Saturday, January 6, 2018

தண்ணீரை சுத்திகரிக்கும் இயற்கை முறைகள் !!


'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
  தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு நிறைய வழிகள் உள்ளன என்று அனைவரும் கூறுவார்கள். அதில் சிலர் தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது, பில்டர் செய்யக் கூடாது, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் கூறுவார்கள்.

வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேள்வி உங்கள் மனதில் எழும். சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே குடிக்கலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உலகத்திலேயே மிகச்சிறந்த தடுப்பு+சி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.

மேலும், குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது? தண்ணீரில் தான் சாக்கடை நீர் கலந்து வருகிறதே, இதை எப்படி உபயோகப்படுத்துவது என்று கேட்பார்கள். சில ஊர்களில் சாயப்பட்டறை இருக்கிறது, தண்ணீர் கெட்டிருக்கிறது என்று ஒரு வேளை நீங்கள் நினைத்தால் உங்களது மனத் திருப்திக்காக சில காரியங்களைச் செய்யலாம். அதாவது, தண்ணீரைக் கீழ்க்கண்ட இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி :

மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த றுயுவுநுசு குஐடுவுநுசு மண் பானை ஆகும்.

வாழைப்பழத்தோல் மூலம் சுத்தம் செய்யலாம் :

நாம் சாப்பிடும் சாதாரண வாழைப்பழத்தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகுவெளியே எடுத்துவிட்டு உபயோகப்படுத்தலாம்.

வாழைப்பழத்தோலை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும். எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால் வடிகட்டலாம் :

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் தண்ணீரை பில்டர் செய்தால் அதாவது, வடி கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து நோய்களை உண்டுசெய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல் பு+ர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தேவைப்பட்டால் இந்த முறையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலம் சுத்தப்படுத்தலாம் :

செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பதன் மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது. 

மேலும், அதில் உள்ள கெட்டப் பொருள் அழிக்கப்படுகிறது. எனவே செம்பு என்ற உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன்படுத்தலாம்.

எனவே, மேலே கூறப்பட்டுள்ள வகையில் தண்ணீரை சுத்தப்படுத்தி உபயோகித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம். 

No comments:

Post a Comment