ஒரு அப்ரன்டிஸ் மெஷினிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்த இவர் நாளடைவில் ஒரு
இஞ்சினியராக உருவாகி போர்ட்-குவார்ட்ரி சைக்கிள் என்ற இயந்திரத்தால் தானே
இயங்கும் வாகனத்தை முதலில் தயாரித்தார். தொழிலில் வல்லமை என்பது திறமையான
பணியாளர்களை வேலைக்குச் சேர்த்து அவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து நிலை
நிறுத்திக்கொள்வதே என்ற கொள்கையைக் கொண்டவர் இவர்.
# எல்லாவற்றுக்கும் முன்னால் வெற்றியைப் பெற தயாராவதுதான் வெற்றியைப் பெறுவதற்கான முதல் படி.
# சும்மா குறை சொல்லாதீர்கள். தீர்வைச் சொல்லுங்கள்.
# பணத்தைத் தவிர வேறு ஒன்றையும் சம்பாதிக்காத தொழில் ஒரு தோல்வியடைந்த தொழிலே!.
# நீங்கள் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று நினைப்பதை வைத்து உங்களுடைய மதிப்பை உயர்த்திக்கொள்ள முடியாது.
# பெரும்பாலானோர் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில் செலவிடும் நேரத்தை விட
மிகக் குறைவான நேரத்தையே அதை தீர்ப்பது குறித்து சிந்திப்பதற்குச்
செலவிடுகின்றனர்.
# சிந்திப்பது என்பது மிகவும் கடினமான வேலை. அதனாலேயேதான், மிகச்சிலரே அந்த வேலையைச் செய்கின்றனர்.
# தொழிலில் பெரிய பிரச்சினைகள் என ஒன்றுமே இல்லை. பல சின்னச் சின்ன பிரச்சினைகள்தான்.
# உடற்பயிற்சி என்பது ஒரு பித்தலாட்டம். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் அது
உங்களுக்குத் தேவையில்லை. வியாதியுடன் இருந்தால் அதைச் செய்யக் கூடாது.
# ஒரு செயலை உங்களால் செய்ய முடியும் அல்லது முடியாது என உறுதியாக நீங்கள் நம்பினீர்கள் என்றால் அதுவே சரியானதாகும்.
# தொழிலதிபர்களுக்கு ஒரே ஒரு விதிதான். சிறந்த தரமான பொருட்களை குறைந்த
விலையில் அதிக அளவிலான கூலி கொடுத்து தயாரிக்க வேண்டும் என்பதுதான் அது.
# அடுத்த வருடம் உலகம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று கற்றுக்கொள்ள முடியாது.
No comments:
Post a Comment