
வெற்றி, வீரம், பராக்கிரமம் ஜாதகத்தில் 6ம் இடத்தை சரி செய்து கொள்வதற்கு இந்த சண்முக கடவுளை வழிபடுவது உத்தமம் ஆகும். இந்த சண்முகக் கடவுளுக்கு ஒரு சக்கரம் உள்ளது. இது 36 அட்சரங்களைக் கொண்டதாகும். ஏனெனில் முருகனின் பெயரை சடாட்சரன் என்றுதான் சொல்வார்கள். அட்சரம் என்றால் எழுத்து. ஆறு அட்சரங்களுக்கு உரியவரே முருகன்.இந்த அட்சரங்களில் 36 உரு கொண்ட எந்திரங்கள் எங்கிருக்கிறது என்றால் இரண்டு கோவில்களில் உண்டு. அதில் ஒரு கோவில் திருப்போரூர். இது முருகன் போர் புரிந்த தலமாகும். இந்த தலத்திலே முருகனுக்கு தனிப்பட்ட முறையில் சக்கரம் ஒன்று உள்ளது. எதிரிகள் தொல்லை மற்றும் நோய் நொடிகளில் இருந்து விடுபட சக்கரத்திற்கு நீங்கள் அபிஷேகம் செய்து பலன் பெறலாம்.அதேப்போல் மற்றொரு கோவில் மதுராந்தகம் பக்கம் பெரும்பேர் கண்டிகை என்ற ஊர். அந்த ஊரில் சிறிய குன்று இருக்கும். அதன்மேல் முருகன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதன் தலவிருட்சம் ருத்ராட்சம் ஆகும்.இந்த ஆறுமுகக் கடவுளுக்கு எதிரிகளை வீழ்த்தவும், செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகவும், ஜாதக தோஷம் நீங்கவும், உடல் ஆரோக்கியம் பெறுவதற்கும் சத்ரு சம்ஹhர ஹோமம் செய்யலாம். இந்த ஹோமத்தில் மலர்கள் ஆறு, தருக்கள் ஆறு, விதைகள் ஆறு போன்ற பொருட்கள் எண்ணிக்கை ஆறு கொண்டதாகப் பயன்படுத்தப்படுகிறது. இதையே கந்தசஷ்டி கவசத்தில்'ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டுஓதியே செபித்து உகந்துநீ றணியஅஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்"இதன் அர்த்தம் 36 உரு என்று சொல்லுவது 36 தடவை கந்தசஷ்டி கவசத்தை சொல்ல வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. 36 அட்சரங்களை ஜெபித்துவிட்டு, கந்தசஷ்டி கவசத்தை ஜெபித்தால் கவசத்தின் முழுபலன் கிடைக்கும் என்பதுதான் இதனுடைய அர்த்தம்.முருகனுக்கு உகந்த சஷ்டி திதியன்று இந்த ஹோமத்தை செய்தால் மிகப்பெரிய பலன், குழந்தைப்பேறு, அறிவுக்கூர்மை, நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்வு, மனோபலம், எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுதலை, ஆயுள் ஆரோக்கியம் அனைத்துமே கிடைக்கும். கடன் தொல்லை, நோய் தொல்லை குறைவதற்கு தேய்பிறை சஷ்டி திதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேப்போல் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு
No comments:
Post a Comment