Showing posts with label transfer. Show all posts
Showing posts with label transfer. Show all posts

Friday, November 3, 2017

அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில்!

மூலவர் : பதஞ்சலீஸ்வரர்.
தல விருட்சம் : எருக்கு.
பழமை : 1000 - 2000 வருடங்கள். 
ஊர் : கானாட்டம்புலியு+ர்.
மாவட்டம் : கடலு}ர்.
தல வரலாறு :
🌺 முன்னொரு காலத்தில், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன், சிவனின் நடனத் தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன், அவருக்கு சிதம்பரத்தில் நடனக்காட்சியை காண வைக்கிறார். 

🌺 ஒரு சமயம் பதஞ்சலி, நடராஜரை தரிசித்தபோது அவரை இத்தலத்திற்கு வரும்படி கூறவே, பதஞ்சலி இத்தலத்திற்கு வந்தார். சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம், என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா? இப்போது திருப்திதானே! என்று கேட்டார்.

🌺 அதற்கு பதங்சலி, தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும், என்று வேண்டிக்கொண்டார். சிவன், அவர் விரும்பியபடியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது பெயரையே தனக்கும் சு+ட்டி, பதஞ்சலீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். 

தல பெருமை :

🌺 இத்தலத்தில் அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருவது சிறப்பாகும். இந்த தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது மற்றொரு சிறப்பாகும்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :

🌺 பணி உயர்வு மற்றும் இடமாற்றம் வேண்டுபவர்கள் இத்தலம் சென்று வணங்கி வழிபாடு செய்யலாம். நேர்த்திக்கடனாக இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றுதல், புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வணங்குகிறார்கள்.

திருவிழா :

🌺 இத்தல இறைவனுக்கு சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் மற்றும் மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் சிறப்பு பு+ஜைகள் நடைபெறும். 

திறக்கும் நேரம் :

🌺 காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்திருக்கும். 

முகவரி :

அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில், 
கானாட்டம்புலியு+ர் - 608 306, 
கடலு}ர் மாவட்டம்.
போன் : + 91-4144-208-508, 208091, 93457-78863.
kanatampuliyur, cuddalore 
செல்லும் வழி : 

🌺 சிதம்பரத்திலிருந்து 20 கி.மீ., தொலைவில் காட்டுமன்னார்கோவில் சென்று அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். காட்டுமன்னார் கோவிலில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்துகள் செல்கின்றன

Wednesday, July 2, 2014

விரும்பிய நல்ல வேலை கிடைக்க

ஐராவத கஜாரூடம் ஸ்வர்ணவர்ணம் கிரீடினம்
ஸஹஸ்ர நயனம் சக்ரம் வஜ்ரபாணிம் விபாவயேத்
- ஸ்தோத்ர கதம்பம் (இந்திரன் துதி)

பொதுப்பொருள்: 

பாற்கடலிலிருந்து தோன்றிய வெள்ளை யானையான ஐராவதத்தை வாகனமாகக் கொண்டவரே, இந்திரா நமஸ்காரம். தங்க நிற கிரீ டத்தைத் தரித்தவரே, ஆயிரம் கண்கள் கொண்டவரே, சக்கரம், வஜ்ராயுதத்தை ஆயுதங்களாகக் கொண்டவரே, தேவேந்திர பட்டினத்திற்குத் தலைவரே,  நமஸ்காரம்.

(இத்துதியை தினமும் கூறி வர, அவரவர் தகுதிக்கேற்ப, உரிய, விரும்பிய வேலை கிடைக்கும்.) 

அரியக்குடி தென் திருவேங்கடமுடையானுக்கும் தாயாருக்கும் 12 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டால் விரும்பிய வேலை கிடைக்கும். 

பதவிக்கு ஏற்படும் பாதிப்பை விலக்கும் பரமேஸ்வரன்!

 அரங்கநாதபுரம் கஜாரண்யேஸ்வரர் கோயில்,

தனிச் சிறப்பு வாய்ந்தது. இறைவனுக்கு ஆனேசர், கரிவனநாதர், ஆனைக்காரப் பெருமான், கஜ  ஆரோகணேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. இறைவி, காமாட்சி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் வஜ்ரதீர்த்தம், இந்திர கூபம். திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவில் முன் காலத்தில் சிவபெருமான் வெண் நாவல் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். மரத்தின் சருகுகள்  விழாதவாறு சிலந்தி ஒன்று சிவலிங்கத்திற்கு மேல் வலையைப் பின்னி வைத்தது. அதே சமயம், யானை ஒன்று துதிக்கையில் காவிரி நீர் கொண்டு  வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்தது. சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலையை கண்ட யானை அதனை அறுத்தெறிந்தது.

