செல்வம் சேர : பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.
பாவங்கள் கரைய : பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்
ரசபஞ்சாமிர்தம் - காரியசித்தி, எல்லாக் காரியங்களிலும் வெற்றி.
பல(பழ) பஞ்சாமிர்தம் - தனவிருத்தி குறைவற்ற செல்வம் தரும்.
நெய் - மோட்சத்தைத் தரும். ஞான விருத்தி, ஞானத்தை அளிப்பது.
வாழைப்பழம் - தான்யவிருத்தி, பயிர் விருத்தி அமோக விளைச்சல்.
அன்னம் - ராஜகௌரவம், அரசுரிமை, அரசனுக்குச் சமமான போக போக்கியங்கள் தரும்.
கஸ்தூரி - வெற்றி தரும்.
பன்னீர் - சாலோக்யம், தெய்வ உலகில் வாழும் பேறு கிட்டும்.
No comments:
Post a Comment