http://www.hinduupm.co.in/thiynam.html ஆத்மா வெற்றி
1. சின்னத்திரையில் படம் பார்ப்பதுபோல் உங்கள் எண்ணத்திரையில் பகவானைப் பார்க்க வேண்டும். அவ்வப்போது இப்படிச் செய்ய ஆரம்பித்து விட்டீர்களானால் உங்கள் உள்ளக் கோயில் புனிதமான அன்பாலயமாகி விடும்.
2. பகவானை நினைத்தவுடன். வேண்டாத சிந்தனைகள் மனதில் வலம் வரும்.
அந்த நேரத்தில் மந்திரங்களை ரொம்ப நிதானமாக உச்சரித்து பகவானின் பாதத்தில்
பூக்களைப் போட்டு பூஜிக்கப் பழக வேண்டும்.
3. காலை நேரத்தில் நடந்து கொண்டே மந்திரம் கூறி பகவானை உள்ளத்தில் படம் பிடித்துப் பார்த்துக் கொண்டே செல்ல வேண்டும்.
4. அடிக்கடி ஐந்து நிமிடம் மனதை பகவான் பக்கம் திருப்பி அமைதியாக மந்திரம் கூறிப் பார்க்க வேண்டும்.
5. இறைத் தொண்டில் கலந்து கொண்டு வந்தால் மக்களின் அறியாமையை நீங்கள் பார்த்து வருந்தி தன்னைத் திருத்த முயற்சிப்பீர்கள்.
6. போலியான பொய்ப்பேச்சு, வேண்டாத காரியங்களில் தலையிடுதல்,
இதையெல்லாம் தவிர்த்து அவ்வப்போது பகவானை நினைத்து, பகவான் காலடியில்
வலதுபக்கம் அமர்ந்து பூப்போட்டு மந்திரம் கூறிவரப் பழகுங்கள். தியானம்
வெற்றிபெற நேரம் இன்றியமையாதது. தயவுசெய்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
'தன் கடமையைச் செய்பவர் கடவுளுக்கு
பிடித்த கருவியாகிறார்.'
ஆகையால் கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு கடமையைச் செய்வதே கடவுள் வழிபாடு. ஓய்வு நேரங்களில் மந்திரம் கூறி பகவானை நினைத்து வருவதே தியானம். இதனால் இரண்டு வழிகளில் வெற்றி கிட்டும். ஒன்று உலக வாழ்க்கை மற்றொன்று மறுமை வாழ்க்கை.

http://www.hinduupm.co.in/anma.html இறந்த
ஆத்மா வெற்றி பெற இந்து மதம் கூறும் பிரார்த்தனை முறைகள்
http://hinduupm.co.in/bakthi.html
பக்தி வளர நாம் உயர்வு பெற குடும்பத்தின் பங்கு என்ன?
இளைஞர்களே! சுதாரித்துக் கொள்ளுங்கள். பக்தி என்பது
சோலார் எனர்ஜி போன்ற ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்.
"தேனியின் உழைப்பால் தேன் கிடைக்கிறது.
பக்தனின் இறை நினைப்பால் அருள் கிடைக்கிறது."
ஒவ்வொரு வீட்டிலும் சிறு குழந்தைகளில் இருந்தே பக்தி, படிப்பு, உழைப்பு என்ற மூன்றையும் கலந்தூட்டி நாம் வளர்க்க வேண்டும். அருளும் பொருளும் சேர்ந்து சம்பாதனை செய்ய போதிக்க வேண்டும். இதை அமெரிக்கா, பிரிட்டன் முதல் ஜப்பான் வரை கடைப்பிடிக்கிறார்கள். பக்தியில் அருள் பொருள் எல்லாமே அடங்கியிருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட்டுப் பிரார்த்தனை என்று இறைவழிபாடுகள் இருக்கின்றது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.
"பகவானிடம் மந்திரம் கூறி பிரார்த்தனை பண்ணத்.
தெரிந்த பக்தனுக்கு எல்லாமே வெற்றிதான்"
எங்கள் அனுபவத்தில் பெரும்பாலான இந்து அப்பா அம்மாக்கள் ஒரு மந்திரம் கூட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அதை அடிக்கடி சொல்ல வேண்டும், பகவானை நினைக்க வேண்டும் என்று போதித்ததில்லை. அதுவும் கிராமங்களில் ரொம்ப மோசம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எத்தனையோ இந்து மக்கள் பக்தியின் சக்தியை அறியாது ஏமாற்றம் அடைகின்றார்கள் என்று நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக உள்ளது. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான பரிபூரணமடைந்த ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சற்குருமார்கள் இந்து மதத்தில்தான் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. ஒரு சிறிய வீட்டிற்குக் கூட பணம் கட்டி மின்சாரம் வாங்க நினைக்கும் நம்மவர்கள் இறைவனின் இலவச கரண்ட்டை வாங்கி தன்னை அருள் வெளிச்சமாக்கிக் கொள்ள முன்வர வேண்டும்.
"உண்மையான பக்தரையே அதிர்ஷ்டம் விரும்பிசேரும்.
இறைவனிடம் இருந்து நமது வீட்டிற்கு மின்சாரம் கொண்டு வர பணம் கட்ட வேண்டிய அவசியமில்லை. கரண்ட் கம்பிகள் இழுத்துக் கொண்டு வந்து இணைக்க வேண்டியதில்லை. மந்திரம் என்ற சொற்கள்தான் பகவானின் கம்பி இல்லாத அன்பு கரண்ட் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக இந்து மக்கள் பக்தியில் வெற்றி பெற புதிய யுக்திகளைக் கையாள வேண்டும். அவசர உலகிற்கு ஏற்றவாறு பயணத்திலும், வேலை நேரங்களிலும் பகவானின் நாமங்களை உச்சரிக்கப் பழக வேண்டும்.
"எனது பக்தர்களின் சிந்தனைகள், அவர்களது வாழ்வு என்னிலே அடங்கி இருக்கின்றன. என்னைப் பற்றிய சிந்தனையிலே அவர்கள் இருக்கின்றனர். ஒருவருக் கொருவர் பேசும் போதும் என்னைப் பற்றியே பேசி மகிழ்வும் ஆனந்தமும் அடைகின்றனர்" - கீதையில் பகவான்
ஞாயிறு தோறும் பக்திப் பேச்சுக்களைக் கேட்டு தன் மனதை பகவான் பக்கம் திருப்ப வேண்டும். தேவையற்ற நாடகத் தொடர்கள் உங்கள் மனதை வேறுபக்கம் கூட்டிச்செல்லும். இவைகளைத் தவிர்க்க வேண்டும். உங்கள் கண்களில் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டால் ஊரே குளுமையாகத் தெரியுமல்லவா! இதைப்போன்று முதலில் தன்னைக் குளுமையாக்க இறைவன் பாதம் பற்ற வேண்டும். பிறகு கூட்டு முயற்சியில் சற்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது பக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். விவாதம் தேவையில்லை. நல்ல செய்திகளை சேமித்த பிறகு பேச முயலுங்கள். உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி நிலவும். மந்திரம் மனதினில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உலகப் பணக்காரர்களாக இருப்பவர்கள் கூட பக்தி செலுத்தி வருகிறார்கள். பக்தி செலுத்த நேரமில்லை என்று கூறாதீர்கள். உங்கள் வேலையில் இறைவனையும் சேர்த்துக் கொள்ளுங்க்ள் எல்லோரும் உயர்வு பெறுவீர்கள்!
இறப்பு
வீட்டில் நமது இந்து மக்கள் செய்ய வேண்டிய தலையாய கடமை இருக்கிறது. அந்த இறந்த வீட்டில்
உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார்கள் ஒன்று கூடி இறை மந்திரத்தை உச்சரித்து அந்த
ஆத்மா உயர்வு பெற பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
பொதுவாக நமது இந்து
மக்கள் 8ம், 16ம், 30ம் நாள், திதி நாள் போன்றவைகளில் ஒன்று கூடி உணவு பொருட்கள் படைத்து
வணங்குவதை முறையாக கொண்டுள்ளோம்.
ஆனால் அது போதாது. கண்டிப்பாக நாம்,
"ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க! ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க! ஓம் சற்குருநாதர் வாழ்க! வாழ்க!"
என்று மந்திரம் கூறி
ஆத்மா வெற்றி பெற பகவானிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும்.
இறப்பு வீட்டில் உள்ள மற்றவர்கள் இறைவனை அடிக்கடி வணங்க வேண்டும். அப்படி இறைவனை வணங்காமல்
தீட்டு, அடைப்பு என்று இருப்பது பெரிய குற்றமாகும்.
"கூட்டுப்பிரார்த்தனையால்
எல்லாம் கைகூடும். கூட்டுப்பிரார்த்தனை செய்யத் தவறாதீர்கள்."
|
|
No comments:
Post a Comment