மண் மாரி பொழிவில் இருந்து மக்களைக் காத்த உறையூர் வெக்காளியம்மன்,
இன்றைக்கு பக்தர்களுக்கு பிரார்த்தனைச் சீட்டு மூலம் தீர்வு அளிப்பதாக
பக்தர்கள் நம்புகிறார்கள்.மக்கள் வீடிழந்து வெட்டவெளியில் வாழ்ந்தனர். மக்களின் துயரம் கண்ட
வெக்காளியம்மன், நாட்டில் வாழும் “அனைவருக்கும் வீடு கிடைக்கும்வரை நான்
வெட்ட வெளியிலேயே வீற்றிருப்பேன்” என்று கூறியதாகக் கோயில் வரலாறு
கூறுகிறது.இன்றும் நம் நாட்டில் பலர் வீடின்றி வசிப்பதால், அம்மனின் உறுதிமொழி
நிறைவேறவில்லை. அதனால் வெக்காளியம்மன் இன்றைக்கும் வானத்தையே கூரையாகக்
கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மண் மாரி பொழிவில் இருந்து காத்த அம்மனிடம் சரணடைந்த மக்கள், அப்போது முதல்
தங்களுக்கு நேரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, துண்டு
சீட்டில் எழுதி அம்மன் பாதத்தில் வைத்து வணங்குவார்கள். பிறகு கருவறைக்கு
நேர் எதிரில் இருக்கும் சூலத்தில் அதைக் கட்டிவிடுவது வழக்கமாக
இருந்துள்ளது. குடும்பப் பிரச்சினை, தொழில் நஷ்டம், கடன் தொல்லை, கல்வி, நோய்ன்றி
நலமுடன் வாழ எனப் பல்வேறு கோரிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க, இதுபோன்ற
பிரார்த்தனைக் கடிதங்கள் கட்டுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக இருக்கும்
வகையில் பிரார்த்தனைச் சீட்டு என்ற பெயரில் அச்சடித்து வழங்குகின்றனர். ஒரு
நாளைக்கு குறைந்தது 300 சீட்டுகள் வரை வழங்கும் கோயில் நிர்வாகம்,
கடந்தாண்டு மட்டும் 80 ஆயிரம் பிரார்த்தனைச் சீட்டுகளை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment