கருநிறக் காகம் ஏறி
காசினி தன்னை காக்கும் ஒரு பெரும் கிரகமான ஒப்பற்ற சனியே! உந்தன் அருள் கேட்டு வணங்குகின்றேன் ஆதரித் தெம்மை காப்பாய்! பொருளோடு பொன்னை அள்ளி பூவுலகில் எமக்குத் தாராய்! --------- (1) |
சனியெனும் கிழமை கொண்டாய்
சங்கடம் விலக வைப்பாய் அணிதிகழ் அனுஷம் , பூசம் ஆன்றதோர் உத்ரட்டாதி. இனிதே உன் விண்மீ னாகும் எழில் நீலா மனைவியாவாள் பணியாக உனக்கு ஆண்டு பத்தொன்போதென்று சொல்வார்! --------- (5) |
ஏழரை சனியாய் வந்தும்.
எட்டினில் இடம் பிடித்தும். கோளாறு நான்கில் தந்தும். கொண்டதோர் கண்ட கத்தில் ஏழினில் நின்ற போதும் இன்னல்கள் தாரா வண்ணம் ஞாலட்தில் எம்மைக் காக்க நம்பியே தொழுகின்றேன் நான்! --------- (2) |
குளிகனை மகனாய் பெற்றாய்!
குறைகளை அகல வைப்பாய்! எழிலான சூரியன் உன் இணையற்ற தந்தை யாவார் விழிபார்த்து பிடித்து கொள்வாய்! விநாயகர், அனுமன் தன்னை தொழுதாலோ விலகிச் செல்வாய் துணையாகி அருளை தாராய்! --------- (6) |
பன்னிறு ராசி கட்கும்
பாரினில் நன்மை கிட்ட எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறி வழிகள் காட்ட எண்ணெயில் குளிக்கும் நல்ல ஈசனே உனைத்துதித்தேன் புண்ணியம் எனக்கு தந்தே புகழ்கூட்ட வேண்டும் நீயே! --------- (3) |
அன்னதானத்தின் மீது
அளவிலா பிரியம் வைத்த மன்னனே! சனியே! உன்னை மனதார போற்றுகின்றோம்! உன்னையே சரணடைந்தோம்! உயர்வெல்லாம் எமக்குத்தந்தே. மன்னர் போல் வாழ்வதற்கே மணியான வழிவகுப்பாய்! --------- (7) |
கருப்பினில் ஆடை ஏற்றாய்!
காகத்தில் ஏறி நின்றாய்! இரும்பினை உலோகமாக்கி எள்தனில் பிரியம் வைத்தாய்! அரும்பினில் நீல வண்ணம் அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்! பெரும் பொருள் வழங்கும் ஈசா பேரருள் தருக நீயே! --------- (4) |
மந்தனாம் காரி , நீலா
மணியான மகர வாசா! தந்ததோர் கவசம் கேட்டே சனியென்னும் எங்கள் ஈசா வந்திடும் துயரம் நீக்கு வாழ்வினை வசந்தம் ஆக்கு! எந்த நாள் வந்த போதும் இனிய நாள் ஆக மாற்று! --------- (8) |
ஸ்ரீ சனீஸ்வர பகவான் மந்த்ராஸ்
| |
மோல மந்த்ரா :
ஹரிம் ஸ்ரீம் க்ரஹா சக்ர வர்தினே சனிச்சராய கலீம் இம் சஹா ஸ்வாஹா
புரானிக் மந்த்ரா :
நீலாஞ்சன சமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ராஜம் சஹாயா மார்தாண்ட சம்பூதம் தம நமாமி ஷனய்ஷ்ச்சரம்
வேதிக் மந்த்ரா :
ஓம் சாம் நோ தேவீர் அபிஷ்டாய ஆபோ பவந்து பீடையே சாம் யோரபிய் சரவண்டு நாஹ் |
சனி காயத்ரி :
கஹட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மண்டாஹ் பிரசொடையத்
அல்டேர்ணடே காயத்ரி :
சனிச்சராய வித்மஹி சாய புத்ராய தேமாஹி தானோ மந்த பிரசொடையத் |
Sunday, May 11, 2014
சந்தோசத்தை நாளும் வழங்கும் சனி பகவான் கவசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment