Nanganallur, vathsala vasudevan will assist for
accommodation at srimath andavan ashram, sulal salai, and for dharshan
044-43579757, 09490838276
Thirupathi
Pray govinda raja perumal at lower thirupathi near to bus
terminus, then thiruchanur alarmel mangai, aliperi, akasa ganga@, varaha murthi
at Push karani thertham only then go to thirupathi
@(Having bath at Ahasa gangai of thirupathi equals to gangai dip. on Masi Month paournami
day having bath at Kumar thirtham nr to tirupathi temple equals to gangai dip
Nethra sevai on Thursdays – small thir manai (namam) is
applied so that lord srininvasa eye is seen more than half.)
Perumal is offered with curd rice made in mud pot. No curry
leaf is used
Try to get the santhanam taken from loard balaji & Laksmi
placed in his chest
Chandira thosam can be reduced by thirupathi dharshan
Sri varu patha – for owning a house stones are built as
house.
Suyambu sakrathalvar thertham cila panthal or natual arch,
jalapai hanuman thertham where separate ponds are available for ramar &
setha
Kapilathertham –siva temple
Bramahathi thosam removal is possible at pandava thertham
Naha
thertham offers marriage
Andra Surutapalli sri palli kondiswaraer is 56km away from
Chennai via Periya Palayam, uothukotai to thirupathy root. Prodosha thalam,
seeing couple dhatchna moorthy gives double benefit. Pooja timings 6 to 1230hrs
& 1600 hrs to 2000hrs. phone # 08576-278599
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒரு தனி மரபே இருக்கிறது. அதாவது நேரடியாக திருமலையேறி அவரை தரிசிக்கக் கூடாதாம். முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாளை சேவிக்க வேண்டும், பிறகு அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும், அதற்குப் பிறகு திருமலையேறி, வராக தீர்த்தக் கரையில் கோயில் கொண்டிருக்கும் வராகரை தரிசிக்க வேண்டும், அதற்குப் பிறகுதான் மலையப்பன் என்று சொல்லப்படும், ஏழுமலையானை, கோவிந்தனை, வேங்கடவனை சேவிக்க வேண்டும்!
இந்த நடைமுறை இப்போதைய வழக்கமல்ல; ராமானுஜர் காலத்திலிருந்து அவர் தொடங்கி, பின்னால் வந்த அனைத்து ஆசார்யார்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம்.
முதலில் கோவிந்தராஜப் பெருமாளை ஏன் தரிசிக்க வேண்டும்?
இவர் வேங்கடவனின் அண்ணன் என்று போற்றப்படுகிறார். சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் தில்லை திருச்சித்திரகூடத்தானான கோவிந்தராஜனே இவர் என்று புராணம் சொல்கிறது. அதாவது தில்லை கோவிந்தராஜன் இந்தப் பகுதிக்கு வந்திருந்தபோது, இந்த இடத்தின் எழிலில் மனதைப் பறிகொடுத்து இங்கேயே தங்கிவிட்டதாகவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவருக்காக ஒரு கோயில் எழுப்பப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அதே சயன கோலத்தில் அற்புதமாக தரிசனம் தருகிறார், இந்த திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளும்.
கோதண்டராமர் வித்தியாசமான கோலத்தில் அருள்கிறார். கண்கள் இரண்டும் ஜொலிக்கின்றன. வட இந்தியப் பாணியில் காட்சிதரும் இவரை அயோத்தியின் சக்கரவர்த்தி என்று விவரிக்கிறார்கள். காசியைச் சேர்ந்த பைராகி மடம் எனப்படும் பூகா மடத்தின் ஆதரவில் இந்த ராமர் கோயில் துலங்குகிறது. இவருக்கு எதிரே பூகா தீர்த்தம் அமைந்துள்ளது. ராமர் அபிஷேகத்துக்கு இந்த தீர்த்தத்திலிருந்துதான் நீரெடுத்துச் செல்கிறார்கள்.
இன்னும் உள்ளே சென்றால், புண்டரீகவல்லித் தாயாரை சேவிக்கலாம். தாயாரின் உற்சவ விக்ரகம் மஹாலக்ஷ்மியாக வணங்கப்படுகிறது. தாயாரின் கருணை ததும்பும் விழிகள் பரிவுடன் நோக்குவதிலேயே வேங்கடவனின் தரிசனம் இனிதே நிறைவேறும் .
கருவறையில் கோவிந்தராஜப் பெருமாள் சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். கடைக்கண்ணால் நம்மைப் பார்க்கிறாரோ! ‘கவலைப்படாதே, வந்த வேலை மனநிறைவாக முடியும்’ என்று ஆசிர்வதிக்கிறாரோ! தில்லை கோவிந்தராஜனை தரிசித்தவர்கள், இந்தத் திருவுருவைக் காணும்போது, சிதம்பரத்தில்தான் இருக்கிறோமோ என்று வியப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அதே தத்ரூப அமைப்பு. அங்கே தானும் நடராஜரும் தத்தமது நோக்கில் பக்தர்களுக்கு அருள்மாரி பொழியத் தயாராக இருந்தாலும் அங்கே நிலவிடும் சில தர்மசங்கடமான சூழ்நிலைகள் இங்கில்லாததை நிம்மதியாக இவர் முகத்தில் தெரிவதை உணர முடிகிறது. இவர் காலடியில் மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் தம் அகங்காரத்தை சமர்ப்பித்து சரணடைந்திருக்கிறார்கள். திருப்பாற்கடல் காட்சியாக, ஆதிசேஷன் மீது, நான்கு திருக்கரங்களுடன் சயனித்திருக்கிறார் பெருமாள்.
திருமலையில் வேங்கடவன் கோயில் கொள்வதற்கு முன்னாலேயே இவர் இங்கே, திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டதால் இவரை ஏழுமலையானுக்கு அண்ணன் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், மலைமீது தம்பிக்கு வசூலாகும் காணிக்கைகளை தினமும் பல்லக்கு மூலமாக சுமந்து வந்து இந்த அண்ணனிடம் சமர்ப்பிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. தம்பியின் வருமானத்தை முறைப்படுத்திப் பாதுகாக்கும் ஆடிட்டர், இந்த அண்ணன்! மொத்தப் பணம், நகைகள், பிற காணிக்கைகளைக் கொண்டுவரும் அந்த சம்பிரதாயம் இப்போது மாறி, கணக்கு மட்டும் சமர்ப்பிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இதனாலேயே முதலில் இவரை தரிசித்து வேங்கடவரை தரிசிக்க அனுமதி பெற வேண்டும் என்பது சம்பிரதாயமாம். இந்த கோவிந்தராஜர் 1500 ஆண்டுகளுக்கு முந்தி இங்கு கோயில் கொண்டவர் என்கிறார்கள்.
கோவிந்தராஜரை தரிசனம் பண்ணிவிட்டு, அடுத்ததாக திருச்சானூரில் கோலோச்சும் அலர்மேல்மங்கைத் தாயாரை சேவிக்கலாம். தனித்திருந்து, திருமாலின் பெருமைகளை விளங்க வைத்துக் கொண்டிருக்கிறார், அலர்மேல்மங்கை என்னும் இந்த பத்மாவதி தாயார்.
இந்தத் தலத்துக்குள் நுழையும்போதே தண்ணென்று தென்றல் வீசுகிறது. அது, பத்மஸரோவரம் என்ற பத்மாவதி தீர்த்தத்திலிருந்து புறப்பட்டு வந்து, நம்மை அரவணைத்துக் குளிர்விக்கிறது. சற்றுத் தொலைவிலுள்ள ஸ்வர்ணமுகி ஆற்றிலிருந்து இந்த தீர்த்தத்துக்கு நீர் வருவதாகச் சொல்கிறார்கள்.
படிகளேறி கோயிலுக்குள் நுழையுமுன் இடது பக்கத்தில் அத்தாணி மண்டபம். உள்ளே தாயார் திவ்ய தரிசனம் தருகிறார். தாயாருக்கு வெள்ளிக்கிழமைகள் விசேஷம். குறிப்பாக தை வெள்ளிக்கிழமைகள் அதி விசேஷம். திருமணம், பிள்ளைப்பேறு வேண்டும் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாயாருக்கு சமர்ப்பிக்கிறார்கள். இப்படி ஆயிரக்கணக்கில் சேரும் சரடுகளை தாயாரைச் சுற்றி வைத்து, வேறு அலங்காரங்களும் செய்து அர்ச்சனை, தீபாராதனை செய்கிறார்கள். இவ்வாறு சரடு சமர்ப்பிக்கும் பெண்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுகின்றன.
இந்த தலம் கிருஷ்ணர், தாயார் கோயிலுக்காகத் தந்த இடம் என்கிறார்கள். இதற்கு சாட்சியாக கோபுரத்துக்கு நேராக கிருஷ்ணர் விக்ரகம் ஆசியளிக்கக் காணலாம். அண்ணன் பலராமருக்கு, ‘தவம் செய்ய சிறந்த தலம் இது’ என்று பூமியைச் சுட்டிக் காட்டியபடி கிருஷ்ணர் யோசனை சொல்ல, அதன்படி பலராமர் தவம் மேற்கொண்ட தலம். அதே கோலத்தில் கிருஷ்ணரை இங்கே தரிசிக்கலாம். பலராமர் பாதரட்சையுடன் காணப்படுகிறார். அதாவது யாத்திரைக்குக் கிளம்பி வரும் கோலம்.
ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சௌந்திரராஜப் பெருமாளையும் இங்கே தரிசிக்கலாம். தாயாரின் சந்நதியில் நித்ய கல்யாணப் பெருமாளாக ஸ்ரீநிவாசன் சேவை சாதிக்கிறார்.
பத்மாவதி தாயாரை சுயம்பு வடிவம் என்கிறார்கள். இந்தத் தலம் ஸ்ரீபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
தாயாரை உளமாற சேவித்து திருமலையேற அனுமதியும் பெற்றுக் கொள்வோம்.

No comments:
Post a Comment