சைனஸ் பிரச்சினையைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். மூக்கிருந்தால் ஜலதோஷம்
வரத்தான் செய்யும். பலரும் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அதற்குப் பிறகும்
தும்மல் வருகிறது என்று சொல்கிறார்கள். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய
வேண்டியதில்லை. நாம் நமது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக்கொண்டால்
போதும். முதலில் நன்றாக சுவாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பிராணாயாமம் செய்ய
வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும். நமது ஒவ்வாமைக்கு எது காரணமாக
இருக்கிறதோ, அதைத் தவிர்க்க வேண்டும். பாலில் சிறிது திப்பிலி, மஞ்சள்,
தூதுவளை சூரணம் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம். இந்து காந்தம் கஷாயம்,
அமிர்தா ரஜன்யாதி கஷாயம், இந்து காந்தக் கிருதம், வியோஷாதி வடகம்
போன்றவற்றைச் சாப்பிடலாம். நீர்க்கோவை மாத்திரையை அரைத்து மூக்கைச்
சுற்றிப் பற்று (பத்து) போடலாம்.
ராஸ்னாதி தூமம் என்று சொல்லக்கூடிய தூம வர்த்தி புகையை மூக்கினால் இழுத்து,
வாயால் வெளிவிட்டால் மூக்கில் இருக்கிற அழுக்குகள் எல்லாம் சேர்ந்து
வெளியேறும். அதன் பிறகு தும்பைத் தைலத்தைக் கொண்டு மூக்கில் நஸ்யம்
செய்யலாம். இவ்வாறு செய்வதால் இந்த சுவாச நாளங்களில் பிராண சக்தியானது
எல்லா இடங்களுக்கும் போய்ச் சேரும். கெட்ட நீர் வெளியே வரும். சதை கரையும்.
இதன் பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சியவனபிராசம், ஷட்பல கிருதம்
போன்ற மருந்துகளெல்லாம் உள்ளன. இதற்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க
முடியும். உணவில் கபத்தை அதிகரிக்கும் இனிப்புப் பண்டங்கள், தயிர், மாவுப்
பண்டங்கள், குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.consult doctor before having any medicine
No comments:
Post a Comment