இதுகண்டு வெகுண்ட  சிலந்தி இன்னொரு வலை பின்னியது. மறுபடி யானை அறுத்தெறிந்தது. இப்படி தினந்தோறும் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த சிலந்தி ஒருநாள்  யானை அபிஷேகம் செய்யும்போது துதிக்கைக்குள் புகுந்து கடித்தது. யானை துதிக்கையை தரையில் அடித்தது. இதில் யானையும் இறந்தது. சிலந் தியும் இறந்தது. அந்த சிலந்தியே சிவனருளாளரான சோழ மன்னர் சுபதேவர்-கமலாவதிக்கு மகனாக பிறந்த கோச்செங்கணான் (கோச்செங்க சோழன்). இவர் தன்  முற்பிறவி வாசனையால் திருவானைக்கா கோயிலை கட்டினார். மேலும், யானையால் தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, யானை ஏற முடியாதபடி  மாடக் கோயில்களாகக் கட்டினார்.

இது ‘யானை ஏறாத் திருப்பணி’ என்றே அழைக்கப்பட்டது. திருவானைக்காவிற்கு கிழக் கேயுள்ள அரங்கநாதபுரம்  கஜாரண்யேஸ்வரர் கோயில் இச்சோழனால் கட்டப்பட்ட முதல் மாடக்கோயில் ஆகும். 1750 ஆண்டுகள் பழமையானது. மாலிக்காபூர் படையெடுத்து வந்தபோது திருவரங்கம், திருவானைக்காவில் இருந்த மூர்த்திகளை காடாக (ஆரண்யம்) இருந்த இப்பகுதியில் மறைத்து  வைத்திருந்து பின்னர் எடுத்துச் சென்றமையால் அரங்கநாதபுரம் என்றும் கஜாரண்யம் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருசமயம் இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை நேமத்தில் எழுந்த ருளியுள்ள சிவபெருமானை மெய்மறந்து வழிபட்டது. அதைத் தேடி வந்த இந்திரன் கோபம் கொண்டு யானை மீது  வஜ்ராயுதத்தை ஏவினான்.

அப்போது சிவபெருமான் செய்த ஊங்காரத்தால் வஜ்ராயுதம் கஜாரண்ய தலத்துள் வந்து விழுந்தது. விழுந்த இடத்தில் நீரு ற்று ஏற்பட்டது. அதுவே வஜ்ரதீர்த்த குளமாகியது. வஜ்ராயு தத்தை எடுக்க வந்த இந்திரன் அங்கு இந்திர கூபம் என்ற கிணற்றை வெட்டி அந்த தீர்த் தத்தால் கஜாரண்யேஸ்வரரை அபிஷேகம் செய்து வழிபட்டு பேறு பெற்றான். இத்தலத்தின் மகிமையை அறிந்த காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோயிலின் தட்சிணா மூர்த்தி சந்நதிக்கு எதிரில்  அமர்ந்து தியானம் செய்தார். அதன் நினை வாக அங்கு ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

பரிவார மூர்த்திகளாக வலம்புரி விநாயகர், வள்ளி-  தேவசேனா சமேத சுப்ரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இறைவன் கிழக்கு  நோக்கி அமைந்திருக்கிறார். எதிரில் நந்திதேவர். தெற்கு நோக்கியபடி காமாட்சியம்மன். மாடக்கோயிலை கஜேந்திரன் தாங்குவது போல் கட்டப்பட்டு ள்ளது சிறப்பு. இது, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாகும். 25வது நட்சத்திரமான பூரட்டாதி 7ன் மகிமையை விட மிகச் சக்தி வாய்ந் தது. 2ம் எண்ணான மதிகாரகனான சந்திரனுக்கும், 5ம் எண் வித்யாகாரகனான புதனுக்கும் உரியது.

