக்கோவில் நாகர்கோவில்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர் கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

🐘 தாணுமாலயன் என்ற இக்கோவிலின் பெயரே மும்மூர்த்திகளின் பெயரை உள்ளடக்கியிருக்கிறது. தாணு என்பது சிவபெருமானையும், மால என்பது பெருமாள் விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது.

🐘 17ஆம் நு}ற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலானது கேரளத்தை சேர்ந்த நம்பு+திரிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. குறிப்பாக தீக்குமொன் மடம் என்ற நம்பு+திரி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இக்கோவிலை நிர்வகித்து வந்திருக்கின்றனர்.

🐘 இந்த கோவிலின் மூலவராக மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்து ஒரே ரூபமாக தாணுமாலயனாக அருள்பாலிக்கின்றனர். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே ரூபமாக பார்ப்பது அரிதிலும் அரிதானதாகும்.


🐘 பெண்ணுக்குரிய ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றியும் மறுகாலை மடக்கியும், புடவையோடு அற்புத பெண் தெய்வமாக காட்சி தருகிறாள் கணேஷினி.

🐘 தாணுமாலயன் கோவிலில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5.5மீட்டர் உயரமுள்ள நான்கு மிகப்பெரிய இசைத்தூண்கள் இருக்கின்றன. அலங்கார மண்டபம் என்ற பகுதியில் இருக்கும் இந்த இசைத்தூண்களை தட்டினால் சப்தசுவரங்களில் இசை வெளிப்படுவது பிரம்மிப்பின் உச்சம். 

🐘 மேலும் இக்கோவிலில் தான் 22அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13அடி உயரமும், 21அடி அகலமும் கொண்ட நந்தி சிலையும் இருக்கின்றன. இந்த நந்தி சிலை இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

வற்றாத நீருற்று கொண்ட ஆலயம்....!

🍋 இயற்கை எழில் கொண்ட அழகான பசுமையான இடத்தில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கும் முருகப்பெருமான் கோவிலில் ஒரு ஆச்சரியமான தகவல் உள்ளது....! 

🍋 அந்த கோவில் தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் இருக்கும் அருள்மிகு மாவுற்று வேலப்பர் கோவில் Mavoottru Velappar,Theppampatti,Theni District. இந்த இறைவன் வேலப்பர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு பழமையானதாகும். Murugan 

வற்றாத நீருற்று...!

🌊 இந்த ஆலயம் மலைகள் நிறைந்த பகுதியில் காணப்படுகிறது. தற்போது வேலப்பர் குடிகொண்டிருக்கும் பகுதி முழுமையும், ஆதியில் மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. 

🌊 இக்கோவிலின் தலவிருட்சமாக மாமரம் இருக்கிறது. கோவிலுக்கு தெற்கே உள்ள இந்த மாமரத்தின் அடியில் வற்றாத நீரூற்று, எப்பொழுதும் பொங்கி வழிந்தபடி இருக்கிறது. இத்தல விநாயகர் மாவு+ற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 


🌊 மாமரத்தின் அடியில் இருந்து வரும் ஊற்று காரணமாகவே, இந்த இறைவன் 'மாவு+ற்று வேலப்பர்" என்றும், இந்த தீர்த்தம் 'மாவு+ற்று தீர்த்தம்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், தீராத நோய்களும், மனக்குறைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு உத்தமர் திருக்கோவில் !!


ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் !


👉 அருள்மிகு உத்தமர் திருக்கோவில் திருச்சிராப்பள்ளியிலிருந்து சேலம் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலமாகும் Trichy to salem. ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் உலகின் ஒரே திருத்தலம் இதுவாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசமாகும்.

தல வரலாறு :

👉 சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி, அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தார். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார்.

👉 இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை.

👉 அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பு+லோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார்.

👉 அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பு+ரணமாக நிரம்பி சிவனின் பசியை நீக்கியது. இதனால் தாயார் 'பு+ரணவல்லி" என்ற பெயரும் பெற்றாள். பெருமாளும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.

தல பெருமை :

👉 புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமாதலால், உத்தமர் கோவில் எனப் புகழ் பெற்றது. பல மன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்ததாக இங்கு காணப்படும் குறிப்புகள் வெளியிடுகின்றன.

👉 பெருமாள் கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார்.

ஏழு குருபகவான் :

👉 பிரம்மகுரு

👉 விஷ்ணுகுரு

👉 சிவகுரு

👉 சக்திகுரு

👉 சுப்ரமயணிகுரு

👉 தேவகுரு பிரஹஸ்பதி

👉 அசுரகுரு சுக்ராச்சார்யார்

ஆகிய ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் உலகின் ஒரே திருத்தலம். தென்முகமாக குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில் பிரம்மா அருளும் தலம். பிரம்மாவின் இடப்புறம் தனிசன்னதியில் ஞானசரஸ்வதி குடிக்கொண்டு இருக்கும் தலம்.

தல சிறப்பு :

👉 மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியருடன், அருகருகே தனித்தனி சன்னதிகளில் அமைந்து அருளும் திருத்தலம் இந்தியாவில் இது ஒன்றே.

Saturday, January 6, 2018

நீரில் இன்றுவரை மூழ்காத அதிசய சிலை !


🌊 பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், மனிதர்களை போல படுத்துக்கொண்டு 13 நு}ற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய விஷ்ணு சிலையை பற்றி பார்ப்போம்....


🌊 இந்த புத்தானிகந்தா கோவில் நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள விஷ்ணு சிலை, ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


🌊 இதில் என்ன ஆச்சர்யம் என்றால், கிட்டதட்ட 14 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.

🌊 7 ஆம் நு}ற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக கூறப்படுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும், அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன.

மார்பளவு தண்ணீரில் இருக்கும் அதிசய கோவில்..!


பல நு}று அடிகள் நீண்டு காணப்படும் அதிசய குகை கோவில்!!
ஒரு வித்தியாசமான குகை கோவிலை பற்றி பார்ப்போம்....

👉 300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீருக்கு இடையில் கோவில் கொண்டுள்ளார்.


👉 இந்த ஜர்னி நரசிம்மர் குகை கோவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சு+ழ மலையில் உள்ளது. இக்கோவிலில் கோடைக் காலத்திலும் கூட மார்பளவு தண்ணீர் காணப்படும். ஒருபோதும் வறண்டு போவதில்லை.


👉 இங்குள்ள நரசிம்மரைத் தரிசிக்க வேண்டுமெனில் குகைக்குள் மார்பளவு தண்ணீரில் நடந்து செல்லவேண்டும்.

👉 இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. இந்த தண்ணீரில் பல மூலிகை சக்திகள் இருப்பதால் இதில் நடந்து சென்றால் தீராத பல நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

👉 குகையின் முடிவில் சிவலிங்கமும், நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றினார்.

👉 அதேசமயம் புராணத்தில் பக்தன் பிரகலாதனின் பக்தியை நிரூபிக்க வந்த நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர், ஜலசு+ரன் என்னும் அரக்கனையும் வதம் செய்ய வந்தார். அந்த அசுரனோ ஒரு சிவ பக்தன் என்பதால், இந்த குகைக்குள் தான் தவம் செய்து சிவனை வழிபட்டார். தேடி வந்து ஜலசு+ரனை வதம் செய்தார்.

👉 பின்னர், இங்குள்ள சிவ பெருமானின் பாதத்திற்கு அபிஷேகம் செய்யும் ஜலமாக (தண்ணீராக) மாறி ஊற்றெடுத்துள்ளார். மேலும், அந்த அசுரனின் வேண்டுதலுக்கு இணங்க, நரசிம்மர் அங்கேயே தங்கி விட்டார். 

Friday, July 10, 2015

South indian temples in Kolkata

Vanakam! Ungal kovil (Welcome to your own temple).
A priest in a dhoti greets you at the entrance of Sri Ganesh and Sri Murugan Temple on Prince Anwar Shah Road, near Dhaka Kalibari — a reflection of the hospitality one enjoys at a South Indian home.
As a visitor steps into the kovil (temple), he is overwhelmed by the fragrance of camphor, coconut oil and flowers. For a moment, it seems the visitor has been transported to a remote village in South India.
The four-lakh-odd South Indians in the city have over the years not only enriched the country’s cultural capital, but have themselves inculcated certain qualities that make them bona fide Bengalis.
Calcutta now has six South Indian temples — Sri Ganesh and Sri Murugan Temple, Sree Guruvayurappan Samajam, Rama Mandir, Veda Bhavan, Shastha Samooham and Shankara Institute of Philosophy — which have emerged as social hubs and centres forsarva dharma samanwaya (confluence of all communities).
According to T.S. Srinivasan, art critic and member of the Ganesha and Murugan Temple trust, South Indians are proud to be associated with the city.
“We are more Bengali than South Indian. But, at the same time, we’ve maintained our identity. Local residents, be it Bengalis, Marwaris or Jains, have recognised our efforts and are helping us run the temples,” he said.
T. Ranganathan, honorary general secretary of Gurvayurappan Samajam, echoed Srinivasan: “Devotees from all communities visit our temple every day and help us maintain the sanctity. We have built the temple on the lines of the main Guruvayurappan temple in Kerala, which we draw our inspiration from.”
The temples mainly belong to two cults — Shakta (devotees of Shiva) and the Vaishnav (devotees of Narayana). Abhishekham is performed regularly before the deities — Shiva, Ganesh, Murugan, Vishnu, Krishna, Lakshmi, Durga, Amba and Parvati — following the procedures practised in Tamil Nadu and Kerala. Priests — Shantis from Kerala and Gurukal from Tamil Nadu — perform the pujas.
“We record a footfall of nearly 300 a day. During festivals, the devotees number more than a thousand. Apart from running the temples, members of the trusts contribute to social causes, too,” said Srinivasan of the Ganesha and Murugan Temple.
Priest Meenakshi Sundaram Gurukkal said: “The deities respond to prayers. I have met all kinds of people over the past year and have fallen in love with the city and its people. Though I cannot communicate with all of them, as I do not know any language apart from Tamil, I feel at home and have realised that Bengalis and Tamils share similar values and are rich in culture.”

Sriram Mandir 58/25, Prince Anwar Shah Rd, Lords More, Lake Gardens, Kolkata 700045
Sri Ganesh & Sri Murugan Temples, 58/14/3 & 6, Prince Anwar Shah Road, Lake Gardens Kolkata - 700045 +(91)-33-24175058 (adjacent to each other) 

Sree Guruvayurappan Samajam Calcutta (Regd), Narayan Mandir 3/1/1A, Nakuleswar Bhattacharjee Ln, Manoharpukur, Kalighat Kolkata, West Bengal 033 24633859 & 65365140

SAASTHA SAMOOHAM, 42, Flt. Tapan Chowdhury Avenue (Lake Avenue)
Kolkata - 700026 http://saasthasamoohamkolkata.in/contact.html
Veda Bhavan Bhajan Samaj, Veda Bhavan, 50 Lake Avenue, Kolkata follows kanchi mutt these two are also close to each other) 

Sankara Hall And Sankara Institute Of Philosophy And Culture, Dr Meghnad Saha Sarani, Rash Behari Avenue, Kolkata -700029 belongs to sirungeri mutt 

Saturday, March 21, 2015

புதுச்சேரி அருகே புதுமை: கோயிலைச் சுற்றிலும் கார், வீடு, குழந்தை பொம்மைகள் - வேண்டுதலுக்காக செய்து தரும் பக்தர்கள்

புதுச்சேரி அருகே தென்னம்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் சூழ அமைந்துள்ள அழகு முத்து அய்யனார் கோயில். புதுச்சேரி அருகே தென்னம்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் சூழ அமைந்துள்ள அழகு முத்து அய்யனார் கோயில்.

புதுச்சேரி அருகே உள்ள ஒரு கோயிலில் குழந்தை, கார், வீடு, மனித உடல் உறுப்பு போன்றவற்றை பொம்மைகளாக செய்து வேண்டுதலுக்காக பக்தர்கள் வைக்கும் புதுமை நடைபெறுகிறது.
புதுச்சேரி அருகே கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்து அய்யனார் கோயில் உள்ளது. புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் இந்த கோயிலுக்கு செல்லலாம். இந்த கோயிலுக்கு சென்றால் குழந்தை, கார், வீடு, கை, கால், மனித உருவம் போன்ற சிமென்ட் பொம்மைகள் வரவேற்கின்றன. முதலில், இந்த பொம்மைகளை வணங்கிய பிறகே கோயிலில் உள்ள கடவுளை வணங்குவதற்கு மக்கள் செல்கின்றனர்.
அழகர் கோயிலுக்கு பின் பகுதியில் கிணற்றின் மீது கட்டப்பட்ட அழகர் சித்தர் கோயில் உள்ளது. 366 ஆண்டுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு வந்த சித்தர், இந்த பகுதி மக்களுடைய பல்வேறு நோய்களை குணமாக்கி இருக்கிறார். பின்னர், அந்த கிணற்றில் சமாதி அடைந்துள்ளார். அந்த கிணற்றின் மேலேயே சித்தருக்கு எளிமையான கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் முகப்பில் ஆலமரத்தின் அடியில் உள்ள அழகு முத்து அய்யனாரின் வலது கையில் பிரம்மாண்டமான வாள் இருக்கிறது. அந்த வாளில் ஏராளமான சீட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பக்தர்களின் வேண்டுதல் சீட்டுகள்.
பக்தர்கள் தங்களின் வேண்டுதலை தாளில் எழுதி அழகர் கையில் இருக்கும் வாளில் கட்டுகின்றனர். பின்னர், அந்த வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்தி கடனாக சிமென்ட்டில் செய்யப்பட்ட பொம்மைகளை செய்து வைக்கின்றனர். அவர்களின் வேண்டுதல் என்னவோ, அதற்கு ஏற்ற சிலைகளை பொம்மையாக வைத்து செல்வதால் கோயிலை சுற்றிலும் ஏராளமான சிமென்ட் பொம்மை சிலைகள் நிறைந்து காணப்படுகின்றன.
சிமென்ட் சிலைகளை செய்து தரும் நல்லாத்தூரைச் சேர்ந்த அழகுமுத்து ஸ்தபதி என்பவர், ‘தி இந்து’விடம் கூறும்போது, “கோயிலில் தங்கள் குறைகளை கூறி, அது நிறைவேறினால் நேர்த்திக் கடனாக ஒரு பொருளை வாங்கி தருவார்கள். அழகர் கோயிலுக்கு வந்து வழிபடுவோர், சிமென்ட் சிலை வைக்கிறார்கள். குழந்தை வரம் வேண்டியோர், குழந்தை சிலைகளை வைக்கின்றனர். ஒருசிலர், தங்கள் பிள்ளைகள் டாக்டர், வழக்கறிஞர், போலீஸ் போன்ற பதவிகளை பெற விரும்புவார்கள். அந்த வேண்டுதல் நிறைவேறியதும் அதுபோன்ற சிலைகளை வைக்கிறார்கள். ஒரு சிலருக்கு கை, கால் பிரச்சினை ஏற்பட்டு அது சரியானதும் அந்த உறுப்பையே உருவமாக செய்து வைக்கின்றனர். அதுபோல, கார், வீடு வேண்டி நிறைவேறியதும் அந்த சிலைகளை வைக்கின்றனர். கோயிலைச் சுற்றியுள்ள இந்த சிலைகளை வணங்கி சுற்றிய பிறகே கோயிலுக்குள் பக்தர்கள் வருவார்கள்” என்று குறிப்பிட்டார்.
சாமி கும்பிட வந்தவர்களிடம் கேட்டபோது, "எங்களுக்கு பிரச்சினை என்றால் கடவுளிடம்தான் முறையிடுவோம். பிரச்சினை தீர்ந்ததும் கடவுளுக்கு நன்றிக் கடனாக பொம்மைகளை செய்து வைக்கிறோம். எங்களுக்கு தெரிந்த பாரம்பரிய வழிமுறை இது. ஆண்டுதோறும் சித்திரை மாதம், முதல் திங்கள்கிழமை அன்று திருவிழா நடைபெறும். அப்போது இந்த சிலைகளுக்கு பக்தர்களே வர்ணம் பூசுவார்கள். மேலும், அந்த திருவிழாவில் 100 நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் 100 தவில் வித்வான்கள் ஒரே நேரத்தில் வாசிப்பார்கள்” என்றனர்.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் பொம்மைகள் சூழ புதுமையாக அமைந்துள்ள அழகு முத்து அய்யனார் கோயிலை புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டினரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்