Saturday, June 24, 2017

ஊத்துமலை - அகத்தியப் பெருமான் பிரதிஷ்டை செய்த "ஸ்ரீ சக்ரம்"

ஊத்துமலை என்றழைக்கப்படும் இந்த இடம் சேலத்த்த்துக்கு அருகில் உள்ளது. நிறைந்த பெருமைகளை தன்னுள் அடக்கி, அமைதியாக த்யானத்தில் உள்ளது இந்த மலை என்று கூறலாம்.
ஏழு ஊற்றுக்கள் அகத்தியரால் உருவாக்கப் பட்டதினால் "ஊற்று மலை" என்று பெயர் பெற்றது.
அகத்தியரே உருவாக்கி பிரதிஷ்டை செய்த "ஸ்ரீ சக்கரம்" இங்குள்ளது. "ஸ்ரீ சக்கரத்தை" பொதுவாக எல்லா கோவில்களிலும் தரையில் பதித்து மறைத்து வைத்து பூசை செய்வார்கள். ஆனால், இங்கு வரும் அடியவர்களுக்கு அந்த ஸ்ரீசக்கரத்தின் அருள் கிடைக்க வேண்டும் என அகத்தியப் பெருமானே அதை செங்குத்தாக ஸ்தாபிதம் செய்து பூசை செய்ததாக சொல்கிறார்கள்.
இந்த மலையில் இருக்கும் பைரவர் சன்னதி மிக பிரசித்தமானது.
ரூப அரூபமாக சித்தர்கள் தரிசனம் கிடைக்கும் இடம்.
ஊற்று நீரையே தீர்த்தமாக அளிக்கிறார்கள்.
குகைக்குள் அமைந்துள்ள சன்னதியில் ஸ்ரீ சக்கரத்துக்கு அருகில் அகத்தியப் பெருமானின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது.
அகத்தியப் பெருமான் கபிலர் போன்ற சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகளுக்கு "ககனமார்கத்தை" உபதேசித்த இடம்.
அகத்தியப் பெருமான் இங்கு மாதா லோபாமுத்திரையுடன் அமர்ந்து தவமியற்றி, பூசை செய்த இடம் என்கிறார்கள்.

No comments:

Post a Comment