பல நு}று அடிகள் நீண்டு காணப்படும் அதிசய குகை கோவில்!!
ஒரு வித்தியாசமான குகை கோவிலை பற்றி பார்ப்போம்....
300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீருக்கு இடையில் கோவில் கொண்டுள்ளார்.

இந்த ஜர்னி நரசிம்மர் குகை கோவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சு+ழ மலையில் உள்ளது. இக்கோவிலில் கோடைக் காலத்திலும் கூட மார்பளவு தண்ணீர் காணப்படும். ஒருபோதும் வறண்டு போவதில்லை.

இங்குள்ள நரசிம்மரைத் தரிசிக்க வேண்டுமெனில் குகைக்குள் மார்பளவு தண்ணீரில் நடந்து செல்லவேண்டும்.
இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. இந்த தண்ணீரில் பல மூலிகை சக்திகள் இருப்பதால் இதில் நடந்து சென்றால் தீராத பல நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
குகையின் முடிவில் சிவலிங்கமும், நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றினார்.
அதேசமயம் புராணத்தில் பக்தன் பிரகலாதனின் பக்தியை நிரூபிக்க வந்த நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர், ஜலசு+ரன் என்னும் அரக்கனையும் வதம் செய்ய வந்தார். அந்த அசுரனோ ஒரு சிவ பக்தன் என்பதால், இந்த குகைக்குள் தான் தவம் செய்து சிவனை வழிபட்டார். தேடி வந்து ஜலசு+ரனை வதம் செய்தார்.
பின்னர், இங்குள்ள சிவ பெருமானின் பாதத்திற்கு அபிஷேகம் செய்யும் ஜலமாக (தண்ணீராக) மாறி ஊற்றெடுத்துள்ளார். மேலும், அந்த அசுரனின் வேண்டுதலுக்கு இணங்க, நரசிம்மர் அங்கேயே தங்கி விட்டார்.
No comments:
Post a Comment