இட்லி மாவில் போதுமான அளவு உளுந்து இல்லையென்றால் இட்லி கெட்டியாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் ஒரு கரண்டி நெய் அல்லது ஒரு கரண்டி நல்லெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பிறகு ஊற்றுங்கள். இட்லி மிருதுவாக இருக்கும்.
இட்லி, தோசைக்கு உளுந்தம் பருப்பு அரைக்கும் போது கொஞ்சம் பெருங்காயத்தை சேர்த்து அரைத்தால் கமகமவென்று மணமாக இருக்கும்.
இட்லி, தோசைக்கு அரிசி, உளுந்து ஊற வைப்பதற்கு முன்பாகவே தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டு ஊற வைக்கவும். ஊறிய பிறகு அலசினால் அரிசி, உளுந்தில் உள்ள சத்து குறைந்துவிடும்.
இட்லி மாவு புளிக்காமல் இருக்க ஒரு சிறிய துண்டு வாழை இலையை அதில் வைக்கவும்.
ருசியான தட்டைக்கு; சலித்த மைதாவை இட்லி தட்டில் வைத்து வேகவைக்கவும். பிறகு அந்த மாவில் தேவையான அளவு உப்பு, காரப்பொடி, பெருங்காயம் சேர்த்துப் பிசையவும். ஒரு பிடி அளவு கடலைப் பருப்பை நீரில் ஊறவைத்து இத்துடன் சேர்த்துத் தட்டை செய்தால் உண்பதற்கு மொரமொரப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.
பாத்திரத்தை மூடி வைத்து காய்கறிகளை சமைத்தால், சமையலும் சீக்கிரம் முடியும், அதில் உள்ள சத்தும் பாதுகாக்கப்படும்.
அலமாரிகளில் சூடத்தை வைத்து, பூச்சிகள் வராமல் துணிகளையும், புத்தகங்களையும் பாதுகாக்கலாம். இதை வாஷ் பேசின்களிலும் போட்டு வைக்கலாம்.
ஃபிரைட் ரைஸ் போன்ற அரிசி வகை உணவுகளை சமைக்கும் போது சில துளிகள் எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சாதம் ஒட்டாமல் மிருதுவாக இருக்கும்.
வறுத்த வேர்கடலையை பொடியாக்கி காய்கறிகள் சமைக்கும்போது அத்துடன் சேர்க்கலாம். இது சுவையை அதிகரிக்கும்.
சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து துணிகளை துவைத்தால் அதில் பட்ட கோந்து கரைகள் நீங்கும்.
சர்க்கரை வியாதியில் அவதிப்படுபவர்கள் தங்கள் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க வெந்தயப் பொடியை தினமும் சாப்பிடுவது நல்லது.
No comments:
Post a Comment