பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல் உத்தி
தாராளமயக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்று, மின்சாரத்தைத் தனியார்மயமாக்குவது. அதன் ஓர் அம்சமே சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை இந்தியாவில் புகுத்தியது. 1980-களின் இறுதியில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் தொடங்கிய சூரிய மின் உற்பத்தித் திட்டம், 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தோல்வி யடைந்தன. தொழிலில் முன்னணி யில் இருந்த வால்மார்ட் - ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம், மான்சாண்டோ எலெக்ட்ரானிக் மெட்டீரியல்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை கடும் பின்னடைவைச் சந்தித்தன.
சுற்றுச்சூழல் சிக்கல்கள் என்ன?
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா. காந்தி சொல்கிறார், “சூரிய ஒளி மின் உற்பத்தி வேண்டாம் என்று சொல்ல வில்லை. தற்போதைய சூரிய மின் உற்பத்தித் தொழில் நுட்பம் ஆபத்தானது. மேலும், அது 2020-க்குள் காலாவதியாகிவிடும். ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், சூரிய ஒளியிலிருந்து ஒரு தாவரம் சக்தியைப் பெறும் இயற்கையான தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான சூரிய மின் உற்பத்தி குறித்து ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. ஆனால், இங்கு பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுவருகின்றனர். இது நஷ்டத்தையே ஏற்படுத்தும். சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படும் வேதிப் பொருளான கேட்மியம் டெல்லுரைடு வெளிப்படுத்தும் கதிர்வீச்சால் காசநோய், சில வகைப் புற்றுநோய்கள், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் நோய்கள் ஏற்படும். பல்வேறு மேற்கத்திய நாடுகள் சூரிய மின் உற்பத்திக்குத் தடைவிதித்துவிட்டன. ஜெர்மனியில் கேட்மியம் டெல்லுரைடைப் பயன்படுத்தக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. ஜப்பானில் பெரும் பாதிப்பை உண்டாக்கிய ‘இட்டாய் இட்டாய்' நோய்க்குக் காரணம் கேட்மியம். மெல்லிய ஃபிலிம் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் செலினியம் என்னும் வேதிப் பொருள் புற்றுநோய்களை உருவாக்கும். இதனைப் பல நாடுகள் தடைசெய்துள்ளன.”
பற்றாக்குறை நிலவும் இந்த நேரத்தில், கூடுதல் மின் உற்பத்தி மிகவும் அத்தியாவசியம்தான். ஆனால், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. என்ன செய்யப்போகிறோம் நாம்?
- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@kslmedia.in
thanks to http://tamil.thehindu.com/opinion/columnsயாரிடம் சூரியசக்தி மின் உற்பத்தி உபகரணங்களை வாங்குவது? பட்டியல் வெளியிட்டது தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை
வீட்டுக் கூரை மீது அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு அமைப்பு.
தமிழக முதல்வரின் மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தில், அனுமதிக்கப்பட்ட சூரியசக்தி உபகரணம் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) வெளியிட்டுள்ளது.
மரபுசாரா எரிசக்தியான சூரிய சக்தி, காற்றாலை மற்றும் உயிரித் தொழில்நுட்ப மின்சக்தியை அதி கரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழகத்தில் புதிய சூரியசக்தி மின் கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, மேற்கூரை சூரியசக்தி திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் ஒரு கிலோவாட் சூரிய மின்சக்தி திட்டத்துக்கு, மத்திய அரசு 30 சதவீதம் மானியம் வழங்கும். இத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியத்தை தமிழக அரசு வழங்கும்.
அதாவது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோவாட் சூரியசக்தி திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ.30 ஆயிரமும், தமிழக அரசு ரூ.20 ஆயிரமும் மானியமாக வழங்கும்.
இந்த திட்டத்தின் கீழ், சூரியசக்தி உபகரணங்கள் அமைக்கும் நிறுவனங்களை தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை தேர்ந்தெடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் தகுதியான நிறுவனங்களை எரிசக்தி முகமை தேர்வு செய்து, அதற்கான பட்டியலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
மொத்தம் எட்டு விதமான பிரிவுகளில் இந்த நிறுவனங்களின் பெயர்கள், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு கிலோவாட், இரண்டு கிலோவாட், ஐந்து கிலோவாட் மற்றும் 10 கிலோவாட் ஆகியவற்றுக்கான உபகரணங்களை ஐந்து வருட வாரண்டி மற்றும் ஐந்தாண்டு பராமரிப்புடன் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை, www.teda.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.21/02/2014
No comments:
Post a Comment