These temples erase family sabam/sin.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று
நினைப்பார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே பிறந்தது முதல் இறப்பு வரை செல்வச்
செழிப்புடன் வாழ்கிறார்கள். ஒரு சிலர் பிறந்தது முதல் இறப்பு வரை
கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் சிறிது காலம் செல்வ
செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கையில் திடீரென ஏழ்மை நிலைக்குச்
சென்றுவிடுவர். ஒரு சிலர் விவரம் தெரிந்தது முதல் வறுமையிலேயே
வாழ்கிறார்கள்.
மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, தொழில் அமையாமை, தொழிலில் நஷ்டம், வேலையில் நிம்மதியின்மை, சரியான வேலை கிடைக்காத நிலை, வேலை இருந்தும் போதிய வருமானம் இல்லாத நிலை, குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமையின்மை, திருமணத்திற்குப்பின் தம்பதியினர் இருவரும் பிரிந்து செல்லுதல், எடுத்த செயல்கள் அனைத்திலும் தடை, தாமதம் ஏற்படுதல், உற்றார், உறவினர்களுடன் பகை ஏற்படுதல், குழந்தைகள் கல்வியில் தடை ஏற்படுதல், சரியான பருவத்தில் திருமணம் நடக்காமல் இருப்பது போன்ற கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தால் தலைமுறை சாபம் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
வாழ்வில் அடிக்கடி கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களின் முன்னோர்கள் மற்றவர்களுக்கு கெடுதல் செய்து வாழ்ந்துள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னோர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கஷ்டத்தை தாங்க முடியாமல் இறைவனிடம் முறையிடுவார்கள். இறைவன் முன்னோர்கள் செய்த பாவத்திற்காக தண்டனையை அவர்களின் சந்ததிகளுக்கு தக்க சமயத்தில் வழங்குவார்.
முன்னோர் செய்த பாவமானது தலைமுறை, தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். முன்னோர்கள் செய்த பாவம் சந்ததிகளைப் பாதிக்கும். செல்வ செழிப்புடன் வாழும் ஒருவர் திடீரென ஏழையாகிவிட்டால் அவருக்கு தலைமுறை சாபம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தலைமுறை சாபம் இருந்தால் அடிக்கடி கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். கஷ்டங்கள் நீங்க முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் பிரம்மஹத்தி தோஷப் பரிகாரங்களை செய்ய வேண்டும்.
தலைமுறை சாபத்திலிருந்து விடுபட திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் பிரம்மஹத்தி தோஷப் பரிகாரங்களை செய்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து அடிக்கடி கஷ்டங்களை சந்தித்து வருபவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று தோஷப் பரிகாரங்களை செய்து கொள்வதன்மூலம் தலைமுறை சாபம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறலாம்.