Wednesday, August 28, 2013

பிள்ளை வரம்

பிள்ளை வரம் தந்தருள்கிறாள் ஸ்ரீவிளையாட்டு கருமாரியம்மன். சென்னை- மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகில், மேற்கு மாம்பலம் பகுதியில், அழகுற அமைந்துள்ளது ஸ்ரீ விளையாட்டு கருமாரியம்மன் ஆலயம். மிகச் சிறிய கோயில்தான் என்றாலும், கீர்த்தி பெரிதான தலம் எனப் போற்றுகின்றனர்.

பிள்ளை வரம் தரும் பால் பாயச நைவேத்தியம்!  திருநெல்வேலி தாமிரபரணிக் கரையில் இன்றைக்கும் தன் அடியவர்களுக்குத் தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் வேங்கடவன். மகாபாரதம் அருளிய வியாசமுனிவரின் முதன்மைச் சீடரான பைலர்,

பிள்ளை; வரம் தரும் கர்ப்பரஷாம்பிகை இத்திருக்கருகாவூர்- திருக்களாவூர் மாயவரம் திருக்குடந்தை போகும் பாதையில் பாபநாசத்தில் உள்ளது தம்பதியினர் அம்பிகையின் திருக்கோயிலுக்கு விரைந்து வந்து,“தாயே என் மனைவி வயிற்றில் இருக்கும் எங்கள் வாரிசுக்கு எந்த தீங்கும் இல்லாமல் இருக்க வேண்டும். அவளுக்கு சுகபிரசவம் ஆகவேண்டும். குழந்தை தீர்காயுசுடன் வளர வேண்டும்.” என்று கண்ணீருடன் வேண்டினர். அப்போது ஒரு பெண்மணி நெற்றி நிறைய குங்குமத்துடன் தோன்றி வித்தியாசாகரிடம்,“தம்பி.. நீ எதற்கும் கவலைப்படவேண்டாம். இந்த நெய்யை தொடர்ந்து 49 நாட்கள் உன் மனைவியை சாப்பிட்டு வர சொல். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் நேராமல் பிறந்து, தீர்காயுடன் வளரும்” என்று கூறினாள். அந்த பெண்மணியிடம் இருந்து நெய்யை வாங்கி கருக்காக்கும் அம்மன் கருவறையை நோக்கி,“அம்மா.. இந்த பிரசாதம் நீயே வந்து தந்தாக எண்ணி பெறுகிறோம்.” என்று கூறி திரும்பினார்கள். நெய்யை தந்த அந்த பெண்மணி அங்கில்லை. பிரசாதம் தந்து நம்பிக்கையான வார்த்தை சொன்னவருக்கு நன்றி சொல்ல மறந்தோமே என்று அந்த பெண்மணியை கோயில் முழுவதும் தேடினார்கள். எங்கும் அந்த பெண்மணி கண்ணில்படவில்லை. திரும்ப கர்ப்பரஷாம்பிகையை வணங்க சென்றார்கள் வித்யாசாகர் தம்பதியினர். அப்போது அவர்கள் காண்பது என்ன கனவா? என்றே தெரியாமல் திகைத்தார்கள். ஆம்… அந்த பெண்மணியின் முகமும் கருவறையில் இருக்கும் அம்மனின் முகமும் ஒன்றாகவே இருந்தது. தம்பதியினர் உண்மை உணர்ந்தார்கள். தங்களிடம் நேரடியாக பேசி நெய் பிரசாதம் தந்தது அன்னை கர்ப்பராஷாம்பிகையே. தங்களுக்காக  அம்பிகையே நேரில் வந்தாளே என்று ஆனந்த கண்ணீருடன் புறப்பட்டார்கள்.49நாட்கள் அம்மன் தந்த நெய்யை சாப்பிட்டு அழகான குழந்தையை பெற்றெடுத்தாள் வித்தியாசாகரின் மனைவி. வணங்கும் முறை இந்த கோயிலில் இருக்கும் கற்பக விநாயகருக்கு முதலில் அருகம்புல்லால்  மாலை அணிவித்து மாதவீச்வரருக்கு முல்லை அல்லது மல்லிகை பூக்களை சமர்பித்துவிட்டு, கர்ப்பராஷாம்பிகையை வணங்கினால், வணங்குபவர்களின் வம்சம் தழைக்கும். எந்த ஆபத்தும் நேராமல் காப்பாள் அன்னை. குழந்தை பாக்கியம் தாமதமாகும் பெண்கள், இந்த ஆலயத்தில் பணம் கட்டினால் பிரசாதமாக தரப்படும் நெய்யை வாங்கி 49 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாய்மை அடைவார்கள். அந்த கர்ப்பத்தை கர்ப்பரஷம்பிகையே காத்து வருவாள். நம்பிக்கையுடன் சென்று வணங்குங்கள் பேர் சொல்லும் பிள்ளையை பெறுங்கள்.

நெல்லையப்பர் கோயில் இரு மூலவரைக் கொண்ட "துவிம்மூர்த்தி' என்ற வகை கோயிலாகும். இரு மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனித்தனி சன்னதியில் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர். காந்திமதி அம்பாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக் கோயிலின் தலமரம் மூங்கில் ஆகும். 32 தீர்த்தங்களைக் கொண்ட இக் கோயிலில் பொற்றாமரை, கருமாறி, வைரவ தீர்த்தம், சர்வதீர்த்தம், கம்பை, சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம் குறுக்குத்துறை உள்ளிட்ட 9 தீர்த்தங்கள் முக்கியமானவை  நெல்லையப்பர்கோயிலில் நடராஜ பெருமான் திருநடனம் புரியம் தாமிரசபை  உள்ளது. காந்திமதி அம்பாளை திருமணமாகாத பெண்கள் தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதே போல, சுவாமி சன்னதி அருகே உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கினால், குழந்தை இல்லாத தம்பதிகள் விரைவில் குழந்தை பெறுவர் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். இதில் குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களது வேண்டுதல் நிறைவேற, சங்கடஹர சதுர்த்தியன்று பொல்லாப்பிள்ளையாருக்கு 11 வகையான அபிஷேகம் செய்து, மோதகம் வைத்து, அருகம்புல் மாலை சூடி வழிபட்டால், அத் தம்பதியின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். 
இதே போல, 41 நாள்கள் தொடர்ந்து கணவரும், மனைவியும் தொடர்ந்து பக்தி சிரத்தையுடன், அர்ச்சனை செய்து வழிப்பட்டால் குழந்தை வரம் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்து அறநிலையத் துறையின் கீழ் இக் கோயில் உள்ளது. கோயிலில் காலை 6.30 மணிக்கு திருவனந்தல் பூஜை, 7.30 மணிக்கு விளா பூஜை, 8.30 மணிக்கு சிறுகாலச் சந்தி, 9.30 மணிக்கு காலசந்தி ஆகியவை நடைபெறும்.
நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலம், மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 8.30 மணிக்கு அர்த்த சாமம், இரவு 8.40 மணிக்கு சொக்கர் தீபாராதனை, 9.30 மணிக்கு வைரவர் பூஜை ஆகியவை தினமும் நடைபெறும். www.kanthimathinellaiappar.org 

குழந்தைச் செல்வம் தரும் கருணை நாயகியாகத் திகழ்கிறாள் பிள்ளைவயல் காளியம்மன்!  சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டது. 

 தஞ்சாவூர் அருகிலுள்ள வரகூரில் அருள்பாலிக்கிறார். இவரிடம் வேண்டி வெள்ளிக்காப்பு அணிந்து கொண்டால் பிள்ளைவரம் விரைவில் கிடைக்கும். மூலிகை பிரசாதம்: துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் கலந்த பொடி பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்கு "துளசி மூலிகைப்பொடி' என்று பெயர். சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதயநோய், தோல் சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்க வழிபட்டு மூலிகைப் பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.
முதல்மாத சம்பளம்: நன்கு படித்திருந்தும் தகுதியான வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் வரகூர் கோயிலுக்கு வருகின்றனர். அதற்கு நன்றிக்கடனாக முதல் மாத சம்பளத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். வரகூரை சுற்றியுள்ள பகுதியில்
இந்த வேண்டுதல் வழக்கில் உள்ளது. இதன் மூலம் பணி, சம்பள உயர்வு போன்றவை விரைவில் உண்டாகும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்காப்பு: குழந்தை இல்லாத தம்பதியர், பெருமாளின் பாதத்தில் வெள்ளி காப்பு வைத்து அதையே அணிந்து கொள்கின்றனர். குழந்தை பிறந்தபின், குழந்தையோடு வந்து காப்பை பெருமாளிடம் சமர்ப்பிக்கின்றனர். இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ., திருவையாறிலிருந்து 15 கி.மீ., 

போன்: 94428 52145.

No comments:

Post a Comment