Sunday, January 14, 2018

தேக்கு மரத்துக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

02- jan 2018 திருச்சூர்: கேரளாவின், கட்டுமானத்திற்கு சிறந்த, தரமான, நீலாம்பூர் தேக்கு மரத்துக்கு,
'புவிசார் குறியீடு' வழங்கப்பட்டு உள்ளது. கேரளாவில், நீலாம்பூர் தேக்கு மர வளர்ப்பை சார்ந்து,
10 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளனர். அளவு, நிறம் மற்றும் நீண்ட
காலத்திற்கு உறுதியுடன் இருக்கும் தன்மையால், இந்த வகை மரங்கள் கட்டுமானத்திற்கு பயன்ப
-டுத்தப்படுகின்றன. இம்மரத்திற்கு, புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், அது 
வழங்கப்பட்டு உள்ளதாக, கேரள வேளாண் பல்கலைக் கழகத்திற்கு, சென்னையில் உள்ள, புவிசார் 
குறியீடு பதிவு அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது. காட்டில் வளரும் மரத்திற்கு புவிசார் 
குறியீடு பெறுவது, இதுவே முதன்முறை. இதன் மூலம், நீலாம்பூர் தேக்கு மரங்களை கடத்தலில்
இருந்து பாதுகாப்பதுடன், போலிகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment