மூலவர் : பதஞ்சலீஸ்வரர்.
தல விருட்சம் : எருக்கு.
பழமை : 1000 - 2000 வருடங்கள்.
ஊர் : கானாட்டம்புலியு+ர்.
மாவட்டம் : கடலு}ர்.
தல வரலாறு :
முன்னொரு காலத்தில், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன், சிவனின் நடனத் தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன், அவருக்கு சிதம்பரத்தில் நடனக்காட்சியை காண வைக்கிறார்.
ஒரு சமயம் பதஞ்சலி, நடராஜரை தரிசித்தபோது அவரை இத்தலத்திற்கு வரும்படி கூறவே, பதஞ்சலி இத்தலத்திற்கு வந்தார். சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம், என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா? இப்போது திருப்திதானே! என்று கேட்டார்.
அதற்கு பதங்சலி, தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும், என்று வேண்டிக்கொண்டார். சிவன், அவர் விரும்பியபடியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது பெயரையே தனக்கும் சு+ட்டி, பதஞ்சலீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.
இத்தலத்தில் அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருவது சிறப்பாகும். இந்த தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது மற்றொரு சிறப்பாகும்.
பணி உயர்வு மற்றும் இடமாற்றம் வேண்டுபவர்கள் இத்தலம் சென்று வணங்கி வழிபாடு செய்யலாம். நேர்த்திக்கடனாக இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றுதல், புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வணங்குகிறார்கள்.
இத்தல இறைவனுக்கு சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் மற்றும் மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் சிறப்பு பு+ஜைகள் நடைபெறும்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்திருக்கும்.
சிதம்பரத்திலிருந்து 20 கி.மீ., தொலைவில் காட்டுமன்னார்கோவில் சென்று அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். காட்டுமன்னார் கோவிலில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்துகள் செல்கின்றன
தல விருட்சம் : எருக்கு.
பழமை : 1000 - 2000 வருடங்கள்.
ஊர் : கானாட்டம்புலியு+ர்.
மாவட்டம் : கடலு}ர்.
தல வரலாறு :
தல பெருமை :
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :
திருவிழா :
திறக்கும் நேரம் :
முகவரி :
அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில்,
கானாட்டம்புலியு+ர் - 608 306,
கடலு}ர் மாவட்டம்.
போன் : + 91-4144-208-508, 208091, 93457-78863.
kanatampuliyur, cuddalore
செல்லும் வழி :
No comments:
Post a Comment