Sunday, December 24, 2017

எந்த திசையில் வீடு அமைப்பு இருக்கலாம்?


எல்லோருக்கும் ஒத்துவரக்கூடிய பொதுவான திசைகள் உண்டு அதுதான் வடக்கு மற்றும் கிழக்கு. 


🏠 நீங்கள் எந்த திசையில் வேண்டுமானாலும் வீடு கட்டி கொள்ளுங்கள். அதில் வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதுதான் மிக முக்கியம். நீங்கள் கட்டக்கூடிய வீடு வடக்கு பார்த்தது என்றால் கிழக்கு ஒட்டிய வாசல் அமைப்பும், கிழக்கு பார்த்த வீடு என்றால் வடக்கு ஒட்டிய வாசல் அமைப்பும், தெற்கு பார்த்த வீடு என்றால் கிழக்கு ஒட்டிய வாசல் அமைப்பும், மேற்கு பார்த்த வீடு என்றால் வடக்கு ஒட்டிய வாசல் அமைப்பும் சிறப்பை தரும். 

🏠 தெற்கு பார்த்த வாசல் வைக்கும்போது நேர் எதிரில் வடக்கிலும் வாசல் வைப்பது மிகச்சிறப்பு. அதேபோல் மேற்கு பார்த்த வாசல் வைக்கும்போது நேர் எதிரில் கிழக்கு திசையிலும் வாசல் வைப்பது சிறப்பு.

No comments:

Post a Comment