சந்திரனின் புதல்வரே புதன். சந்திரன் மனதை  ஆள்பவர். புதன் அறிவை ஆள்பவர். இத்தலத்தில் இறைவனைத் தொடர்ந்து ஏழு நாட்கள் ஏழு திரவியங்களுடன்
கூடிய சப்தாமிர்த காப்பு (பஞ்சாமிர்தம் + பாதாம் பருப்பு, முந்திரி) ஏழுவகை நிவேதனங்களால் வழிபடுவதால் ஏழேழு ஜென்மங்களாக தொடரும்  சாபங்களை அழித்து கடைத்தேற கஜாரண்யேஸ்வரர் அருள்பாலிகிறார். ஐராவதம் மற்றும் இந்திரன் வழிபடும் இத்தலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் சந்திரஹோரையில் இறைவனை வழிபடுவதால் பதவியில் ஏற்படும் ஆப த்துகள் நீங்கி பதவி உறுதியாகும் என்பது நிதர்சனமான உண்மை.

இசையில் அவரோகண (ஏழு) பீஜங்கள், தட்சிணாமூர்த்தியால் வில்வ தளங்களில்  வைத்து ஆஞ்சநேயருக்கு அளிக்கப் பெற்ற திருத்தலம் இது. ஸ்ரீசாகம்பரி தேவி இங்குள்ள திருக்குளத்தில் ஏழு அல்லிமலர்களை தோற்றுவித்து வேத  அல்லிமலர் குருபீடத்தை உலகிற்கே அளித்தாள். இதனால் ஏழேழு ஜென்மங்களும் கடைத்தேற இங்கு ஏழு தினங்கள் வில்வ மரத்தின் கீழ் தியானம்  மேற்கொள்ளலாம். ஏழு வண்ண ஆடைகளை தானம் அளித்தல் இன்னும் சிறப்பாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கல்லணை செல்லும் (அகரப்பேட்டை வழி) சாலையின் தென்புறம் இத்தலம் உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 94439 70397.

21 விதை தூவுங்க! டிரான்ஸ்பர் வாங்குங்க!
விருப்பமான இடத்திற்கு டிரான்ஸ்பர் பெற விரும்புவோர் ஒரு வழிபாட்டை தொடர்ந்து செய்யலாம். அதிகாலையில் சூரியன்  உதயமாவதற்கு முன் எழுந்து நீராடி தூய உடை உடுத்துங்கள். உதயமாகும்போது, கிழக்கு நோக்கி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். அப்போது காய்ந்த மிளகாயின் 21 விதைகளை சூரியனுக்கு பக்தியுடன் சமர்ப்பியுங்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். அப்போது, சூரியனுக்குரிய 12 மந்திரங்களை ஜபிக்க வேண்டும்.
ஓம் ஆதித்யாய நமஹ
ஓம் திவாகராய நமஹ
ஓம் பாஸ்கராய நமஹ
ஓம் ப்ரபாகராய நமஹ
ஓம் சஹஸுத்ர்ஷனவே நமஹ
ஓம் த்ரிலோசனாய நமஹ
ஓம் ஹரிதாஸவயே நமஹ
ஓம் விபாவஷே நமஹ
ஓம் தினக்ருதே நமஹ
ஓம் த்வாதசேத் மகயே நமஹ
ஓம் த்ரையி மூர்த்தயே நமஹ
ஓம் சூர்யாய நமஹ என்று சொல்லி வணங்குங்கள்.
சூரியன் அருளால் விரைவில் விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  மனிதனை அதிகாரப்  பதவியில் அமர்த்தும் கிரகம் சூரியன். எனவே, வேலை சார்ந்த சிரமங்களைச் சந்திப்போர் எல்லாருமே இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
பதவி உயர்வைத் தரும் மந்திரம்
மந்திரம் 1:
சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸீகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்
மந்திரம் 2:
அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்
ச் ரீயம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜீஷதாம்
இந்த இரண்டு மந்திரங்களையும் ஜபிக்கும்போது,லட்சுமியை வெள்ளைத் தாமரை மற்றும் குங்குமப்பூவால் அர்ச்சிக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து 48 நாட்கள் ஜபித்துவந்தால், மிக உயர்ந்த பதவி/பதவி உயர்வு கிடைக்கும்.இந்த வழிமுறையை நமக்கு சித்விலாஸ விருத்தி என்ற நூல் சொல்லுகிறது.
நன்றி:தினமலர்