கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பாண்டிச்சேரி நகருக்குள் நுழைபவர்களை
மதகடிப்பட்டு பிரதான சாலையில் சற்று நேரம் நிறுத்துகிறது இந்த வித்தியாசமாக
விளக்குகள். வழக்கமான அலங்கார விளக்குகளை போல இல்லாமல் வாடிக்கையாளர்களின்
ரசனைக்கு ஏற்ப எளிமையான பல்வேறு வடிவங்களில் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
தேவைக்கு ஏற்ப இந்த வடிவங்களை மாற்றிக்கொள்ளலாம் என்பதும் இந்த அலங்கார
விளக்குகளின் இன்னொரு சிறப்பு.
கட்டிட உள் அலங்கார வடிவமைப்பு தொழிலில் இருக்கும் இரண்டு நண்பர்களின்
முயற்சியில் இந்த விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. எலக்ட்ரிக்கல்
இன்ஜினியரிங் படித்த ரகோத்தமனும், மார்கெட்டிங் துறையில் எம்பிஏ படித்துள்ள
கோபியும் சேர்ந்து இதற்கான முயற்சி மற்றும் விற்பனையை மேற்கொண்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் இதுபோன்ற விளக்கை பார்த்தது இவர்களுக்கான தொழில் உந்துதலாக
இருந்தது என்கின்றனர். தற்போது நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்து
வருவதாகவும், அடுத்ததாக ஓட்டல்கள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு விற்பனை
செய்யும் திட்டத்தோடு இயங்கி வருவதாகவும் சொல்கின்றனர் இந்த இளைஞர்கள்.
இந்த அலங்கார விளக்குகள் ரூ.250 முதல் ரூ.1,500 வரையிலாக விலையில்
கிடைக்கிறது. மூலப்பொருட்களை மும்பை மற்றும் குஜராத்தில் இருந்து
வாங்குகின்றனர். வித்தியாசமாக சிந்தித்தால் உள்ளூர் வாய்ப்புகளே உங்களுக்கு
வெற்றியை தேடிதரும் என்பதற்கு இந்த விளக்குகளே சாட்சி.
No comments:
Post a Comment