ராமானுஜர் அமர்ந்து யோகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. வேடந்தாங்கல் செல்லும் வழியில் உள்ள காஞ்சீபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஅம்ருதபுரி ஸ்ரீஇராமானுஜ யோகவனம்.
பிரம்மாண்ட விநாயகரின் உடலில் தெளிவாகத் தெரியும் வண்ணம் இங்கு நவக்கிரக நாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
அனைவரும் தம் வாழ்நாளில் கஜகேசரி யோகம் பெற, நரசிம்மருடன் கூடிய இந்த விநாயகரை வணங்கலாம். கஜம் என்றால் யானை; கேசரி என்றால் சிங்கம். யானை பொறுமைக்கும் பலத்துக்கும் உதாரணம். சிங்கம் அஞ்சாமையின் அடையாளம். பொறுமை, பலம், வீரம் இருந்தால் அதுவே கஜகேசரி யோகம் என்பார்கள். இதனைப் பெற இந்த நவகிரக விநாயகரை, நரசிம்மர் மற்றும் நாகருடன் வழிபடலாம் என்கிறார்
இங்கு ராமரின் வில் போலவே ஹோம குண்டம் அமைத்து ஹோமம், திருமஞ்சனம் ஆகியவை நடைபெறும். இந்த சன்னதியில் 108 சாலிக்கிராமம் இருக்கிறது. இவற்றை வணங்கினால் 108 திவ்விய தேசப் பெருமாளை ஒரே நேரத்தில் வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பதினெண் சித்தர்கள்:
ஆதிசேஷன் அம்சமாக லட்மணன், ராமானுஜரைச் சொல்வது போல் பதஞ்சலி முனிவரும் அவரது அம்சம் என்று சொல்கிறார்கள். பதஞ்சலி முனிவர் உட்பட பதினெண் சித்தர்களும் இந்த ஸ்ரீ அம்ருதபுரி ஸ்ரீ ராமானுஜ யோகவன தியான மண்டபம் எனும் வேதாந்த, சித்தாந்த, ஸர்வ சமய சமரச சன்மார்க்க சமுதாயக் கூடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சித்தர்கள் இம்மண்டபத்தை வலம் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. பக்தர்கள் ஜாதக ரீதியான பரிகாரங்கள் எடுபடாதபோதும், தீராத நோய் தீருவதற்காகவும் இந்த பிரதான பதினெண் சித்தர்களை நம்பிக்கையுடன் வணங்குகிறார்கள்.
மற்றொரு விசேஷம் என்னவெனில் ஒரே கல்லில் முன்னும் பின்னுமாக அமைந்துள்ள ஆஞ்சனேய, கருட சிலாரூபம்.
சுந்தரேசுவரர் கோய நெய்க்குப்பை- பாவ விமோசனம் தரும் தலம்
பந்தநல்லூர் என்று தற்போது அழைக்கப்படும் பந்தனை நல்லூர் ஆகும். அந்தப் பால் அங்கிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கும் நெய்க்குப்பை தலம் வரை ஓடிவந்து நெய்யாக மாறியது.தீர்த்தம் சூரிய தீர்த்தம் தலவிருட்சம் பவளமல்லி
No comments:
Post a Comment