Showing posts with label siva. Show all posts
Showing posts with label siva. Show all posts

Saturday, March 3, 2018

ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே தெரியும் அதிசய சிவன் கோவில்!


💫 குஜராத்தில் உள்ள நிஷ்களங்கேஸ்வர் சிவன் கோவில் பிரமிக்க வைக்கும் ஆச்சரியங்களைக் கொண்டது. 

💫 அகமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே உள்ளது 'கோலியாக்" என்ற கடற்கரை கிராமம். இந்த கடற்கரையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் ஒரு சிவாலயம் இருக்கிறது. எல்லா நேரங்களிலும் இந்த ஆலயம் கண்களுக்குத் தென்படுவதில்லை.


💫 ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் சுமார் 6 மணி நேரம் மட்டும் கடல் உள்வாங்கி சிவாலயம் வெளிப்படுவதுதான் விசேஷம். அதிலும் இந்த அதிசய சம்பவம் தினமும் அதே நேரத்தில் அதே அளவு கால இடைவெளியில் நடைபெறுவது மேலும் வியப்பை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. 

💫 ஏனென்றால் தினந்தோறும் பகல் ஒரு மணி முதல் இரவு பத்து மணி வரை கடல் தண்ணீரை உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழிவகுத்துக் கொடுக்கிறது. நீர்மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரை நோக்கித் திரும்புகின்றனர்.


💫 பௌர்ணமி காலங்களில் அதிக தூரம் உள்வாங்கும். ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் பல மணி நேரம் கடல் உள்வாங்கிய நிலையில் இருக்கும். கடல் உள்வாங்க நாமும் அப்படியே நடந்து போகலாம்.

💫 இந்த கோவில் அரபிக்கடலுக்குள் இருக்கிறது. கடலில் அலைகள் அதிகம் உள்ள நாட்களில் இங்கு ஒரு கொடி மற்றும் ஒரு தூண் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், அலைகள் குறைந்த நேரத்தில் கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றால், ஐந்து சுயம்பு லிங்கத்தை தரிசிக்கலாம்.

💫 மேலும் இந்த கோவில் பாண்டவர்கள், சிவனை வழிபட்டதன் நினைவாக ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. நிஷ்களங்கேஸ்வர் என்றால் குற்றமற்றவன், தூய்மையானவன் என பல பொருள்கள் உண்டு. இந்த சிவனை வழிபட்டால் சுபிட்சம் மற்றும் ஞானத்தை பெறலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Friday, July 21, 2017

அதிசய சிவ தலங்கள்...!

நம் நாட்டில் பல்வேறு திருத்தலங்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பு. அதேபோல் அவற்றில் சில அதிசயங்களும் உண்டு. அப்படி அதிசயங்களும், சிறப்புகளும் மிக்க கோவில்களைப் பற்றிப் பார்ப்போம்....!

🌟 கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

🌟 விஸ்வநாதர் கோவிலில் மாலைவேளை பு+ஜையின் போது நு}ற்றி எட்டு 'வில்வ" இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள். அந்த நு}ற்றி எட்டு 'வில்வ" இலைகளிலும் சந்தனத்தால் 'ராமா" என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள்.

🌟 கும்பகோணம் அருகே திருநல்லு}ரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் 'பஞ்சவர்ணேஸ்வரர்" என்று பெயர்.

🌟 கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

🌟 ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் (உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்தபடியே உறங்குதல்) கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.

🌟 சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலில் அஷ்ட பைரவர் எனும் 8 பைரவர்களுக்கும் ஒரே இடத்தில் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம் 27 நட்சத்திரங்களுக்கும் மரங்களை வளர்த்து வருகின்றனர். அஷ்ட பைரவர்களின் சன்னதியானது வெள்ளிக்கிழமை மட்டும் தான் திறப்பார்களாம்.

🌟 திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

Sunday, April 5, 2015

64 சிவ வடிவ வழிபாடு பலன்கள்

http://ta.wikipedia.org/s/3r6v ;     http://temple.dinamalar.com/news.php?cat=7

40. வடுக மூர்த்தி: ...பாண்டிக்கருகேயுள்ள வடுகூர் ஆகும். இங்குள்ள இறைவன் பெயர் வடுகநாதன், வடுகூர்நாதன் என்பதாகும். இறைவி பெயர் திரிபுரசுந்தரியாகும். (திருவாண்டார் கோயில் எனவும் இத்தலத்தை வணங்குவர்) இங்கு வாமதேவ தீர்த்தமும், வன்னிமரம் தலமரமாகவும் உள்ளது. கார்த்திகை அஷ்டமியில் இங்கு பைரவர்க்கு விசேஷமாகும். ஏழரை சனியின் துன்பம் அகல சனிதோறும் வடுகர் முன்பமர்ந்து சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும். நாள்பட்ட வழக்குகள் வெற்றிபெற பூஜையுடன் தேனாபிசேகம் செய்து 9 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். ஞாயிறன்ணு வடுகருக்கு விபூதியபிசேகம் செய்யத் திருமணம் விரைவில் நடைபெறும். மேலும் வெண்தாமரை அர்ச்சனையும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும், புதன் தோறும் கொடுக்க நீள் ஆயுள் கிடைக்கும். ஆரோக்கியம் நிலவும்.

41. சேத்திரபால மூர்த்தி சேத்திரபாலபுரத்தில் இடைவிடாது தரிசிக்க எதிரிகளிடமிருந்து விடுதலைக் கிடைக்கும். அரக்க குணமுடையவர்களிமிருந்து நம்மையும், நம் சொத்துக்களையும் காப்பவர் இவரே. இவரது படத்தை தொழில் நடைபெறும் இடம், வீடுகளில் வைத்து வழிபட தீயவர்கள் ஓடுவார்கள். இவர்க்கு நவமுக ருத்திராட்ச அர்ச்õனையும், இனிப்பு நைவேத்தியமும் சனிக்கிழமைகளில் கொடுக்க நம்முடைய தொழில் விருத்தியடையும்.

42. வீரபத்திர மூர்த்தி காரைக்கால் அருகே அமைந்துள்ளது பெருந்துறையாகும். செவ்வாய்தோஷ நிவர்த்திக்கு வாழ்க்கை முறைக்கு வேண்டிய மனஉறுதியைத் தருபவர் இவரே, சித்திரை மாச செவ்வாய்கிழமைகளில் வீரபத்திர விரதம் மேற்கொள்ள வேண்டும். செந்நிறமலர் அர்ச்சனையும் புளிசாத நைவேத்தியமும் திங்கள் அல்லது வியாழக்கிழமைகளில் கொடுக்க எதிரி புத்தி அதிகரிப்பு, சகோதரபாசம், குடும்ப ஒற்றுமை நீடிக்கும்.

44. தட்சயக்ஞஷத முர்த்தி  தரங்கம்பாடி - செம்பனார் கோயில் அருகே உள்ளத் தலம் திருப்பறியலூர் ஆகும். இறைவன் திருநாமம் வீரட்டேசர் என்பதும், இறைவி திருநாமம் இளம்கொம்பனையாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். வில்வார்ச்சனையும், பால் நைவேத்தியமும் திங்கள், பிரதோஷம் அன்று கொடுக்க பகைவர் தொல்லைத் தீரும். கோர்ட் வழக்கு சாதகமாகும். தம்பதியர் ஒற்றுமை ஒங்கும்.

45. கிராத மூர்த்தி (வேட மூர்த்தி குடவாசல் அருகே அமைந்துள்ள தலம் திருக்கொள்ளம் புதூர் ஆகும். அவ்வூரில் இத்தலத்தை "நம்பர் கோயில் என்றழைக்கின்றனர். இறைவன் பெயர் "வில்வாரண்யேஸ்வரர் இறைவி பெயர் அழகு நாச்சியார். இங்குள்ள அகத்திய தீர்த்தத்தில் நீராடி வில்லார்ச்சனை செய்ய பகையை எதிர் கொள்ளும் ஆற்றல் வரும். மேலும் செவ்வரளி அர்ச்சனையும், வெண்பொங்கல் அல்லது மிளகு அடை நைவேத்தியமும் செவ்வாய் அன்றுக் கொடுக்க பகைமை மறந்து நண்பராகும் பேறும், சொத்துச் சண்டையும் முடிவிற்கு வரும்.

 46. குரு மூர்த்தி  குடந்தை - காரைக்கால் நடுவே அமைந்துள்ளது பெருந்துரையாகும். இறைவனது திருநாமம் பிரணவேஸ்வரர் இறைவி திருநாமம் மலையரசி. இவரே குருவடிவம் கொண்டு மாணிக்கவாசகரை ஆட்கொண்டு உபதேசித்தவர். இங்கமைந்துள்ள மங்கள தீர்த்ததில் நீராடி, வன்னி இலை அர்ச்சனை செய்ய நமக்கும் உபதேசம் செய்வார் என்பது ஐதீகம். இவரை வெண்தாமரை அல்லது மகாவில்வ இலை அர்ச்சனையும், வாழை, மா, கரும்பு, திராட்சை கொண்டு நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் செய்துவர தொழில் அபிவிருத்தியும், அனைத்துக் கலைகளில் தேர்ச்சியும் திருஐந்தெழுத்தின் மகிமையும் புரியும்.
 47. அசுவாருட மூர்த்தி
மதுரையில் கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம் சொக்கநாதர். இறைவி திருநாமம் மீனாட்சி யாகும். இங்கமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கினால் பக்தி நமக்கு மேலிடும். இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க வாகன யோகம், மனம் பக்குவமடையும்.