ஓர் ஆசிரியர் தொழில் முனைவர் ஆனார்: சீரா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ள ராகவ கௌடா, தனது
இயந்திரத்தை இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும்
அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று
விட்ட ராகவ கௌடா, பால் கறவை இயந்திர உற்பத்தியிலும், விற்பனையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கையால் இயக்கக் கூடிய இயந்திரம் ரூ.15
ஆயிரத்துக்கும், மின் சாரத்தால் இயங்கும் கருவி ரூ.31 ஆயிரத்துக்கும்
விற்பனை செய்கிறார்கள். தொடர்புக்கு: 099942 10295, 094499 05944.
வாழையின் தரத்தை உயர்த்த இலைவழி நுண்ணூட்டங்கள் முக்கனிகளில் ஒன்றான வாழையானது தமிழகம் முழுவதும் சாகுபடி செய்யும் பழப்
பயிர்களில் மிக முக்கியமானது.
நுண்ணூட்டங்களான மக்னீசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் போரான் போன்றவை வாழையின் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. தண்டுகள் மெலிந்து
காணப்படுதல், நுனி இலைகள் வெளுத்து காணப்படுதல், காய்கள் குட்டையாகவும்
வளைந்தும் ஒல்லியாகவும் உருவாகுதல், பூ மற்றும் இலைகள் உருவாவது தாமதமாதல்,
பழங்கள் திரட்சி அடையாமல் காணப்படுதல் போன்றவை இத்தகைய நுண்ணூட்டப்
பற்றாக்குறையால் பயிரில் ஏற்படும் அறிகுறிகளாகும். இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமானது இத்தகைய நுண்ணூட்டங்கள் ஒன்றாக
கிடைக்கும்வகையில் வாழைக்கென சிறப்பு நுண்ணூட்ட கலவையினை
கண்டுபிடித்துள்ளது. இந்தக் கலவையில் 50 கிராம் எடுத்துக்கொண்டு 10 லிட்டர்
தண்ணீரில் கரைக்க வேண்டும். அதில் ஏதேனும் ஒரு ஒட்டும் திரவம் மற்றும் 2
எலுமிச்சை பழத்தின் சாறுகளை சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை வாழையின் இலைகளில் தெளிக்க வேண்டும். 5-வது மாதம் தொடங்கி
10-வது மாதம் வரை மாதம் ஒருமுறை இதனை தெளிக்கலாம். இதனால் நுண்ணூட்டக்
குறைபாடுகள் விரைவில் களையப்படுவதுடன் அதிக எடை கொண்ட தார்கள் உற்பத்தியாகி
அறுவடைக்கு கிடைக்கும். மேலும், எல்லா மரங்களிலும் ஒரே நேரத்தில் தார்களை
அறுவடை செய்ய முடியும். இத்தகைய நுண்ணூட்டக் கலவையினை பயன்படுத்துவதன்
மூலம் தரமான வாழைத் தார்கள் கிடைக்கின்றன. தொடர்புக்கு: 98653 66075
http://tamil.thehindu.com/tamilnadu/
கொசு ஒழிக்கும் நொச்சி செடி வேண்டுமா? - மாநகராட்சி இலவசமாக வழங்குகிறது
வீடுகளிலும் தெருக்களிலும் நொச்சி செடி வளர்க்க விரும்புவோருக்கு செடிகளை இலவசமாக வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த செடிகளை வார்டு அலுவலகங்கள் மூலமாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும். மழைக் காலம் என்பதால் நொச்சி செடி வேகமாக வளரும். எனவே, தேவை பற்றிய விவரத்தை மக்கள் விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நொச்சி செடிகள் வேண்டுவோர் mayor@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் அல்லது 044 25619300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.http://tamil.thehindu.com/tamilnadu/
No comments:
Post a Comment